1 அக்டோபர் 2015 01:56 PM
இறை மறுப்பை மனித குல விடுதலைக்கான அரசியற் பாதையிலிருந்து பிரித்தெடுத்து
வெறும் இந்து - இறை எதிர்ப்பு மதமாக மாற்றிவிட்டிருக்கும் இன்றைய தி. க
வினதும் அவர்களது "விடுதலை" யினதும் நிலையை இந்த ஒப்பீடு துல்லியமாகக்
காட்டுகிறது.
ஒடுக்குமுறைகளுக்கெதிரான அரசியலென்பது அதன்
அடிப்படை மெய்யியலில் இறை ஏற்காத் தன்மை கொண்டதே. ஆனால் வரட்டு
நாத்திகவாதமாகச் சுருங்க முடியாதது. அவ்வாறு
சுருங்குமெனில் அங்கே
ஒடுக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் வீரியமும் வரண்டுதான் போகும்.
Thursday, January 7, 2016
Google தமிழ் எழுத்துணரியை எளிதாகப் பயன்படுத்த ஒரு செயலி
3 அக்டோபர் 2015 01:03 AM
கூகிளின் API இனைப்பயன்படுத்தி, கூகிளின் தமிழ் எழுத்துணரி மூலம் தமிழ் ஆவணங்களை எண்ணிமப்படுத்துவதை எளிதாக்கித் தந்துள்ளார் சிறீனிவாசன்.
இப்போது பயன்படுத்திப் பார்த்தேன். அருமையாக வேலை செய்கிறது. கூகிள் API அணுகலைப் பெறுவதற்கான அமைப்புக்கள் நிரலாக்கத்தோடு தொடர்பற்ற பயனர்களுக்குச் சிக்கல் போல் தோன்றக்கூடும். கூகிள் Drive இன் இடவசதியும் அனுமதிகளும் வரையறைக்குட்பட்டதாக இருக்கும் வரை இந்தச் சிக்கலைக் களைவது எளிதன்று. மற்றபடி சிறீனிவாசன் எழுதியுள்ள நிரல் எமது வேலையை பலமடங்கு எளிதாக்கித் தருகிறது.
அவரது நிரல் திறந்தமூலமாக இருப்பதால் இன்னும் சீர்படுத்தப்பட்டு வளரும் என்று எதிர்பார்க்கலாம்.
சிறீனிவாசனுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
https://github.com/tshrinivasan/google-ocr-python

இயங்கியல் பற்றித் தன் மாணவர்களுக்கு விளக்க முயல்கிறார் இந்த ஆசிரியர்
5 அக்டோபர் 2015 01:03 AM
Clips from the movie "Half Nelson" that beautifully explain dialectics, a simple theory that explains how change happens. The teacher applies it to social justice, but can be used to explain change in any context.
Basically, its broken down into three components:
1) Every thing (every object and every process) is made of opposing forces/opposing sides.
2) Gradual changes lead to turning points, where one opposite overcomes the other.
3) Change moves in spirals, not circles.

மைத்திரி உருவாக்க முயலும் திருவுருப் பிம்பம்
6 அக்டோபர் 2015 04:49 PM
மகிந்த ராசபக்சவுக்கு ஏற்படுத்தப்பட்ட "போரை வெற்றி கொண்ட" துட்டகெமுனு திருவுருவைச் சிதைக்க முடியாத நிலையில், அதற்கு மாற்றாக "உலக நாடுகளின் அழுத்தங்களை வெற்றிகொண்ட" வீரத் தலைவர் திருவுருவையாவது புதிதாக உருவாக்கித் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இன்றைய சனாதிபதியும் அவர்தம் கூட்டணியினரும் முயல்வதாகத் தெரிகிறது.
வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்காகச் செயற்படும் உளவாளிகள், தாம் உயிர்வாழப் பயன்படுத்தும் இனவாதத்துக்குத் தானும் நேர்மையாக இருக்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்கச் சிரிப்பு வருகிறது. சம்பிக்கவின் அண்மைய அறிக்கைகளைப் படித்துப் பாருங்கள்.

அமெரிக்க அடிவருடிகளுக்கான நோபல் பரிசு
12 அக்டோபர் 2015 04:04 PM
ஐசுலாந்தின் மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு துனீசியாவில் பெரும் மக்கள் எழுச்சி நடந்த வேளை அவ் எழுச்சியை நான் ஆதரவுடனேயே நோக்கினேன். பின்னர் அரபு வசந்தம் என்ற பெயரில் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து லிபியாவில் கடாபிக்கு எதிராகவும் எழுச்சி நிகழ்ந்தபோது அரபு வசந்தம் தனது உண்மையான முகத்தினைக் காட்டியது. அது அமெரிக்க வசந்தம் தான் என்பது உறுதியானது.
ஆனாலும் அதன் பிறகும் துனீசியாவில் நிகழ்ந்த எழுச்சி பற்றி நல்ல கருத்தே இருந்துவந்தது. இப்போது துனீசிய எழுச்சியின் பின்னணியில் இருந்தவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு என் எண்ணத்தை முழுவதுமாக மாற்றிவிட்டது. இப்போது துனீசிய எழுச்சியையும் நான் நம்புவதற்கில்லை.
சமாதானத்துக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட எவரைத்தான் இப்போது நம்ப முடியும்?
ஆண்டொன்றில் அமெரிக்காவுக்கும் உலகக் கார்ப்பரேட்டுக்களுக்கு சார்பான அரசியலை எவர் மிகவும் கயமையாகவும் நல்ல முகமூடியுடனும் முன்னெடுத்தார் என்று அறிவதற்கு அவ்வாண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது என்று பார்த்தாலே போதுமானது போல் இருக்கிறது.

