இன்று
திருமணங்களில் மிக முக்கியமான இடத்தினை வீடியோக்காரர்களும் ஒளிப்படக்
காரர்களுமே வகிக்கிறார்கள். அவர்களின்றித் திருமணத்தில் அணுவும்
அசைவதில்லை. திருமணம் நடத்திவைக்கும் மதகுருமார் கூடப்
படப்பிடிப்பாளர்களின் ஆணைக்குப் பணிந்தே ஆகவேண்டியிருக்கிறது. இது நல்லதா
கெட்டதா என்பது பற்றி என்னிடம் தீர்ப்புக்கள் எதுவும் இல்லை.
ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் புதியதொரு "புரோகிதர்" குழுமமாக இந்தப் படப்பிடிப்பாளர்கள் உருவெடுத்திருக்கிறார்கள் என்பதே.
சடங்குகள் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதை இன்று அவர்களே
தீர்மானிக்கிறார்கள். அவர்கள் புதுப்புதுச் சடங்குகளை உருவாக்கி அதனைப்
பொதுவான திருமண நடைமுறை ஆக்குகிறார்கள். பழைய சடங்குகளையும் தாம்
உருவாக்கிய புதிய சடங்குகளையும் தமது அனுபவத்தால் விரல் நுனியில்
வைத்திருக்கிறார்கள். அவற்றை மீற அனுமதிக்காமல் திருமணத்தையே தமது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.
எனக்குத் தெரிந்த
ஒருவர் கலந்துகொண்ட திருமணச்சடங்கில் புரோகிதர் படப்பிடிப்பாளருக்கு
அறைந்திருக்கிறார். இது முக்கியமான நிகழ்வு. பழைய புரோகிதர்களுக்கும் புதிய
புரோகிதர்களான படப்பிடிப்பாளர்களுக்குமிடையே ஆங்காங்கே முரண்பாடுகள்
எழுகின்றன. இந்த முரண்பாடே புதிய புரோகிதக் குழுமம் உருவாகிவிட்டதென்பதற்கு
ஆதாரம்.
இப்படித்தான் திருமணச்சடங்குகளுள் மரபான புரோகிதர்களும்
நுழைந்தார்கள். திருமணங்களின் முழுக்கட்டுப்பாட்டையும் அவர்கள்
கையிலெடுத்தார்கள்.
No comments:
Post a Comment