Thursday, January 7, 2016

புதியவர்கள் கலைப்படைப்புக்களில் காதலைத் தவிர்க்கவும் : உரையாடல்

13 நவம்பர் 2015 ·

இளைஞர்கள் தமது கலைப்படைப்புக்களைக் காதல் தொடர்பானதாக இல்லாமற் பார்த்துக்கொண்டாலே, அவை தரமானதாக அமைவதற்கான வாய்ப்பு அதிகரித்து விடுகிறது.
எனவே, தரமான பாடல்களை, படங்களை, இலக்கியத்தைப் படைக்க விரும்புவோர் உங்கள் படைப்புக்களின் கருப்பொருளாகக் காதல் இல்லாதபடிப் பார்த்துக்கொள்ளுங்கள். 
 
 
 
Purusoth Vivekananthan Purusoth இல்லை. இளைஞர்கள் படைப்புக்களில் காதல் இருந்தால் அது ஒன்றும் அபத்தம் இல்லை. ஆனால் அதை கொண்டாட்ட மன நிலை சேர்ந்த சடங்கோடு சொல்லாமல் இருந்தால் ஆரோக்கியமானது . 

Anojan Thirukkethesewaranathan இலக்கியங்களும் படைப்புக்களும் காதலைப் பேசுவதாய் தெரியவில்லை. அவை சொல்லும் காதல் பெரும்பாலும் (90%) காதலுக்குப் புறம்பாகவே இருக்கிறது. வெறும் புனிதப்படுத்தலும் மிகை கொண்டாட்டமும் மட்டுமே அதில் மிஞ்சிக் கிடக்கிறது. அதில் சொல்லப்படும் காதலுக்கும் நிஜ வாழ்வின் காதலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. உண்மையில் காதல் என்பது வாழ்வில் ஏனைய எல்லா அம்சங்களுடனும் (பிறப்பு இறப்பு வெற்றி தோல்வி உழைப்பு சுரண்டல் போராட்டம்) தொடர்புடையது. அத்தனையையும் ஒதுக்கிவிட்டு காதலை மட்டுமே புனிதப்படுத்தலும் மிகை கொண்டாட்டமுமாகக் காட்டுவது அபத்தமானது.
 
Nijo Selvarajah I support u Mauran anna .... Coz I also wondered recently y couldn't they provide their art apart from the motto of love ..... This also one of the reason why I admired of Sujeeth Anna's creativity and his out put .....
 
Muralitharan Mayuran Mauran அடடா..

நான் சொல்லவந்தது வேறு இங்கே உரையாடல் போய்க்கொண்டிருக்கும் திசை வேறு..


நான்சொன்னது வெறும் பரிந்துரைதான். கட்டளை அல்ல.

எனது பரிந்துரை எப்படியானதென்றால், வியாபாரிகளே, கொல்லர் தெருவழியே போகும்போது ஊசி விற்காதீர்கள், தேநீர் போன்று வேறு பொருட்களை விற்க முயலுங்கள் நல்ல வியாபாரம் நடக்கும் என்று சொல்வதைப்போன்றது.

திறமையான வியாபாரி கொல்லர் தெருவிலேயே தனித்துவமாக ஊசி விற்று முன்னேறக்கூடும். ஆனால் அவளே தேநீர் விற்பாளானால் வியாபாரத்துக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதே இங்கு நான் சொன்னது.

சுற்றிச் சுற்றி எல்லா இடங்களிலும் காதலைக் கருப் பொருளாகக் கொண்ட படைப்புக்களே குவிந்து கிடக்கின்றன. அவற்றின் பாதிப்பிலிருந்து நாம் விடுபட்டுத் தனித்துவமான ஒன்றைப் படைப்பதென்பது அதிகமதிகம் கலையுழைப்பைக் கோரும் ஒரு பணி. பட்டறிவு/வாழ்வு மீதான ஆழமான நுண்ணிய அவதானத்தைக் கோரும் பணி. அவ்வாறானதொரு கலையுழைப்பைச் செலுத்த முடியாதோரும் அக்கறையற்றோரும் இயல்பாக "போலச் செய்வ"திலேயே போய் முடிவர்.

காதலை விட்டு விட்டு வேறொரு கருப்பொருளைத் தேடும்போது, புதிய புதிய கருப்பொருட்களைக் கலைப்படைப்புகளுள் கொண்டுவருவதற்கு அவர்களுக்குக் கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம். தமது தனித்துவத்தைக் காண்பிக்கக்கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.

கலைப்படைப்புக்களை நுகர்வோருக்கும் ஒரே கருப்பொருளில் ஏற்படும் சலிப்பு இல்லாமல் புதுப்புது அனுபவங்கள் கிட்டும்.

நான் சொன்னது தரமான/தனிதுவமான படைப்பொன்றை வெளிக்கொணர்வதற்கான எளிய வழிமுறை.
 
 
Prashanthan Vilvarajah இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு தமிழ் பாட்டு பார்த்தன் ... தெரிஞ்ச ஓரு ஆள் தன் நடிச்சு இருக்கார் ... அந்த பாட்டுல ஒரு மண்ணும் இல்லை , காதல் தோல்வி அதால பாட்டு முழுக்க அவர் புகை பிடிச்சுக்கொண்டே இருக்கார் .... சப்பா .. இத தவிர வேற எதுவுமே தெரியாதா ???? வித்தியாசமான முயற்ச்சி எப்பவுமே வெற்றி பெரும் எண்டதுக்கு உதாரணம் வட்டப்பணம், மிச்சக்காசு மாதிரியான குரும்படங்களும் , Elysium ட "குப்ப " பாட்டும் தான் ..
 