தனியார்மயம் இடதுசாரிகளுக்குச் சார்பானதென்கிறது தென்கொரியா
13 அக்டோபர் 2015 04:43 PM
South Korean government planing to restrict school text books from private publishers and trying to take history books under state control. (Read it correctly. It's SOUTH Korea, not the evil filthy NORTH KOREA :P
தென்கொரிய அரசு, பள்ளிகளில் பயன்படுத்தப்படும் தனியார் பாடப்புத்தகங்களைத் தடை செய்துவிட்டு வரலாற்றுப் பாடப்புத்தகங்களை முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. (இந்த மாதிரி செய்தியைப் பார்த்தவுடன் பழக்கதோசத்தில் 'வட கொரிய' அரசாங்கம் என்று படித்துவிடாதீர்கள்., இது தென்கொரியா! :P )

தமிழ்க் கணிமை வரலாற்றில் மகிழ்ச்சிதரும் முன்னேற்றங்கள்
14 அக்டோபர் 2015 12:00 PM
2015, 2016ம் ஆண்டுகள் தமிழ்க் கணிமை வரலாற்றில் மகிழ்ச்சிதரும் முன்னேற்றங்களைத் தந்த ஆண்டுகளாக இருக்கப்போகின்றன போலத்தான் தோன்றுகிறது. 95% இற்கும் மேல் சரியாக எழுத்துக்களை உணரும் கூகிளின் எழுத்துணரி, தமிழில் எழுதப்பட்டவற்றை இயல்பான குரலில் உரத்துப்படிக்கும் குரற்தொகுப்பி என முக்கிய வரவுகள் நிகழ்கின்றன.
எழுத்துணரியும் குரற்தொகுப்பியும் (Speech synthesizer) தமிழ்க்கணிமை ஆவலர்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நுட்பங்கள். இவ்வாண்டு இரண்டுமே நாம் எதிர்பார்த்ததை விடச் செம்மையானவையாக வெளிவந்திருக்கின்றன.
http://www.ssn.edu.in/Speech_Lab/Speech_home.html

எலி படக் காட்சியும் அரச நிறுவனங்களும்
20 அக்டோபர் 2015 11:03 PM
"எலி" படத்தில் எனக்குப் பிடித்த காட்சி இதுதான். அந்தப்படத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல காட்சியும் இது தான். அரச துறை நிறுவனங்களின் இயந்திரத்தனத்தையும் பொதுமக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போன தன்மையையும் பகிடிபண்ணும் அருமையான நகைச்சுவை.
படத்தின் கதைக்களம் 50-60களில் நிகழ்வதால் வேலை நேரத்தில் வேலையில் அக்கறை கொண்டவர்களாக அரச வங்கி ஊழியர்கள் இருக்கிறார்கள். அரசியல் நியமனங்களும் ஊழலும் நிறைந்துபோய்விட்ட எமது காலங்களில் அரசதுறையில் அந்த இயந்திரத்தனமான அக்கறையைக் கூடக் காணக்கிடைப்பதில்லை.
போகிறபோக்கில் பொதுத்துறை ஊழியர்களின் வெற்றுத் தொழிற்சங்கவாதத்துக்கும் ஒரு அடி அடிப்பதைக் கவனியுங்கள்..

முதலாளியத்துக்கு எதிரான திரைப்படங்கள் ஹோலிவூட்டிலலிருந்து எவ்வாறு வருகின்றன?
23 அக்டோபர் 2015 12:55 AM
It is a pro-capitalist article which blindly believes Adam Smith's pure capitalist utopia can be practically possible in some day. But still the trend it points out is very important to know. It explains how the anti-capitalist, anti-corporate films come from big Hollywood corporates.
இது முதலாளித்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு கட்டுரை. ஆடம் ஸ்மித் கனவு கண்ட தூய்மையான முதலாளியம் எனும் அழகிய வெறும் கனவு உண்மையிலேயே சாத்தியம் என்றும் அப்பாவித்தனமாக (?) நம்புகிறது. இருந்தபோதும், இக்கட்டுரை சுட்டிக்காட்டும் செல்நெறி முக்கியமானது. முதலாளித்துவத்துக்கும் கார்ப்பரேட்டுக்களுக்கும் எதிரான திரைப்படங்கள் எவ்வாறு ஹொலிவூட் இன் பெரும் திரைப்பட வணிகக் கார்ப்பரேட்டுகளிடமிருந்து வருகின்றன என்பதைத் தெளிவாக இது விளக்குகிறது.
நுகர்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் முதலாளித்துவம் எதையும் தனது இலாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. தன்னைக் கெட்டவார்த்தையால் திட்டும் விமர்சனங்களைக்கூட அது விற்றுக் காசாக்கிக்கொள்ளவே முயலும். smile உணர்ச்சிலை

மாலையும் முக்குறி நீறும் மாஷா அல்லாவும்
24 அக்டோபர் 2015 07:40 PM
மாலையும் முக்குறி நீறும் மாஷா அல்லாவும் மனித மனத்தின் ஒரே வகையான தேவையின் வெளிப்பாடுகள் அல்லவா..?
நம்பிக்கை இழந்த மனிதர்களின் கனவு ஊன்றுகோல்கள் தானே மதங்கள்?
கனவான ஊன்றுகோல்களில் உனதா எனதா பெரியது/உண்மையானது என்று அடித்துக்கொள்கிறவர்களை விட இப்படி எல்லாவற்றையும் சமமாக மதிப்பவர்கள் ஆபத்தற்றவர்கள்.

