3 அக்டோபர் 2015 01:03 AM
கூகிளின் API இனைப்பயன்படுத்தி, கூகிளின் தமிழ் எழுத்துணரி மூலம் தமிழ்
ஆவணங்களை எண்ணிமப்படுத்துவதை எளிதாக்கித் தந்துள்ளார் சிறீனிவாசன்.
இப்போது பயன்படுத்திப் பார்த்தேன். அருமையாக வேலை செய்கிறது. கூகிள் API
அணுகலைப் பெறுவதற்கான அமைப்புக்கள் நிரலாக்கத்தோடு தொடர்பற்ற
பயனர்களுக்குச் சிக்கல் போல் தோன்றக்கூடும். கூகிள் Drive இன் இடவசதியும்
அனுமதிகளும் வரையறைக்குட்பட்டதாக இருக்கும் வரை இந்தச் சிக்கலைக் களைவது
எளிதன்று. மற்றபடி சிறீனிவாசன் எழுதியுள்ள நிரல் எமது வேலையை பலமடங்கு
எளிதாக்கித் தருகிறது.
அவரது நிரல் திறந்தமூலமாக இருப்பதால் இன்னும் சீர்படுத்தப்பட்டு வளரும் என்று எதிர்பார்க்கலாம்.
சிறீனிவாசனுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
https://github.com/tshrinivasan/google-ocr-python
No comments:
Post a Comment