1 ஜனவரி 2016 02:11 PM
2015 பிறந்த நேரம் என்ன செய்துகொண்டிருந்தேன்? 36,000 அடி உயரத்தில்
பறந்தபடி, இனிப்புக்குப் பதிலாக நட்பைக் கலந்து விமானப் பெண் கொடுத்த
கோப்பியையும் வாழ்த்தையும் சுவைத்துக்கொண்டிருந்தேன்.
2016 பிறந்த
நேரம் என்ன செய்தேன்? நீண்டநாட்களாகத் தள்ளிப்போட்டு வந்த ஒரு முக்கியமான
வேலையைச் செய்து முடித்தேன். அதாவது, சிம்புதேவனின் "புலி" படத்தினைப்
பார்த்து முடித்தேன்.. :)
ஹன்சிகாவுடனான அந்தப்பாடலைத்தவிர வேறெந்தக் காட்சியையும் ஓடவிடாது ஆர்வத்துடன் பார்த்தேன். அட.. படம் நல்லாத்தானே இருக்கு...
ஏன் இந்தப்படம் ஆட்களுக்குப் பிடிக்கவில்லை என்று யோசிக்கிறேன். அவ்வளவு விரைவாகவே சிறுபராயத்தை ஆட்கள் மறந்துவிடுகிறார்களா?
பிற்குறிப்பு : புலிகேசி படத்தின் முடிவைப்பார்த்தபோது ஏற்பட்ட அதே
ஏமாற்றம் புலியின் கதைமுடிவிலும் ஏற்பட்டது. கொடுமைக்கார மன்னரின் ஆட்சியை
முடிவுக்குக் கொண்டுவரும் கதாநாயகர் ஏன் மன்னராட்சியை முடிவுக்குக்
கொண்டுவந்து அதன் கொடுமையை விளக்கி மக்களாட்சியை உருவாக்குவது போலக்
காண்பிக்கக்கூடாது? ஏன் மன்னர் பரம்பரையின் இளவரசர் ஒருவரே மீண்டும்
ஆட்சிப் பொறுப்பேற்கவேண்டும்? கொடுங்கோலர்கள் உருவாவதற்கு மன்னராட்சி
என்கிற கட்டகம்(System) தான் காரணம் என்பதை பொதுமக்களுக்கு விளக்க ஒரு நல்ல
வாய்ப்பல்லவா இது? கற்பனைக்கதை ஒன்றில் கிடைக்கும் இத்தகைய அருமையான
வாய்ப்பினைச் சிம்புதேவன் ஒவ்வொருமுறையும் தவறவிடுவதைக் கண்டு
வருந்துகிறேன்.
No comments:
Post a Comment