May Kondaya's statement enlighten brain-washed Sinhalese people
25 அக்டோபர் 2015 02:35 AM
All my Sinhalese friends who tend to believe governments' propaganda about arresting, abducting, detaining and killing LTTE "Terrorists" in the past 30 years should re-think what you blindly believed.
You should learn an important lesson from Seya's case. Now the entire Srilanka is witnessing how Police fabricates and manipulates the case using threat and torture. If Police can torture someone to this extend, Think about how military would act.

இலங்கையின் இன வன்முறை நிகழ்ந்த காலங்களில் ஒரு தொடர்பு இருக்கிறதா?
28 அக்டோபர் 2015 12:54 AM
இலங்கையின் நவீன வரலாற்றில் 80ம் ஆண்டுவரை இனவாதத்தினதும் இனப்பகையினதும் தொடக்கப்புள்ளிகளாகவும் முக்கிய நிகழ்ச்சிகளாகவும் உள்ள ஒவ்வொன்றையும் பட்டியலிடுங்கள்.
இலங்கையில் நடந்த வெற்றிகரமான மிகப்பெரிய இடதுசாரி-தொழிற்சங்கப் போராட்டங்கள், மக்கள் எழுச்சிகள், ஆளும் வர்க்கத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்த இடதுசாரிகளின் வெற்றிகளைக் காலவாரியாகப் பட்டியலிடுங்கள்.
ஒன்றுபட்ட மக்கள் எழுச்சிகளும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளும் நடந்த நாட்களை உடனடுத்து வரும் காலப்பகுதியிலே இனப்பகை மூட்டும் இனவாத நிகழ்வுகள் செயற்படுத்தப்பட்டிருப்பதையும் கட்டவிழ்க்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
இது தற்செயலான ஒன்றா, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் எழுந்தமானமாக அப்படி அமைந்துவிட்டதா, அல்லது உண்மையிலேயே இப்படியொரு தொடர்பு உள்ளதா?
வரலாற்றின் இந்த முக்கியமான தொடர்பு எம்மிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டதா?
இதுபற்றி ஆய்வுகள் செய்யவேண்டிய தேவை உள்ளதாகவே உணர்கிறேன்.

நான் போராடும் மாணவர் பக்கம். நீங்கள்?
30 அக்டோபர் 2015 11:59 PM
மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடினால் அரசாங்கத்தின் வேலை, உடனடியாக மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வருவதற்கு வழிபார்ப்பதாகும்.
சிலகாலங்களுக்கு முன்பு கொழும்பு கோட்டை புகைவண்டி நிலையத்திற்குப் போயிருந்தபோது அங்கே சிறு பந்தல் கட்டி மாணவர்கள் சிலர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்தார்கள். அவர்களை எவரும் திரும்பிப்பார்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. தமது கோரிக்கைகளை துணிகளிலும் அட்டைகளிலும் எழுதி வைத்துக்கொண்டு சுழற்சி முறையில் உண்ணாவிரதமிருந்தார்கள். கோரிக்கைகள் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததால் அருகே சென்று பேச்சுக்கொடுத்து விளக்கம் கேட்டேன். தோழமையுடன் தமது கோரிக்கைகளை எனக்கு விளக்கினார்கள்.

காவற்துறை நண்பர்களுக்கு : மொழிபெயர்ப்புக் கவிதை
2 நவம்பர் 2015 12:22 PM
காவற்துறை நண்பர்களுக்கு,
நண்பா, பெண்பிள்ளைகளையும் பொடியன்களையும் அடிப்பதற்கான கட்டளைகள் மேலிடத்தில் இருந்து தான் வருகின்றன என்பது எனக்குத் தெரியும்.
அப்படியிருந்தும் ஏனப்பா இவ்வளவு வெறியும் பழியுணர்ச்சியும்?
ஓடுகிற பொடியன்களையும் தள்ளி விழுத்தி, மண்டையை உடைத்து, குருதி வழி வழிய ஏன் அடிக்கிறாய்?
கையிலிருக்கு பொல்லுக்கட்டை உடையும் வரை பெண்பிள்ளைகளுக்கு அடிக்காதே நண்பா.
அவர்களுக்கு இந்த அடியையும் உதையையும் தாங்கிக்கொள்வது சிரமம்.
உங்களுக்கெல்லாம் கூடப்பிறந்தவர்கள் இல்லையா?
இந்தப் பெண்பிள்ளைகளும் பொடியன்களும் போராடி வென்றெடுக்கும் நன்மைகளை எல்லாம் என்றாவது ஒரு நாள் உங்களுடைய பிள்ளைகளும்தான் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை மறந்துவிடாதே..
பெரிய பெரிய அதிகாரிகளதும் அரசியல்வாதிகளதும் பிள்ளைகளுக்கு அந் நன்மைகள் எதுவுமே தேவைப்படாது நண்பா..
-கஜூவத்தை ஐக்கிய கிரிக்கட் சங்கம்
தமிழில் : மு. மயூரன்

HNDA மாணவர்களது போராட்டம்
6 நவம்பர் 2015 12:58 PM
HNDA மாணவர்களது போராட்டம் பற்றியும் அவர்களது கோரிக்கைகளின் நியாயம் பற்றியும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் நேற்றைய சமூக விஞ்ஞான கற்கைவட்டக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
HNDA மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்ட இக் கலந்துரையாடல் மிகவும் ஆழமானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் அமைந்தது.
பெரும்பாலான ஊடகங்கள் எவ்வளவு தூரம் கல்வி முதலாளிகளுக்கும் அவர்களது தரகர்களான அரசியல்வாதிகளுக்கும் அவர்தம் ஏவல் நாய்களான காவற்துறைக்கும் வால்பிடிக்கின்றன என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.

