யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் கொழும்புக்கு
அடுத்தபடியான மிகப்பெரிய நகரம். 77ம் ஆண்டுக்குப்பிறகு இலங்கைக்குத் திறந்த
பொருளாதாரம் தீவிரமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதன் தாக்கம்
யாழ்ப்பாணத்துக்குள் போகிற வேளையில் உள்நாட்டுப் போர் வெடித்ததில் யாழ்ப்பாணம் எழுபதுகளின் இறுதியில் தனது திறந்த பொருளாதாரத்துக்குள் போகும் பயணத்தில் தேங்கிப்போய் நின்றுவிட்டது.
தொண்ணூறுகளுக்குப் பிறகு முற்றாகவே முற்றுகை நிலையில் தான் யாழ்ப்பாணம்
இருந்து வந்தது. போர் நடந்துகொண்டிருந்த வடக்குக் கிழக்குப் பகுதிகள்
அனைத்துக்கும் இது பொருந்தும்.
அமெரிக்கா இந்தியா போன்ற
நாடுகளின் தலைமையில் உலகநாடுகளின் வழிகாட்டலின் கீழும் உதவியின் கீழும்
புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுப் போர் முடிக்கப்பட்டது. போர்
முடிந்தபிறகு தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குத் திறந்த பொருளாதாரமும்
நுகர்வுக் கலாசாரமும் (Consumerism) வேகமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
கொழும்புக்கு எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வந்திறங்கியவை எல்லாம்
இப்போதுதான் வடக்குக்கிழக்குக்குப் போகிறது. Shopping Mall கலாசாரமும்
இப்படித்தான் இப்போது யாழ்ப்பாணத்துக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.
உலகத்தின் ஒவ்வொரு மூலையையும் தமக்கான வரையறையற்ற சந்தையாக்காமல்
முதலாளித்துவத்தால் வாழ முடியாது. வளங்களை அடிமட்ட விலையில் சுரண்டப்
போர்களை உருவாக்குவதும் புதிய சந்தைகளைத்திறக்கச் சண்டைகளை முடிப்பதும்
முதலாளித்துவத்துக்கு அவசியம்.
இந்த Mall ஒரு குறியீடு.
No comments:
Post a Comment