Friday, July 17, 2015

அகராதி : கவிதை

நிலா மஞ்சள் நிறமானது.
பூ நீல நிறமானது; ஐந்து இதழ்கள் கொண்டது.
பாடலில் இருபது சொற்கள் மட்டுமே இருக்கும்.
கல்லொன்றின் எடை எப்போதுமே ஐந்து ரூபாய் குற்றியின் எடைக்குச் சமமாக இருக்கும்.
இல்லை என்பவர்கள்,
நிலாவுக்கும் பூவுக்கும் பாடலுக்கும் கல்லுக்கும்
எனது அகராதியின் வரைவிலக்கணங்களைப்
படித்துவிட்டு வாருங்கள்.
நீங்கள் வைத்திருக்கும் அகராதிகள் பழையவை.
ஏய், நீ பாடியது பாடலே அல்ல. உன் தோட்டத்தில் உள்ளவை பூக்களே அல்ல!
(அகராதியைப் பார்க்க விரும்புபவர்கள் இப் பதிவுக்கான முதலாவது பின்னூட்டத்தினைப் படிக்கவும்)

‪#‎வரைவிலக்கணம்‬ ‪#‎முக்கியம்‬ ‪#‎அமைச்சரே‬ ‪#‎டெபினிசன்‬ #டெபினிசன்!



Muralitharan Mauran

==அகராதி==

நிலா : பூமியின் துணைக்கோள். மஞ்சள் நிறமானது.
பூ : ஐந்து இதழ்கள் கொண்ட நீல நிறமான தாவரப் பகுதி.
பாடல் : இருபது சொற்கள் கொண்டதாய் எழுதிப் பாடப்படும் இலக்கிய வடிவம்.
கல்: ஐந்து ரூபாய்க் குற்றிக்குச் சமமான எடைகொண்ட, நிலத்தில் கிடக்கும் பொருள்.
 

Gnanadas Kasinathar

வாசிக்க நல்லாயிருக்கு. சத்தியமா எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. Am I a Tube Light?
 

Muralitharan Mauran

Tube light வெள்ளை நிறமானது. எனவே நீங்கள் அதுவல்ல Gnanadas Kasinathar
 
 

Muralitharan Mauran

நீங்கள் போட்டது பின்னூட்டமே அல்ல. நீங்கள் இதுவரை எடுத்தது எதுவும் சினிமாவே அல்ல. நீங்கள் எழுதியவை சிறுகதைகளே அல்ல.

சந்தேகம் இருந்தால்,

பின்னூட்டம், சினிமா, சிறுகதை ஆகியவற்றுக்கு எனது அகராதி என்ன வரைவிலக்கணம் கொடுத்துள்ளது என்று ஒரு முறை நீங்கள் பார்க்க வேண்டும்.

வரைவிலக்கணம் முக்கியம் அமைச்சரே.. 
 

Shayanthan Kanaganayagham

Who said your agarathi is correct? we have a different agarathi... smile உணர்ச்சிலை

Muralitharan Mauran

My Agarathi is correct in my agaraathi tongue உணர்ச்சிலை
 

No comments:

Post a Comment