Thursday, January 7, 2016

பாதையில் ராதைகள் : சில்லையூரின் திரைப்பாடல்

29 டிசம்பர் 2015 11:02 PM


பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்
பார்த்திருப்பார் கண்ணனைக் காத்திருப்பார் - நடை
பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்
பார்த்திருப்பார் கண்ணனைக் காத்திருப்பார்

காதலினால் அல்ல,
கண்ணனின் மேல் உள்ள போதையினால் அல்ல புகல் தருவார்

காதலினால் அல்ல,
கண்ணனின் மேல் உள்ள போதையினால் அல்ல,

புகல் தருவார் இல்லை..

பாதையில் எத்தனை ராதைகள்..

உண்டிடத் தீனியும் மேனியை மூடிட
ஒரு முழச் சேலையும் தந்துவிட்டால் - ஒரு
நொண்டியும் கண்ணனே பாதையில் ராதைக்கு.
நூற்றுக்கணக்கிலே பேதைகள்!
பாதையில்...

பாதையில் எத்தனை ராதைகள்!

சாலையிலும் தெரு மூலையிலும் சுழல்
ஞால முழுதிலும் கோலமழிந்து - ஒரு
பால கிருஷ்ணனின் பார்வை படும்வரை
வாலை மனங்களோ வாதையில்..
பாதையில்...

பாதையில் எத்தனை ராதைகள்..

-சில்லையூர் செல்வராசன்


(1976இல் இலங்கையில் உருவாக்கப்பட்ட "பொன்மணி" திரைப்படத்தில் வரும் பாடல். சீதனக்கொடுமை, ஆணாதிக்கம், வறுமை ஆகியவற்றுடன் வாதையில் உழலும் ராதைகள் பற்றியதாய் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. பாடலை கேட்பர் பொருள் விளங்கும்படி வாய்விட்டுப் பாடக்கூடிய இலங்கைப்பாடகர்கள் மிகவும் குறைவு. அதிலும் கருநாடக சங்கீதப் பாடகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், அவர்கள் பாடல் வரிகளைக் கொலை செய்து உண்டுதான் உயிர்வாழ்கிறார்கள். மிகவும் குறைந்த ஒலித்தரம் கொண்டதாய்க் கிடைத்த இப்பாடாலைக்கேட்டு சில்லையூராரின் வரிகளைப் பிரித்தெடுப்பது பெரும் பாடாய்ப் போய்விட்டது. "நொண்டியும் கண்ணனே" எனும் வரியில் உள்ள வன்முறையையும் புறக்கணிப்பையும் கண்டிக்கவேண்டியுள்ளது. "புகல் தருவார் இல்லை" எனும் வரி கேட்பதற்கான பாடல் ஒன்றில் மயக்கம் தராதபடி வேறு விதமாக எழுதப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது. மற்றபடி, எழுபதுகளின் இறுதில் வெளியான எந்தவொரு தென்னிந்தியப்பாடலுடனும் ஒப்பிடும்போது இப்பாடல் அரசியற் கூர்மை மிக்கதாகத் தனித்துத் தெரிகிறது)

இணைப்பில், 18:30 இல் பாடல் தொடங்குகிறது.


 

 இத்திரைப்படத்தினைத் தேடி எடுத்துப் பகிர்ந்து என்னைப் பார்க்கவைத்த Sinnakuddy Mithu அவர்களுக்கு மிகவும் நன்றி.

No comments:

Post a Comment