இளைஞர்களை அரசியல் கதைக்கவிடாமற் செய்வது அதிகார சக்திகளின் சதித்திட்டமாகும். அச்சத்தை எல்லா மூலைகளிலும் நிரப்பி, அஞ்சி நடுங்க வைத்து, பெற்றோர் மூலமும் மற்றோர் மூலமும் அச்சுறுத்தப்பட்டு சிறுவயது முதலே அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களாக இளைஞர்கள் மாற்றப்படுகிறார்கள்.
"எனக்கு அரசியல் பிடிக்காது" என்பது ஒரு நாகரிகமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறு சொல்வது தான் இழிவானது.
எமக்கென ஓர் அரசியல் நிலைப்பாடு இருக்க வேண்டும். எமக்கென ஒரு Phone
Brand, Software Brand, Designer Brand இருப்பதை விடப் பலமடங்கு
முக்கியமானது எமக்கென ஓர் அரசியல் நிலைப்பாடு இருப்பது.
அரசியல் நிலைப்பாடு சும்மா உருவாகாது. தொடர்ச்சியாக அரசியல் மாற்றங்களை அவதானிப்பதனூடும், மற்றவரோடு விவாதிப்பதனூடும், உரையாடுவதனூடுமே அது உருவாகும். எதிரெதிர்க் கருத்துக்கள் முட்டி மோதும்போதே தவறான கருத்துக்களை நாம் மாற்றிக்கொண்டு எமது அரசியல் நிலைப்பாட்டினைப் பட்டை தீட்டிக்கொள்ள முடியும்.
அரசியல் என்பது மகிந்தவா மைதிரியா என்பதல்ல. அது மேலோட்டமான "அரசியல் யாவாரம் ". அதில் அதிகம் மினக்கட்டு வேலையில்லை.
எம்மைச்சுற்றியிருக்கும்
இந் நாட்டு மக்கள் ஒவ்வொருவரதும் வாழ்வில் உலகத்தினதும் இலங்கையினதும்
அரசியல் மாற்றங்கள் எதைச் செய்கின்றன; எதைச் செய்ய வேண்டும்; மக்களின்
நல்வாழ்வினை உருவாக்க எவ்விதமாக அரசியல் ரீதியாக நாம் செயற்பட வேண்டும்
என்று தேடுவதே ஆரோக்கியமான அரசியல். மக்கள் அரசியல்.
இனியும் அரசியல் கதைக்க அஞ்சினால் அது கோழைத்தனம்.
இப்போது திறந்திருக்கும் கதவு அரசியல் கதைப்பதற்கான மெல்லிய வெளியை எமக்குத் தந்திருக்கிறது. இதனை முழுமையாகப் பயன்படுத்தியாக வேண்டும்.
எனது fb நண்பர்கள் பலர் துணிந்து தொடர்ச்சியாக அரசியல் கதைக்கிறார்கள், இது மகிழ்ச்சி தருகிறது.
அரசியல் ரீதியாகத் தெளிவான மக்களை நாம் உருவாக்க உருவாக்க, அரசியல் ரீதியாக எம்மை ஏமாற்றுபவர்கள் தோற்றுக்கொண்டு போவார்கள்.
அரசியல் கதைப்போம்! இனியாவது...
No comments:
Post a Comment