Dialog ISP cheating me?
7 நவம்பர் 2015 01:50 AM
I have serious doubts in Dialog ISP's 4G data usage calculation. After I ran out of my 25 GB quota last month, I wanted to check my data usage history.
From August to November, in 74 days, according to the data usage history details they provide, I used exactly
768MB for 14 days,
512MB for 15 days,
256MB for 10 days and
1024MB for 7 days.
I find it very fishy. This generic flat amount of data usage is impossible for a home user. I have strong suspicions that Dialog is cheating me. Check your data usage history and let me know your experiences.

உயிர்ச்சூறை : ஈழத்துப் பாடல்
மனதைத்தொட்டு உணர்வுகளைப் பற்றவைக்கும் வரிகளும் குரலும் காட்சிகளும் நடிப்புமாய் அருமையான பாடலொன்று..
எம்முடைய தேசத்தில் எம்மோடு வாழ்பவர்களின் துயரை எமது மொழியில் கேட்டு அழுவதென்பது இறக்குமதியாகும் கலையில் எமக்கு வாய்ப்பதில்லை.
நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!
Addressing the students and past students of private education institutions
11 நவம்பர் 2015 12:30 AM
It's not a secret that I support the struggle against commodification and privatization of education in Srilanka. My stand on this struggle is based on my understanding of politics and economics.
But after seeing this poster on FB, I realized, when we talk against the privatization of education, we should address the students and past students of private education institutions. Advanced lever drop outs, students those who failed to enter the state universities are also has to be addressed in a proper way.

புதியவர்கள் கலைப்படைப்புக்களில் காதலைத் தவிர்க்கவும் : உரையாடல்
13 நவம்பர் 2015 ·
இளைஞர்கள் தமது கலைப்படைப்புக்களைக் காதல் தொடர்பானதாக இல்லாமற்
பார்த்துக்கொண்டாலே, அவை தரமானதாக அமைவதற்கான வாய்ப்பு அதிகரித்து
விடுகிறது.
எனவே, தரமான பாடல்களை, படங்களை, இலக்கியத்தைப் படைக்க விரும்புவோர் உங்கள் படைப்புக்களின் கருப்பொருளாகக் காதல் இல்லாதபடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

Pray for Paris : கவிதை
14 நவம்பர் 2015 09:41 PM
அரசரை அண்டியவர்கள் பாக்கியம் செய்தவர்கள்..
ஆள்வோரை அண்டியவர்கள் பாக்கியம் செய்தவர்கள்..
ஒடுக்குவோரின் சொந்த ஊரில் வாழ்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்..
பெருங்கொலைகாரர்களின் தலைநகரில் வாழ்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்...
குருதி குடிக்கும் பேரரசுகளின் கோட்டைகளுள் வாழ்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்...
அவர்களருகே ஒரு பட்டாசு வெடித்தாலும் அது பத்துநாட் செய்தி.
அவர்கள் குண்டு வெடித்துக் கொலையுண்டாலோ அது உலகத்தின் துக்கம்.
அவர்களுக்கோ இவ்வுலகின் சுவர்க்கக் கதவுகள் அகலத்திறந்துள்ளன.
அரசருக்கும் ஆள்வோருக்கும்
ஒடுக்குவோருக்கும் பெருங்கொலைகாரர்களுக்கும் பேரரசுகளுக்கும்
குடிக்கக் குருதியும் உண்ணப் பிணமும்
எம்மை ஒடுக்கும் ஆயுதங்கள் செய்யச் செல்வமும்
களித்திருக்க உழைப்பும் கொடுக்கும்
கெடு நரகில் உழலும்
நாமோ பாவிகள்.
பாக்கியவான்கள் வீசும் குண்டடிபட்டு இறந்தபின்,
பரலோக இராச்சியத்தில் மட்டுமே எமக்கு இடமிருப்பதாகத்தான்
பாவப்பட்ட எமது இறை தூதர்களால்
ஆறுதல் வார்த்தைகளேனும் சொல்லமுடிகிறது.
மின்சார வேலிகளாலும் நீட்டிய துப்பாக்கிகளாலும்
இறுகிய முகங்களுடன் கணினி முன் அமர்ந்திருக்கும் குடிவரவு அதிகாரிகளாலும்
கட்டிக் காக்கப்படும் சுவர்க்கத்தின் வெளியே நின்று,
நாம் தாண்ட முடியாப் பெரும் மதில்களை எம் அழுக்கேறிய கைகளாற் தொட்டு அசிங்கப்படுத்தாமல்,
எட்டத் தள்ளி நின்று,
சுவர்க்கத்தின் திசை நோக்கி,
பாக்கியம் செய்தவர்களுக்காக மன்றாடுவோம்.
Pray for Paris

பயங்கரவாதம் அல்லாவின் நாட்டம்!
17 நவம்பர் 2015 01:57 AM
நான் பகிர்ந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு தனிப்பட அரட்டைக்கு வந்தார் ஒரு நண்பர்.
எக்காலமும் கடவுளை மன்றாடாத நாத்திகனான உனக்கு எதற்கு மற்றவர்கள் மன்றாடுவதைப்பற்றிப் பிரச்சினை என்று கேட்டார்.
நான் நாத்திகன் அல்லன், இறையை ஏற்காதவன் என்பதைப் புரியவைக்க முயற்சித்துத் தோற்றுப் பின், அந்தப்படத்தில் சொல்லப்பட்டதோடு உங்களுக்கு என்ன முரண்பாடு என்று கேட்டேன்.
எல்லாம் அல்லாவின் நாட்டப்படியேதான் நடக்கின்றன என்றார். பயங்கரவாதத் தாக்குதல்களுமா என்று வியந்தேன். ஆம் என்றார்.