Hari Keerthana இப்படி ஒரு மேலோட்டமான கருதுகோளை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

படைப்புக்களின் உன்னதம் படைப்புகளின் கருப்பொருளில் இல்லை.

படைப்புக்களையும் வியாபாரத்தையும் ஒப்பீடு செய்வதும் அவ்வளவு பொருத்தமான உதாரணமாய் இல்லை.
"சுற்றி சுற்றி எல்லா இடமும் காதலை கருப்பொருளாக கொண்ட பதிவுகளே குவிந்து கிடக்கின்றன." ஒருவர் தம்மை பாதித்த விடயங்களையே படைப்புகளாக்க முடியும் .
ஆக இளைஞர்கள் காதலால் அதிகம் பாதிப்படைகிறார்கள் போலும்.

முன்னர் ஒரு போது நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டு இருக்கும்
போது அவர் கேட்டார்" ஏன் பெண்கள் பெண்களை பற்றி மட்டுமே ( பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே ) எழுதுகிறார்கள் . அவர் மறைமுகமாக பெண்களின் எழுத்துக்களை கிண்டல் செய்தார்.
பெண்களுக்கு வேறு எதுவும் தொியாது என்பதை போல.. இந்த மாதிரி கேள்விகளுக்கு எனது பதில் மிகவும் எளிமையானது.
ஒருவர் தம்மை பாதிக்கின்ற விடயங்களை அடிப்படையாக கொண்டே எழுத முடியும் ( அல்லது அது வியாபாரம் )படைப்புகளாக்க முடியும்.

இதில் ஏன் அதை எழுத இல்ல இதை எழுத இல்ல என்று கேள்வி கேட்க யாருக்கு அதிகாரம் இருக்கின்றது ?
சந்தைப்படுத்தலுக்கான தந்திரங்கள் பண்டங்களுக்கே பொருத்தம்.
மனித உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்க்கும் படைப்புகளுக்கு அல்ல.
 
 
Hari Keerthana Muralitharan Mauran நீங்கள் சொல்லுது எனக்கு புரியாமல் இல்லை. நீங்கள் சொல்லுதெல்லாம் சினிமா போன்ற கலைப்படைப்புகளுக்கும் அல்லது
மற்றவரது அங்கீகாரத்தை வேண்டி நிற்க்கும் கலைப்படைப்புகளுக்கும் பொருந்தும். டான் பிரவுன் இன் நாவல்கள் அதிகம் அதிகம் விற்பனைக்
குள்ளாகுவதற்க்கு அவர் எழுத எடுக்கும் கருப்பொருள் காரணம்.( சர்ச்சைக்குரிய கருப்பொருள் அதிகம் விற்பனை ஆகும் ) ஆனால் அவரது நாவல்களின் தரத்தை அது தீர்மானிக்கின்றதா என்பது சந்தேகமே.

என்னை பொறுத்தவரைக்கும் கலைபடைப்பினது தரம் என்பது அதன் உண்மைத்தன்மையும் உயிர்ப்புமே.
என்னால் போர்சூழல் சார்ந்த கவிதைகளை எழுதவியலாது.நான் எழுத முயற்ச்சி செய்தாலும் அச்சூழலில் அதனுடன் வாழ்ந்த ஒருத்தர் எழுதுகின்ற அளவிற்க்கு உயிர்ப்புடன் இருக்குமா என்பது சந்தேகமே
என்னை அதிகம் அதிகம் பாதித்த விடயங்களையே என்னால் உயிர்ப்புடன் எழுத்துக்களாக்க முடியும் .அப்படி ஆக்கும் போதே அது தரமுடையதாயும் இருக்கும் .

உங்களது பிரதான நிலைத்தகவல் நீங்கள் உண்மையில் சொல்ல எத்தனித்த விடயத்தை சொல்லுவதாய் இல்லை ( நீங்கள் உண்மையில் சொல்ல எத்தனிக்கும விடயத்தில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை
ஆனால் உங்களால் நீங்கள் சொல்ல நினைப்பதை சொற்களாக்க முடியவில்லை. அதனால் அது மயக்கத்தன்மை வாய்ந்த பிழையான அர்த்தங்களை கொடுக்கின்றது . )
 
MaThi Sutha என்னிடம் ஏன் காதல் படைப்புக்கள் செய்வதில்லை என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுவதுடன் என்னால் காதல் படைப்புக்கள் செய்ய முடியாது என்ற ஒரு எள்ளலும் சில தரப்பிடம் இருந்தது இருக்கிறது smile emoticon உண்மையில் என் பக்க பிரச்சனை அதுவல்ல என்னிடமும் காதல் தொடர்பான கதை இருக்கிறது அதை முடித்து விட்டு திருப்பி பார்க்கும் போது ”ச்சே இது முதலே எங்கையோ படிச்சது பார்“த்து மாதிரி இருக்கு இதை இந்த கதை யாருமே சொல்லாதது இதை செய்வம்” என்று வேறு ஒன்றை கையில் எடுத்திருக்கிறேன்....     


No comments:

Post a Comment