எனது பிரதேசத்திலும் ஏனைய பகுதிகளிலும் "வருவாங்க" என்று வழங்குகிறது. இது புரிந்துகொள்ளப்படக்கூடிய ஒரு மருவலாகும். நாங்கள் என்பது நாங்க என்று மருவும். அதையொத்த மருவலே "வருவாங்க" என்பதில் இருக்கிறது.
இப்படி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது :
யாழ்ப்பாணத்தில் "அவர்கள்" என்பதை "அவை" என்றே சொல்வார்கள். உயர்திணையை அஃறிணையாக்கும் திரிபு இது.
அவர்கள் வந்தார்கள் என்பதை அஃறிணையாக்கினால் "அவை வந்தன" என்றே வரும். வந்தன என்பது வந்தினம் என்றும் வந்தினை என்றும் மருவக்கூடியதே.
Prunthaban Kanthakumar நாங்கள் = நான் + கள்
நீங்கள் = நீ + கள்
அவங்கள் = அவன் + கள் (இது சரியான தமிழ்ச் சொல் அல்ல. ஆனாலும் பிரித்துப் பார்த்தால் இப்படித்தான் வரும்).
எனவே யாழ்ப்பாணத்தவர்களுக்கு அவங்க என்று சொல்வது 'தனி ஆண் குழு' ஒன்றையே குறிக்கும். எனவே 'அவங்கள்' என்ற பொதுப் பாவனையும் இலக்கணப் பிழை தான். யாழில் இப்படிச் சொல்லாமல் 'அவை' என்று பலவின்பால் பாவிப்பார்கள் (அதுவும் இலக்கணப் பிழை தான்). யாழில் 'அவங்கள்' என்ற பிரயோகம் எப்போதும் 'ஆண்களையே' குறிக்கும். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைக் குறிக்க 'அவளவை' என்று சொல்வார்கள். அவள்கள் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு நேரே 'அவை' விகுதிக்குத் தாவி விட்டார்கள்
பழ றிச்சர்ட் உது, உவை, உவன் போன்ற வார்த்தை பயன்பாடுகள் சங்ககாலத்திற்கு உரியவை என்று எங்கோ வாசித்த நினைவிருக்கிறது Muralitharan Mauran அண்ணா
யாழ்ப்பாணத்தமிழில் நான் வியக்கும் நல்லதொரு விடயம் இந்த "உது" தான். இது மிகப்பழைய தமிழ்ச் சொல். அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள் என தொல்காப்பியமே வரையறுக்கிறது.
அது என்பது ஒப்பீட்டளவில் தூர இருப்பது. இது என்பது ஒப்பீட்டளவில் கிட்ட இருப்பது. அப்படியானால்"உது" என்பது என்ன?
பேசு பொருளின் அடிப்படையில் சொல்லுகிற விடயத்தின் மையப்பொருளாக இருப்பதே "உது" என்பதாகும்.
இது சிங்களத்தில் மிகச்சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஓர் இலக்கணம்.
அத்தன, மெத்தன என்பவற்றுக்கு மேலதிகமாக "எத்தன" என்றொன்று இருக்கிறதல்லவா? அது தான் இந்த "உங்கே"
Mathurahan Selvarajah Muralitharan Mauranஅதே போல் நிக்கிறாங்கள் என்பதும் ஆண்களையே குறிக்கும்..
அதற்கு சமாந்தரமான பெண்பால் பதமாக நிக்கிறாளவை என்பதை யாழ்ப்பாண உரைவழக்கில் அவதானித்து இருக்கிறேன்...
கிழக்கிலும் இதற்கு சமமாக நிக்கிரானுகள் என்ற ஆண் பதமொன்றை பயன்படுத்தக்கண்டு இருக்கிறேன்...
No comments:
Post a Comment