ஆன்ட்ரொய்ட் தமிழ் விசை செயலியில் ரெங்கநாதன் விசைப்பலகையை வெற்றிகரமாகச் சேர்த்திருக்கிறேன்.
ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் "பாமினி" வடிவத்திலேயே தட்டெழுதிப் பழக்கப்பட்டவர்கள். ரெங்கநாதன் வடிவமானது பாமினியின் சற்றே சீர்திருத்தப்பட்ட வடிவமாகும். இதுவே இலங்கை அரசால் அங்கீகரித்து நியமப்படுத்தப்பட்ட விசைப்பலகை வடிவம்.
பாமினியிலும் ரெங்கநாதனிலும் இருக்கிற சிறப்பம்சம் அது கையால் எழுதுவதைப்போலவே தட்டெழுத உதவுகிறது என்பதாகும். அதாவது, "கோ" என்ற எழுத்தை எழுத, ஒற்றைக்கொம்பு + க + அரவு என்றே தட்டெழுத வேண்டும். இதனை "Type as you write" என்பார்கள். இது தமிழின் எழுதும் முறையைக் குழப்புவதில்லை.
ரெங்கநாதன் பற்றி அறிமுகப்படுத்துவதென்றால் தனிக்கட்டுரை எழுத வேண்டி வரும்.
அதைத் தவிர்த்து, ரெங்கநாதன் பயனாளர்களுக்காக இன்று இப்பொதியினைப் பரிசாகத் தருகிறேன்
குறிப்பு : இது சோதனைப்பதிப்பே. மோசமான வழுக்கள் இருக்கலாம். சோதனை நோக்கில் மட்டும் பயன்படுத்துக.
(Github இல் commit பண்ணி விட்டு தமிழாவில் முறைப்படி அறிவிக்கிறேன். தமிழா குழுவினர் மன்னிக்கவும்.)
விசைப்பலகையின் எழுத்துக்கள் இன்னமும் சீராக வடிவமைக்கப்படவில்லை.
zero width non joiners ஆங்காங்கே அகற்றப்படவில்லை.
கூட்டெழுத்துக்களில் வழுக்கள் இருக்கலாம் (க்ஷ், ஸ்ரீ போன்றவை)
ரெங்கநாதனின் சில நியமங்கள் இன்னமும் இல்லை (பின்னிருந்து delete பண்ணுவது தொடர்பான நியமம் போன்றவை)
தமிழ் எண்கள் இன்னமும் சேர்க்கப்படவில்லை.
இரண்டொரு நாட்களில் இவற்றை முழுமைப்படுத்தி விடுகிறேன்.
http://infoshipco.com/apps/

No comments:
Post a Comment