Thursday, January 7, 2016

Facebook profile கொடியை விமர்சித்தவர் மீதான மேலோட்டமான விமர்சனங்கள்

18 நவம்பர் 2015 04:34 PM

பிரான்சு மீதான தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பார்பதற்கு Facebook கொண்டுவந்த வசதியும் பிரான்சுக் கொடியை எங்கள் அறிமுகப் படம் மீது போட்டுக் கொள்ளும் வசதியும் பலராலும் விமர்சிக்கப்பட்டது.

இவ்விமர்சனங்கள் பல்வேறு விதமானவையாகவும் வெவ்வேறு அரசியற் தளத்தைக் கொண்டவையாகவும் இருந்தபோதிலும் எல்லாமே பொதுவான கோபத்திலிருந்தே எழுந்தன. உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா என்ற தார்மீகக் கோபமே அது.


எனது நண்பர் வட்டங்களுக்குள், இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் மீது, அரசியலை மேலோட்டமாகப் பார்க்கும் பலர் பல்வேறு விதமான கிண்டல்களையும் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். அதிக 'லைக்' வாங்குவதற்காக விமர்சிக்கிறராக்ள் என்றும், வித்தியாசமாகத் தம்மைக் காட்டிக்கொள்வதற்காக விமர்சிக்கிறார்கள் என்றும், மனநோயாளிகளென்றும், இந்த விமர்சனங்களை எவரும் கண்டுகொள்ளப்போவதில்லை என்றும் இந்தக் கிண்டல்கள் பலபடித்தானவையாக இருந்தன.

விமர்சனங்கள் ஏன் செய்யப்படுகின்றன என்பதற்கு ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்க முடிந்த இவர்களால், அந்த விமர்சனங்கள் வெளிப்படையாகவே முன்வைத்த அந்த அரசியற் தர்க்கத்தை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஆனால் இவ்விமர்சனங்கள் வெறுமனே லைக் வாங்க ஆசைப்படும் ஒன்றிரண்டுபேருடைய புலம்பல் அல்ல, சீரியசாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய முக்கிய எதிர்ப்பு அரசியற் குரல் என்பதை Facebook ஒத்துக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இது குறித்து மன்னிப்புக் கேட்டு, காரணங்களை முன்வைத்த Facebook, இப்போது நைஜீரியா தாக்குதலுக்கு இவ்வறான பாதுகாப்புச் சோதனையை நடைமுறைப்படுத்திப் பாவமன்னிப்புக் கோர முயன்றிருக்கிறது.

எப்போதும் மேலோட்டமான கருத்துக்களை விழுங்கியபடி, எப்போதும் அதிகாரம் சொல்வதை நம்பியபடி, எப்போதும் பிரபலமானவற்றையே பிரசாரம் செய்தபடி வாழும் ஆட்கள், இனியாகிலும் மாற்றுக் குரல்களை மதிக்கப் பழகவேண்டும். மாற்றுக் கருத்துகக்ளைக் காது கொடுத்துக் கேட்கப்பழகவேண்டும். எவ்வளவு காலத்துக்குத் தான் அதிகாரங்கள் வார்த்தெடுத்த நூல் பொம்மைகளாக வாழப் போகிறீர்கள்?

பொய் எப்போதுமே பகட்டானதாகவும் நல்ல விளம்பரம் கொணடதாகவுமே தான் இருக்கும். உண்மைதான் மெல்லிய குரலாக, ஆங்காங்கே சிறு சிறு விமர்சனங்களாக மட்டுமே வெளியே வரமுடிகிறது.

//Facebook activated its "Safety Check" feature in Nigeria after more than 30 people were killed and dozens wounded in a blast at a market in the northeastern city of Yola.

Mark Zuckerberg, founder of the social network, made the announcement in a post on his account early Wednesday.

"We've activated Safety Check again after the bombing in Nigeria this evening," Zuckerberg said after Tuesday's attack.//

No comments:

Post a Comment