யாழ்ப்பாணப்
பேச்சுத் தமிழில் "வருவினம்", "செய்வினம்", "போகினம்" என்பன போன்ற
பயன்பாடு பொதுவாகக் காணப்படுகிறது. வருவார்கள் என்ற சொல் "வருவினம்" என்று
எப்படி மருவ முடியும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறொரு
பயன்பாட்டினை நான் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் எங்குமே அறிந்ததுமில்லை.
எனது பிரதேசத்திலும் ஏனைய பகுதிகளிலும் "வருவாங்க" என்று வழங்குகிறது. இது
புரிந்துகொள்ளப்படக்கூடிய ஒரு மருவலாகும். நாங்கள் என்பது நாங்க என்று
மருவும். அதையொத்த மருவலே "வருவாங்க" என்பதில் இருக்கிறது.
Tuesday, October 29, 2013
கம்யூனிஸ்டுக்களும் சமப்பாலுறவும்
Ndpfront தனது வலைத்தளத்தில் இந்தக் கதையைப் பிரசுரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மைக்கேல் ஜாக்சனின் இறப்பின் பின் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் சமப்பால் உறவு என்பது பாலியல் வக்கிரம் என இரயாகரன் குறிப்பிட்டிருந்தார். ஏறத்தாழ அதே காலப்பகுதியில் சமூகப் பெறுமதி ஏதும் இல்லாததால் சமப்பாலுறவு எதிர்க்கப்படவேண்டியது என 'செங்கொடியின் சிறகுகள்' தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அவர்கள் இருவருக்கும் சமப்பாலுறவினை இடதுசாரிகளாகவும் மனிதர்களாகவும் நாமேன் ஆதரிக்க வேண்டும் என்பதனை விளக்கி ஒரு பதில் எழுத விரும்பினேன்.
ஆனால் அப்போது இலங்கையில் அரசு இறுதிப்போர் என்று சொல்லி ஓர் இனப்படுகொலையை நடத்தத்தொடங்கியது அது தொடர்பான உரையாடல்களில் சமப்பாலுறவாளர் தொடர்பாக எழுத நினைத்தது விடுபட்டுப் போய்விட்டது.

முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்
சில நாட்களுக்கு முன்னர் கம்யூனிசம் பற்றிய நீண்ட விவாதமொன்று எனது wall இல் போய்க்கொண்டிருந்தது. கம்யூனிசத்தை வெவ்வேறு விதமாக ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் அடங்கலாக பலரும் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலைத் தொடர்ச்சியாக அவதானித்ததில் நான் வந்தடைந்த முடிவு என்னவென்றால், முதலாளித்துவம் என்றால் என்ன என்பது பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது என்பதுதான்.
முதலாளித்துவத்தை ஆதரிப்பதாகக் கருதிக்கொண்டு பலர் சொன்ன கருத்துக்கள் முற்று முழுதாகவே முதலாளித்துவத்துக்கு எதிரானவை.
சோசலிசம், கம்யூனிசம் பற்றிய விமர்சனங்களுக்கு வருவதற்கு முன்னர் முதலாளித்துவத்தை விளங்கிக்கொள்வது அவசியமாயிருக்கிறது. இந்த உலகில் முதலாளித்துவம் ஏகப்பட்ட முற்போக்கான நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. முதலாளித்துவம் சினிமா வில்லன் மாதிரி ஒட்டுமொத்த வில்லத்தனம் அல்ல; அதற்கு முற்போக்கான நல்ல முகம் வரலாற்றில் இருந்துள்ளது. கைத்தொழில் புரட்சிக்காலத்தில் முதலாளித்துவம் இந்த உலகிற்குச் செய்த நன்மைகள் எவை; இந்த உலகில் முதலாளித்துவத்தால் தோற்கடிக்கப்பட்ட பொருளாதார முறைகள் எவை; முதலாளித்துவம் வந்து இல்லாதொழித்த பிற்போக்குத்தனங்கள் எவை என்பது பற்றி இங்கே உரையாடுவோம்.
இவ்வாறானதொரு உரையாடல் இல்லாமல் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் பற்றி உரையாடுவதென்பது பயனற்றது.
Subscribe to:
Comments (Atom)