அமெரிக்காவின் உலக ரவுடித்தனத்துக்கும் உள்நாட்டு நல்வாழ்வுக்கும் என்ன தொடர்பு? TPP படியுங்கள்!
18 நவம்பர் 2015 01:57 AM
"அமெரிக்காவின்
வெளியுறவுக் கொள்கை தவறானது; அதனை நாமும் தான் ஒப்புக்கொள்கிறோம்;
அமெரிக்காவுக்கு ஒரு சரியான சனாதிபதி கிடைத்தால் வெளியுறவுக் கொள்கை
சீர்படுத்தப்படும்; அதன்பிறகு உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி என்ற பெயர்
அமெரிக்காவுக்கு இருக்காது"
என்கிற வாதம் அடிக்கடி வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதார அமைப்பு சிறப்பானது; அது அமெரிக்க மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தினைப் பெற்றுக்கொடுத்துள்ளது; அப்பொருளாதார அமைப்பே அமெரிக்காவை இன்று செழுமையான நாடுகளில் முதல் வரிசையில் வைத்திருக்கிறது என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள்.
அப்படியானால் உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா இருப்பதற்கும் அந்நாட்டின் மக்கள் நாட்டினுள்ளே நல்ல வாழ்க்கைத்தரத்தைப் பெற்றிருப்பதற்கும் இடையே தொடர்புகள் ஏதும் இல்லையா?

Facebook profile கொடியை விமர்சித்தவர் மீதான மேலோட்டமான விமர்சனங்கள்
18 நவம்பர் 2015 04:34 PM
பிரான்சு மீதான தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பார்பதற்கு Facebook கொண்டுவந்த வசதியும் பிரான்சுக் கொடியை எங்கள் அறிமுகப் படம் மீது போட்டுக் கொள்ளும் வசதியும் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இவ்விமர்சனங்கள் பல்வேறு விதமானவையாகவும் வெவ்வேறு அரசியற் தளத்தைக் கொண்டவையாகவும் இருந்தபோதிலும் எல்லாமே பொதுவான கோபத்திலிருந்தே எழுந்தன. உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா என்ற தார்மீகக் கோபமே அது.

செய்தித் தலைப்புக்களின் கலைச்சொற் பயன்பாட்டின் அரசியல்
20 நவம்பர் 2015 11:40 PM
நேற்றைய சமூகவிஞ்ஞான கற்கைவட்ட உரையாடலில், பாரிசு தாக்குதலை முன்வைத்து ஏராளமான சமகால உலக அரசியல் விடயங்களை அறிய முடிந்தது.
எனது கவனத்தை அதிகம் கவர்ந்தது பெரிய/அறியப்பட்ட ஊடகங்களின் செய்தித் தலைப்புகளில் இருக்கும் அரசியலும், கலைச்சொற் பயன்பாட்டின் அரசியலும் தான்.
Dailymirror எவ்வளவுதான் சொன்னபோதும், "அரசியல் கைதிகள்" என்ற கலைச்சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள் "முன்னாள் புலிகள்" என்றுதான் சொல்வார்கள்.

சிறு குற்றங்களுக்கான பெருந்தண்டனைகளின் அரசியல்
21 நவம்பர் 2015 12:50 PM
எவர்மீதாவது
நாம் எமது அதிகாரத்தை நிலைநாட்டவேண்டுமானால் அவர்களைக்
குற்றவாளிகளாக்குவதும், குற்றவுணர்வு கொண்டவர்களாக்குவதும் ஒரு சிறந்த
வழிமுறை. அக்குற்றங்களுக்கான தண்டனைகளையும் நீதியையும் வழங்குபவர்களாக நாம்
இருக்க வேண்டும். கண்காணிப்புக் கமராக்கள், சிறு சிறு குற்றங்களுக்கெதிரான
பெருந் தண்டனைகள், தீங்கற்ற பாலியல் நடத்தையைக் குற்றமாக்குவதும்
வெறுப்புக்குரியதாக்குவதும், கஞ்சா போன்ற பாதகமற்ற போதைப்பொருட்களைக்
குற்றமாக்குதல், உணவுப் பழக்கவழக்கங்களைக் குற்றமாக்குதல், உடையைக்
குற்றமாக்குதல், எவருக்கும் பாதகமற்ற வழிபாட்டு முறைகளைக் குற்றமாக்குதல்
என்று இப் பட்டியல் நீளும்.
Stoning And Islam - இஸ்லாமும் கல்லெறிந்து கொல்லுதலும்
Stoning
to death was a very common punishment in the place and the era where
Islam was emerged. Like all the other religions, Islam also couldn't
escape from reflecting the ideologies and practices of the society it
emerged from.
இஸ்லாம் உருவான இடத்திலும் காலத்திலும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை என்பது இயல்பானதாகவே இருந்தது. மற்றைய எல்லா மதங்களையும்போலவே இஸ்லாமும் தான் உருவான சமூகத்தில் இருந்த நடைமுறைகளிலிருந்தும் கருத்தியலிலிருந்து முழுமையாகத் தப்பிக்கொள்ள முடியவில்லை.
But in the case of adultery, Even Quran doesn't suggest capital punishment for women (As far as I know). To justify their act, Saudi Islamic lawmakers take Hadids which are inferior than Quran and can not override what Quran says according to Islam.

