கசாப் விவகாரத்தை ஓரமாக வைத்துவிட்டு தூக்குத் தண்டனையைத் தனியாக எடுத்துப் பார்ப்போம்.
நீதித்துறை சுயாதீனமாகவும் நீதியாகவும் உண்மையாகவும் நடந்துகொள்கிறதா, நடந்துகொள்ள முடிகிறதா?
கசாப் தூக்கிலிடப்பட்டதைக் கண்டிப்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளித்து தெளிவுபடுத்த வேண்டும்: 1.அலுவலகத்திலிருந்து விடு திரும்பிக் கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை இயந்திரத் துப்பாக்கி கொண்டு சுட்டுத் தள்ளியவருக்கு இவர்கள் எத்தகைய தண்டனை கொடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார்கள்? 2.தூக்கு தண்டனை கூடாதென்றால், ஆயுள் தண்டனையா? ஒருவரை ஆயுள் முழுக்கச் சிறையில் முடக்கி வைத்திருப்பது அவரைத் தூக்கிலிடுவதைவிடக் கொடுமையானது இல்லையா?3. அப்படி அவருக்கு என் (வரிப்) பணத்தில் ஆயுள் முழுக்க உச்ச பட்ச பாதுகாப்புக் கொடுத்து சோறு போட்டு வர வேண்டும் என்பது எனக்குக் (இந்தியக் குடிமக்களுக்கு) கொடுக்கப்படும் தண்டனை ஆகாதா?4. இவருக்கு தண்டனையே கொடுக்காமல் விடுதலை பண்ணிவிட வேண்டுமா?