Thursday, January 7, 2016

செய்தித் தலைப்புக்களின் கலைச்சொற் பயன்பாட்டின் அரசியல்

20 நவம்பர் 2015 11:40 PM

நேற்றைய சமூகவிஞ்ஞான கற்கைவட்ட உரையாடலில், பாரிசு தாக்குதலை முன்வைத்து ஏராளமான சமகால உலக அரசியல் விடயங்களை அறிய முடிந்தது.

எனது கவனத்தை அதிகம் கவர்ந்தது பெரிய/அறியப்பட்ட ஊடகங்களின் செய்தித் தலைப்புகளில் இருக்கும் அரசியலும், கலைச்சொற் பயன்பாட்டின் அரசியலும் தான்.

Dailymirror எவ்வளவுதான் சொன்னபோதும், "அரசியல் கைதிகள்" என்ற கலைச்சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள் "முன்னாள் புலிகள்" என்றுதான் சொல்வார்கள்.


அதேபோன்று சிரிய அகதிகள் விடயத்தில் அல்ஜசீராவைத் தவிர ஏனைய மேற்குலக ஊடகங்கள் எல்லாம் "Migrants (புலம்பெயர்வோர்)" என்றுதான் பயன்படுத்துகின்றன. "ஏதிலிகள்/அகதிகள்/Refugees" எனும் கலைச்சொல்லைப் பயன்படுத்தா.

லெபனானில் ISIS ஒரு சந்தையைத் தாக்கி மக்களைக் கொன்ற செய்தியை "இஸ்புல்லா அமைப்பின் கோட்டைக்குள்" ISIS குண்டு வைத்தது என்றுதான் தலைப்பாக்குகிறார்கள்.

இனிமேல் செய்தித் தலைப்புக்களில் மேற்கு ஊடகங்கள் ISIS/IS என்று பயன்படுத்தாமல் "தாயிஷ்" என்றே பயன்படுத்தப்போகின்றன என்றும், அதற்கான அரசியல் காரணங்களையும் Dilshan Mohamed விளக்கினார்.

மிகவும் பயனுள்ள உரையாடலைச் செய்து நிறையத் தகவல்களை வழங்கிய MeeNilankco Theiventhran வுக்கு நன்றி.

No comments:

Post a Comment