Entire Muslim community and Muslim institutions should raise against
Saudi rulers and their anti-human laws. Without the support of global
Muslim community, it's really difficult to overthrow the anti-human
anti-Muslim regime of Saudi.
Civilized world must abolish the legal systems based on religions. Laws should be made by people through a democratic mechanism. It's not a problem to include some of the good principles of religion into a county's law, but it should be considered as democratic law. The main danger of religious law is it's holy status which can not be criticized and changed by people using a democratic mechanism.
Everything changes. Laws must be changed according to the new conditions and understandings.
ஆனாலும், சோரம்போதலைப் பொறுத்தவரை என் அறிவுக்கெட்டியவரையில், பெண்களுக்கு மரண தண்டனையை குரான் பரிந்துரைக்கவில்லை. தமது சட்டத்தை நியாயப்படுத்துவதற்காக நபிவழி யை சவூதி சட்ட உருவாக்குநர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இஸ்லாத்தைப் பொறுத்தவரை, நபிவழி என்பது குரான் சொல்வதற்கு முரணாக எதையும் சொல்ல முடியாது.
மனிதகுலத்துக்கு எதிரான சவூதியின் சட்டதிட்டங்களை எதிர்த்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இஸ்லாமிய நிறுவனங்களும் எழவேண்டியுள்ளது. மனிதகுலத்துக்கு எதிரானதும் இஸ்லாத்துக்கு எதிரானதுமான சவூதி ஆட்சியினை உலக முஸ்லிம்களின் ஆதரவின்றித் தூக்கியெறிவது கடினம்.
நாகரிகமடைந்த உலகம், மதங்களை அடிப்படையாகக்கொண்ட நீதிமுறையை ஒழிக்க வேண்டும். சட்டங்கள் சனநாயக வழிமுறைகளூடாக மக்களால் உருவாக்கப்படவேண்டும். மதங்கைள்ல் உள்ள நல்ல கருத்துக்களைச் சட்டங்களுள் உள்ளடக்குவதொன்றும் சிக்கலில்லை ஆனால் அவை சனநாயகச் சட்டங்களாகக் கருதப்படவேண்டும். மதம் சார் சட்டங்களின் முதன்மையான ஆபத்து அவற்றின் புனிதத் தன்மையாகும். புனிதமானவற்றை கேள்விகேட்கவும் சனநாயக வழுமுறைகளால் மாற்றிக்கொள்ளவும் இயலாமற்போகிறது.
எல்லாமே மாற்றத்துக்குள்ளாகும். சட்டங்களும் புதிய நிலவரத்துக்கும் புதிய புரிதலுக்கும் ஏற்றவண்ணம் மற்றப்பட்டாக வேண்டும்.
News : Sri Lankan female domestic worker, who was recently sentenced to be stoned to death after being found guilty of having a clandestine affair. The youth who had having the affair with Lankan woman had been given 100 lashes as punishment.
-Dailymirror [Link for the news is in first comment]

நாடு - அரசு - அரசாங்கம் முதலாய சொற்கள்
24 நவம்பர் 2015 01:07 AM
நாடு - அரசு - அரசாங்கம் - நாட்டின் மேற்தட்டு மக்கள் - நாட்டின் உழைக்கும் மக்கள்
இச் சொற்களுக்கிடையேயான வேறுபாடுகளைச் சரியாக விளங்கிக்கொள்ளாமற்போவது தான் உலக - உள்நாட்டு அரசியல் குறித்த ஏராளமான தெளிவீனங்களுக்கும் தவறான பார்வைகளுக்கும் காரணமாகிறது என்று தோன்றுகிறது.
ஊடகங்களும் 'இஸ்ரேல் கூறுகிறது', 'அமெரிக்கா போரில் இறங்குகிறது', 'இந்தியா முடிவு செய்தது' என்று வசதிக்காகச் சொல்லிச்சொல்லி இந்த வேறுபாடுகள் பொதுவாக விளங்கிக்கொள்ளப்படாமலே போய்விடுகின்றன.

எமது கலைகளிலும் பண்பாட்டிலும் "இறக்குமதித்தனம்"
14 டிசம்பர் 2015 02:36 PM
உணவுப் பண்டங்களும் கலைப்படைப்புக்களும் இலங்கையில் அளவுக்கதிகமாக இறக்குமதியாகின்றன. ஒன்றில் நாம் நேரடியாக அவ்விறக்குமதிகளை நுகர்கிறோம் அல்லது அவ் இறக்குமதிகளை நகல்செய்து நுகர்கிறோம். இப் போக்கு எமது பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கலையையும் "இறக்குமதித்தனம்" கொண்டதாக மாற்றியிருக்கிறது.

Gossip வலைத்தளங்கள் - 2
21 டிசம்பர் 2015 08:42 PM
Newjaffna, அதிரடி, தமிழ்CNN உட்பட்ட சமூகவிரோத வலைத்தளங்களுக்கெதிராக வலுவான மக்கள் எதிர்ப்பினை ஒருங்கிணைக்கவேண்டிய தேவை அதிகரித்துள்ளதாக உணர்கிறேன். எதிர்ப்பு என்ன வடிவத்தில் இருக்கவேண்டும் என்பதை சந்தர்ப்பம் சூழ்நிலைகள் தீர்மானிக்கட்டும். முதலில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.
இவர்களது அடாவடித்தனங்களைக் கண்டும்காணாமலிருப்பது ஆபத்தில் முடியும் என்றே தோன்றுகிறது. சமூக ஆர்வலர்கள் இனியும் இவர்களுக்கெதிராகச் செயற்படாமலிருப்பது பொருத்தமானதல்ல.

