28 அக்டோபர் 2015 12:54 AM
இலங்கையின் நவீன வரலாற்றில் 80ம் ஆண்டுவரை இனவாதத்தினதும் இனப்பகையினதும்
தொடக்கப்புள்ளிகளாகவும் முக்கிய நிகழ்ச்சிகளாகவும் உள்ள ஒவ்வொன்றையும்
பட்டியலிடுங்கள்.
இலங்கையில் நடந்த வெற்றிகரமான மிகப்பெரிய
இடதுசாரி-தொழிற்சங்கப் போராட்டங்கள், மக்கள் எழுச்சிகள், ஆளும்
வர்க்கத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்த இடதுசாரிகளின் வெற்றிகளைக்
காலவாரியாகப் பட்டியலிடுங்கள்.
ஒன்றுபட்ட மக்கள் எழுச்சிகளும் பாரிய தொழிற்சங்க
நடவடிக்கைகளும் நடந்த நாட்களை உடனடுத்து வரும் காலப்பகுதியிலே இனப்பகை
மூட்டும் இனவாத நிகழ்வுகள் செயற்படுத்தப்பட்டிருப்பதையும்
கட்டவிழ்க்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
இது தற்செயலான ஒன்றா,
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் எழுந்தமானமாக அப்படி அமைந்துவிட்டதா, அல்லது
உண்மையிலேயே இப்படியொரு தொடர்பு உள்ளதா?
வரலாற்றின் இந்த முக்கியமான தொடர்பு எம்மிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டதா?
இதுபற்றி ஆய்வுகள் செய்யவேண்டிய தேவை உள்ளதாகவே உணர்கிறேன்.
Muralitharan Mayuran Mauran இன்னொரு
இனத்தின் மீதான பகையுணர்வையும் சந்தேகத்தையும் உருவாக்கும் விதமாகவும்,
இன்னொரு இனத்தின் மீது தன் இனத்தின் பெயரால் தாக்குதல் தொடுக்கும்
விதமாகவும் அமையும் செயற்பாடுகளைத்தான் இங்கே இனவாதம் என்று
பயன்படுத்தினேன்.
நல்ல எடுத்துக்காட்டு மலையாளிகள் மீதான இனவாத உணர்வும் தாக்குதல்களும்
Ilankai Velan இங்கு
பெருந்தேசியவாதம் என்பதை பண்புருவில் இனவாதமாக குறுக்கிவிட முடியுமா? அதே
போல அதன் எதிர்வினை என்பது தரகு - குட்டி முதலாளத்துவ வர்க்கத்தால்
முன்வைக்கப்படும் குறுந்தேசிவாதத்தினை அவ்வாறு வகைப்படுத்த முடியுமா?
Muralitharan Mayuran Mauran இலங்கையில்
வேலைவாய்ப்பு நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் உச்சத்தில் இருந்த
வேளை, அரசு மீதான கோபம் மக்களிடையே பெருகி வந்துகொண்டிருந்த கொதிநிலையில்
தான், சிங்களவர்களின் வேலைவாய்ப்பினை மலையாளிகளே பறிக்கிறார்கள் என்ற
முழக்கம் முன்வைக்கப்படுகிறது.
இது சாதாரண மக்களிடமிருந்து எழுந்த முழக்கம் அல்ல.
படிப்படியாக பரப்புரைகள் மூலம் இது சாதாரண மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.
Muralitharan Mayuran Mauran பெருந்தேசியவாதத்தை
இனவாதமாகக் குறுக்கும் நோக்கம் இந்தப்பதிவிற்கு இல்லை. வரலாற்றில்
இனவாதம் எப்படி வர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் கருவியாகப்
பயன்பட்டிருக்கிறது என்பது பற்றித் தேடச்சொல்வதே இதன் நோக்கம்.
No comments:
Post a Comment