Thursday, January 7, 2016

HNDA மாணவர்களது போராட்டம்

6 நவம்பர் 2015 12:58 PM

HNDA மாணவர்களது போராட்டம் பற்றியும் அவர்களது கோரிக்கைகளின் நியாயம் பற்றியும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் நேற்றைய சமூக விஞ்ஞான கற்கைவட்டக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

HNDA மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்ட இக் கலந்துரையாடல் மிகவும் ஆழமானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் அமைந்தது.

பெரும்பாலான ஊடகங்கள் எவ்வளவு தூரம் கல்வி முதலாளிகளுக்கும் அவர்களது தரகர்களான அரசியல்வாதிகளுக்கும் அவர்தம் ஏவல் நாய்களான காவற்துறைக்கும் வால்பிடிக்கின்றன என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.


செய்திகளும் பல ஆய்வாளர்களும் சொல்லும் கதைகளுக்கும் மாணவர் சொல்லும் உண்மைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு. 550 நாட்களாக இம்மாணவர்கள் எத்தனையோ வழிகளில் தமதுகோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். எதுவுமே கண்டுகொள்ளப்படவில்லை. கடைசியில் இரத்தம் சிந்த அடிவாங்கித்தான் தமது நியாயங்களைக் காதுகொடுத்துக் கேட்கவாவது வைக்கவேண்டும் என்ற நிலை வரை தள்ளப்படுவதற்கு யார் காரணம்?

தமது உடனடிக் கோரிக்கைகளுக்கு அப்பால், கல்வி தனியார் மயமாவதை அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்ற விளக்கமும் நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் அனுபவங்களுடனும் விளக்கப்பட்டபோது அவர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தேவை எமக்கு அதிகமதிகம் உள்ளது என்பதை உணர முடிகிறது.

உரையாடலின் முழுமையான பொழிப்பு அடுத்தவாரம் சமூக விஞ்ஞான கற்கை வட்ட செய்தி மடலில் வெளியாகும்.

No comments:

Post a Comment