Gossip வலைத்தளங்கள் - 1
22 டிசம்பர் 2015 10:43 AM
இந்தச் சகோதரியின் துணிச்சல் மிக்க உறுதியான இந்தக் குரலையும் அழைப்பையும் கேட்ட பின்னும் அவரோடிணைந்து இந்தக் கொடுங்கும்பலை எதிர்த்து இயங்காவிட்டால் நாம் இச் சமூகத்தில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்களாகிறோம்.
NewJaffna, அதிர்வு, tamilcnn, jvpnews போன்ற கொசிப் வலைத்தளங்களை கிளுகிளுப்புடனோ, அருவருப்புடனோ பேசாமற் கடந்துபோவது இனியும் நல்லதல்ல. இவை வெறுமனே கிசுகிசுத் தளங்களாகப் பொழுதுபோக்குக்கு நடத்தப்படுபவை அல்ல. இவற்றின் பின்னே மிகப்பெரிய வன்முறைக் கும்பல் உள்ளது. அது பெரிய அளவில் பணம் சம்பாதிக்கிறது. இப்பணம் அப்பாவிகளை மிரட்டுவதன் மூலமும் அப்பாவிகளின் வாழ்வை அழிப்பதன் மூலமும் இளம் சமுதாயம் ஒன்றினை தவறான அரசியலின் பால் வழிநடத்துவதனூடாகவும் தான் திரட்டப்படுகிறது. இக்கும்பலை சாதாரணமானதாக நாம் எடைபோட்டுவிடக்கூடாது. அரசியல்வாதிகள், காவற்துறை, நீதித்துறை எல்லாவற்றையும் தமது கைக்குள் போடக்கூடிய வல்லமை கொண்டோராகவே அவர்கள் இருப்பார்கள்.

தமிழ் அடையாளத்தை முற்போக்கானதாக மாற்றியது எது?
24 டிசம்பர் 2015 01:48 PM
இலங்கையில் தமிழ் அடையாளம் பிற்போக்கான பழைமைவாத மரபு அடையாளமாகிப் போகாமல் அதனை முன்னோக்கிச் செல்லும் பெருமைகொண்ட அடையாளமாக மாற்றியதில் கம்யூனிஸ்டுகளதும் அவர்களது முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தினதும் பங்கு முக்கியமானது. சாதிகளாகப் பிரிந்துகிடந்த தமிழ்ச் சமூகத்தை, சாதிவேற்றுமை தாண்டிய "தமிழ்த் தேசிய இனமாக" மாற்றியதிலும் இலங்கையில் கம்யூனிஸ்டுக்களின் அரசியற் பங்களிப்புப் பெரியது.

ஆற்றொழுக்குப் போன்று உள்ளத்துள் ஓடும் சரணங்களின் மெட்டு
26 டிசம்பர் 2015 12:24 AM
♪ ♫ என் மனசு உனக்கு சரியாத் தெரியுமே.. அடடா வயசும் ஆச்சு உனக்கு புரியுமே.. ♪ ♫
ஆற்றொழுக்குப் போன்று உள்ளத்துள் ஓடும் சரணங்களின் மெட்டுக்களும் அவ்வோட்டத்தைத் தொந்தரவு செய்யாது பாடலின் 'மனநிலையை' உருவாக்கும் துணையிசையும் #இளையராஜா Genre இன் சிறப்புக்கள்.
நிறைய நாட்களுக்குப் பிறகு ஒரு பாடலின் சரணம் மீண்டும் மீண்டும் தன்னைக் கேட்கத் தூண்டுகிறது..
http://play.raaga.com/tamil/song/album/ Thaarai-Thappattai-T0004347/ Aattakkari-Maman-Ponnu-505023
♪ ♫ என் மனசு உனக்கு சரியாத் தெரியுமே.. அடடா வயசும் ஆச்சு உனக்கு புரியுமே.. ♪ ♫
ஆற்றொழுக்குப் போன்று உள்ளத்துள் ஓடும் சரணங்களின் மெட்டுக்களும் அவ்வோட்டத்தைத் தொந்தரவு செய்யாது பாடலின் 'மனநிலையை' உருவாக்கும் துணையிசையும் #இளையராஜா Genre இன் சிறப்புக்கள்.
நிறைய நாட்களுக்குப் பிறகு ஒரு பாடலின் சரணம் மீண்டும் மீண்டும் தன்னைக் கேட்கத் தூண்டுகிறது..
http://play.raaga.com/tamil/song/album/
தாய்லாந்துமொழியிலுந்தமிழ்மொழியிலுஞ்சொற்களிடையேயிடைவெளி
தாய்லாந்திற்புழங்குந்தாய்மொழியிற்சொற்களிடையேயிடைவெளிகளிருப்பதில்லையென்பதையுமிடைவெளிகள்வசனங்களினிடையேமட்டுமேவிடப்படுகின்றனவென்பதையும்பற்றிக்
கதைத்துக்கொண்டிருந்தபோதுதமிழ்மொழியிலுஞ்சொற்களிடையேயிடைவெளிவிட்டெழுதும்வழக்கமிருந்ததில்லையெனச்சொன்னார்முனைவர்சிவசேகரம்
கல்வெட்டுக்களிலோவோலைச்சுவடிகளிலோவெழுதப்பட்டுள்ளவற்றிலிவ்வாறுசொற்களிடையேயிடைவெளியிருக்கக்காணவில்லைதான்
சொற்களிடையேயிடைவெளியில்லாமலேசொற்களைப்பிரித்தறியக்கூடியவகையிற்தான்தமிழ்மொழியினிலக்கணமமைந்திருக்கிறதென்பதையென்னாலுணரமுடிந்தது
தமிழிலுள்ளசந்தியிலக்கணமென்பதேயிவ்வாறுவலிந்துபிரிக்கப்பட்டசொற்களின்தொடுப்புக்கள்தாம்

