Thursday, January 7, 2016

தமிழ் அடையாளத்தை முற்போக்கானதாக மாற்றியது எது?

24 டிசம்பர் 2015 01:48 PM

இலங்கையில் தமிழ் அடையாளம் பிற்போக்கான பழைமைவாத மரபு அடையாளமாகிப் போகாமல் அதனை முன்னோக்கிச் செல்லும் பெருமைகொண்ட அடையாளமாக மாற்றியதில் கம்யூனிஸ்டுகளதும் அவர்களது முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தினதும் பங்கு முக்கியமானது. சாதிகளாகப் பிரிந்துகிடந்த தமிழ்ச் சமூகத்தை, சாதிவேற்றுமை தாண்டிய "தமிழ்த் தேசிய இனமாக" மாற்றியதிலும் இலங்கையில் கம்யூனிஸ்டுக்களின் அரசியற் பங்களிப்புப் பெரியது.


தமிழ்நாட்டின் தமிழ் அடையாளம் முற்போக்காக மாறியது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பிரேம் இவ்வாறு கூறுகிறார் :
(இன்று கீழ்வெண்மணிப் படுகொலை நாள். பெரியார் மீது எனக்கு இருக்கும் விமர்சனங்களுள் முக்கியமானது கீழ் வெண்மணி பற்றிய அவரது பார்வை. இன்று இதனைப் பகிர வேண்டி ஏற்படுவது தற்செயல் நிகழ்வே)

//அயோத்திதாசர், பெரியார் என இருபெரும் அறிவாளுமைகள் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் தமிழ் மரபு வெறும் திருத்தொண்டர் மரபாக, திண்ணைத் தூங்கி மரபாக மட்டும்தான் இருந்திருக்கும். பெரியார் நம் கால அறிவுப் புரட்சியின் அடையாளம். நமது புதிய அடையாளம் ஒரு நூற்றாண்டு கால நீட்சியுடையது என்பதை நினைவில் கொண்டால்தான் நாம் இந்த நூற்றாண்டில் உயிர்ப்புள்ளவர்களாக முடியும்.//

No comments:

Post a Comment