17 நவம்பர் 2015 01:57 AM
நான் பகிர்ந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு தனிப்பட அரட்டைக்கு வந்தார் ஒரு நண்பர்.
எக்காலமும் கடவுளை மன்றாடாத நாத்திகனான உனக்கு எதற்கு மற்றவர்கள் மன்றாடுவதைப்பற்றிப் பிரச்சினை என்று கேட்டார்.
நான் நாத்திகன் அல்லன், இறையை ஏற்காதவன் என்பதைப் புரியவைக்க
முயற்சித்துத் தோற்றுப் பின், அந்தப்படத்தில் சொல்லப்பட்டதோடு உங்களுக்கு
என்ன முரண்பாடு என்று கேட்டேன்.
எல்லாம் அல்லாவின் நாட்டப்படியேதான் நடக்கின்றன என்றார். பயங்கரவாதத் தாக்குதல்களுமா என்று வியந்தேன். ஆம் என்றார்.
இவ்வுலகே ஒரு சோதனைக்களம் என்றார். செத்துப்போன அப்பாவிகளுக்கு என்ன நீதி என்று கேட்டேன்.
மறுமையில் அல்லா நீதி கொடுப்பான் என்றார். அப்பாவிகளை அநியாயமாகக்
கொல்லும் இராணுவங்களுக்கும் குழுக்களும் என்ன தண்டனை என்று கேட்டேன்.
மறுமையில் அல்லா அவர்களுக்குக் கூலி கொடுப்பான் என்றார். பாலஸ்தீனத்தில்
நிகழ்பவையும் இஸ்ரேல் நிகழ்த்துபவையும் கூடத்தான் அல்லாவின் நாட்டமா என்று
கேட்டேன்.
அல்லா எதை நாடுகிறான் என்பது உனது சிற்றறிவுக்கு எட்டாது என்றார்.
அல்லா அநியாயங்களைத் தடுப்பதில்லையா என்று கேட்டேன், அநியாயக்காரர்களைப் பிறகு மறுமையில் தண்டிப்பான் என்றார்.
சூடாகப்போன உரையாடல் கடைசியில் சூடு தணிந்ததும் "அல்லா என்றாவது உனக்கு
நல்ல புத்தியைக் கொடுத்து உலகின் உண்மையான ஒரேமதமான இசுலாத்தின்பால்
ஈர்ப்பான்" என்று வாழ்த்திச் சென்றார்.
நூற்றுக்கணக்கான தடவைகள்
வெவ்வேறு மதத்தினர் பல்வேறு உரையாடல்களில் எனக்கெதிராக வைத்த அதே தர்க்கம்;
அதே வாதம். உண்மையில் அதில் எந்தவிதமான தர்க்கமுமே இல்லை.. சும்மா
சொற்களால் விளையாடியே கடவுளை நிறுவி விடலாம் என்று நம்புகிறார்கள்.
கடைசியில் இப்ராகீம் (ஏபிரகாம்) இன் கதையை நினைவுபடுத்தி, அல்லா என்னுடன்
வாய் திறந்து பேசட்டும்; பேச முடியாத கடவுளை இப்ராகீம் மறுத்தது போல,
அல்லா வாய் திறந்து பேசாதவரைக்கும் அல்லாவை ஏற்காமலிருக்கிறேன் என்று
சொல்லி அனுப்பி வைத்தேன்.
No comments:
Post a Comment