பாதையில் ராதைகள் : சில்லையூரின் திரைப்பாடல்
29 டிசம்பர் 2015 11:02 PM
பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்
பார்த்திருப்பார் கண்ணனைக் காத்திருப்பார் - நடை
பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்
பார்த்திருப்பார் கண்ணனைக் காத்திருப்பார்
காதலினால் அல்ல,
கண்ணனின் மேல் உள்ள போதையினால் அல்ல புகல் தருவார்
காதலினால் அல்ல,
கண்ணனின் மேல் உள்ள போதையினால் அல்ல,
புகல் தருவார் இல்லை..
பாதையில் எத்தனை ராதைகள்..
உண்டிடத் தீனியும் மேனியை மூடிட
ஒரு முழச் சேலையும் தந்துவிட்டால் - ஒரு
நொண்டியும் கண்ணனே பாதையில் ராதைக்கு.
நூற்றுக்கணக்கிலே பேதைகள்!
பாதையில்...
பாதையில் எத்தனை ராதைகள்!
சாலையிலும் தெரு மூலையிலும் சுழல்
ஞால முழுதிலும் கோலமழிந்து - ஒரு
பால கிருஷ்ணனின் பார்வை படும்வரை
வாலை மனங்களோ வாதையில்..
பாதையில்...
பாதையில் எத்தனை ராதைகள்..
-சில்லையூர் செல்வராசன்

சீனப் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தல்
31 டிசம்பர் 2015 02:52 PM
ஓராண்டாகிவிட்டது. இன்னும் பசுமையாக இருக்கின்றன சீனப் பயண நினைவுகள்...
குவான்சோ போகும் புகைவண்டியில் கூடப் பயணம் செய்த சீனச் சிறுவர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறோம். பதிலுக்கு அவர்கள் எமக்குச் சீன மொழி சொல்லிக்கொடுத்தார்கள்.
சொல்லிக்கொடுத்ததை மறக்காமல் வைத்திருந்து, வாழைப்பழம் வாங்கி "வாழைப் பழம்" என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

புலி படம் பார்த்தபடிப் பிறந்த புத்தாண்டு
1 ஜனவரி 2016 02:11 PM
2015 பிறந்த நேரம் என்ன செய்துகொண்டிருந்தேன்? 36,000 அடி உயரத்தில் பறந்தபடி, இனிப்புக்குப் பதிலாக நட்பைக் கலந்து விமானப் பெண் கொடுத்த கோப்பியையும் வாழ்த்தையும் சுவைத்துக்கொண்டிருந்தேன்.
2016 பிறந்த நேரம் என்ன செய்தேன்? நீண்டநாட்களாகத் தள்ளிப்போட்டு வந்த ஒரு முக்கியமான வேலையைச் செய்து முடித்தேன். அதாவது, சிம்புதேவனின் "புலி" படத்தினைப் பார்த்து முடித்தேன்.. :)
ஹன்சிகாவுடனான அந்தப்பாடலைத்தவிர வேறெந்தக் காட்சியையும் ஓடவிடாது ஆர்வத்துடன் பார்த்தேன். அட.. படம் நல்லாத்தானே இருக்கு...
ஏன் இந்தப்படம் ஆட்களுக்குப் பிடிக்கவில்லை என்று யோசிக்கிறேன். அவ்வளவு விரைவாகவே சிறுபராயத்தை ஆட்கள் மறந்துவிடுகிறார்களா?

Remembering the brutal terrorism of Srilankan state armed forces
2 ஜனவரி 2016 04:55 PM
Srilankan Armed forces killed 5 innocent students of our school in 2006.
//On the 2 January 2006, five students were spending the evening at the beach in Trincomalee. At around 7:30pm, a grenade was thrown from a green three-wheeler towards the students, which according to reports then proceeded into Fort Frederick, the army headquarters. Three of the students were injured from the explosion.
Jeeps from the Sri Lankan police's Special Task Force (STF) arrived soon after, accompanied by the Superintendent of Police Kapila Jayasekara. Members of the STF, wearing full face masks, put the youths into their jeeps and beat them with their rifle butts.
The students were then pushed onto the road and shot on the seafront, by the statue of Mahatma Gandhi.
Remembering my brother Manoharan Ragihar who was one of those 5 students. RIP. - Jerad Evan //

ரகுமான் செய்த இற்றைப்படுத்தல்
1992-1994. அது இளையராஜா தமிழ் திரையிசை வணிகத்தில் உச்சத்தில் இருந்த
காலம். கிழக்குவாசல், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர் பாடல்களை விடச் சிறந்த
பாடல்களை இந்த உலகில் எவராலுமே தரமுடியாது என்ற அசையாத நம்பிக்கை நிலவிய
காலம். அக்காலத்தில் பாடல் கேட்பதற்கு நாம் ஒலிநாடா/பண்பலை வானொலி யைத்தான்
நம்பியிருந்தோம். காந்த ஒலிநாடா முடியுமானவரைக்கும் உயர் அதிர்வெண்கொண்ட
ஒலியையும் கையாளத்தக்கதாக தொழிநுட்பத்தில் வளர்ந்துவிட்டிருந்தது. ஒலிநாடா
இயக்கிகள் (Cassette Tape Players), ஒலிநாடாக்களின் தவிர்க்கமுடியாத
தொல்லையான "இரைச்சல்" உடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன. மெலிய "ஸ்..."
எனும் ஒலி. அதை Noise என்பார்கள். இரைச்சலைக் குறைக்கும் தொழிநுட்பம்
கொண்டவையாக (Noise reduction technology) அக்காலத்து வானொலிப்பெட்டிகள்
விளம்பரப்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் எனக்குத் தாழ் அதிர்வெண் (Bass)
இசைதான் அதிகம் பிடிக்கும். உயர் அதிர்வெண் இசை ஒலிநாடாவில் நன்றாக
இருக்காது என்பதோடு இரைச்சலும் தொல்லை கொடுக்கும். பாடலில் மணிச்சத்தம்
வருவதை விட Bass guitar/ Bass drum வருவது நன்றாக இருக்கும்.
Subscribe to:
Comments (Atom)