இன்று கார்த்திகை விளக்குகளைக் கண்டபோது கடந்த பத்து ஆண்டுகளின் கார்த்திகை விளக்குகள் ஒட்டுமொத்தமாகக் கண்முன்னே வந்துபோயின.
இலங்கையில் புலிகளின் மீதும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும் அரசு நடத்திய
இறுதி ஆயுதப் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்த காலத்திலும் மிக மோசமான
சந்தேகமும் அடக்குமுறையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட
காலத்திலும் இக் கார்த்திகை விளக்குகள் பேசிய மொழியும் சுடர்ந்த ஒளியும்
வீரியம் மிக்கது.