யாழ்பாணத்தில் கோபம் கொண்ட போராட்டக் காரர்களால்
நீதிமன்றக் கட்டடம் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தென்னிலங்கைச் சிங்கள, ஆங்கில
ஊடகங்களும் இனவாத அரசியல்வாதிகளும ் முடிந்தளவுக்குத ் திரித்துத் தமது இலாபத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவர்களது பிரசாரத்துக்கு எடுபட்டுப்போன சாதாரண சிங்கள மக்களும் இவர்களது நிகழ்ச்சிநிரலுக ்கேற்ப இச்சம்பவத்தைத் தவறாகவே புரிந்துகொண்டும ் இது தொடர்பாகக் கருத்துச் சொல்லியும் வருகிறார்கள்.
உண்மையில் இந்த இனவாதிகளுக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு ம் தேவைப்படுவதெல்ல ாம்,
1. தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை வைத்திருக்கவேண் டும். கொஞ்சம் நெகிழ்ச்சியைக் கடைப்பிடித்தாலு ம் தமிழ் மக்கள் பயங்கரவாதத்தில் இறங்கிவிடுவார்க ள். அதற்கு நல்ல உதாரணம் நீதிமன்றத்துக்க ுக் கல் எறிந்தது.
2. மைத்திரி ஆட்சியில் தமிழர்களுக்குக் குளிர்விட்டுப் போய்விட்டது. மைத்திரியின் ஆசியுடன் தமிழர்கள் மீண்டும் புலிகளாகிவிட்டா ர்கள். நீதிமன்றத்துக்க ுக் கல் எறிகிறார்கள்.
3. வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் தமது கோபத்தை வெளிப்படுத்துவத ற்கும் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. தமிழர்கள் என்ன நடந்தாலும் கைகட்டி வாய் பொத்தி அடங்கிக் கிடக்க வேண்டும்.
4. இதை இப்படியே விட்டால் கல்லுக்குப் பதிலாக வெடிகுண்டுகளும் நீதிமன்றத்துக்க ுப் பதிலாக காவரண்களும் சிங்கள மக்களும் என்கிற நிலை ஏற்படும்.
என்று சிங்கள மக்களை நம்ப வைப்பது. இதன் மூலம் இனவாதத்தைக் கிளறி, தமது அரசியல் வியாபாரத்தைச் செய்வது. முக்கியமாக மைத்திரி ஆட்சியில் ஏற்பட்டுள்ள ஒன்றுக்கும் உதவாத சிறு சனநாயக இடைவெளியைக் கூட இல்லாமலாக்கி, மறுபடியும் இராணுவ ஆட்சியை நிறுவி, கேட்பாரற்றுக் கொள்ளையடிப்பது.
மக்களுக்கு ஏற்பட்ட கோபம் நியாயமற்றதா?
நெடுங்குளத்தில் பாலியல் வதை செய்யப்பட்டுக் கடித்துக் குதறப்பட்ட 7 வயதுச் சிறுமிக்கு நீதி எங்கே? அதைச் செய்தவன் ஒரு காவல்துறைக்காரன ். காரைநகரில் 11 வயதுச் சிறுமியை பாலியல் வதை செய்த கடற்படை வீரனுக்கு என்ன நடந்தது ? அண்மையில் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளா க்கப்பட்டுக் கொல்லப்பட்ட வன்னி மாணவிக்கு நீதி எங்கே? அம்மாணவியின் அம்மம்மா காவல்துறையால் அச்சுறுத்தப்பட் டுமிருக்கிறார். இத்தனை காலமாக அரச ஆசீர்வாதத்துடன் நடந்த அத்தனை பாலியல் வதைகளுக்கும் நீதி எங்கே? நீதி கேட்டவர்களுக்கு
என்ன நடந்தது? இதுவெல்லாம் மக்களுக்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும்?
எல்லாவற்றையும் கொண்டுவந்து அரச படைகளுக்கு நேரடியாகத் தொடர்பில்லாத இந்தச்
சம்பவத்தில் காட்டுகிறார்கள் மக்கள். இது தவறா?
கொழும்பில் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்து காவற்துறையைத் தாக்கவில்லையா? பேருவளையில் மாவனல்லையில் ஊர்வலம் போய் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையா? நேற்று முன்தினம் அம்பாந்தோட்டைத்
துறைமுகத் தொழிலாளர்கள் காவல் துறையைத் தாக்கவில்லையா? வெலிவேரியாவில்
என்ன நடந்தது? தமிழர்களோ முஸ்லிம்களோ போராடினால் மட்டும்தான் அது
பயங்கரவாதமா?
போராட்டக்காரர்க ள் நடந்துகொண்ட விதம் முதிர்ச்சியற்றத ு.
மோசமானது. அதை நான் ஆதரிக்கவில்லை. முறையான முற்போக்கான அரசியல்
கட்சியொன்றின் தலைமை இல்லாத மக்கள் போராட்டங்கள் ஏதாவதொரு கட்டத்தில்
மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பது என் கருத்து. ஆனால் இந்தத்தவற்றை
தமிழர்கள் செய்தால் மட்டுமே தவறு சிங்களவர்கள் செய்தால் அது அறியாமை என்று
கருதும் இனவாத மனநிலையையே நான் விமர்சிக்கிறேன் .
நீதிமன்றம் தாக்கப்பட்டதை இவ்வளவு தூரம் பெரிதுபடுத்தும் இந்த ஊடகங்கள் இதுவரை காலமும் செய்யப்பட்ட பாலியல்வதைகள் தொடர்பான செய்திகளை எவ்வளவு துரம் நேர்மையாக வெளிப்படுத்தின? அக்கறையாக நீதிகேட்டுச் நின்றனவா?
இந்த நாட்டை நாசமாக்குபவர்கள ் யார்?
இவர்களது பிரசாரத்துக்கு எடுபட்டுப்போன சாதாரண சிங்கள மக்களும் இவர்களது நிகழ்ச்சிநிரலுக
உண்மையில் இந்த இனவாதிகளுக்கும்
1. தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை வைத்திருக்கவேண்
2. மைத்திரி ஆட்சியில் தமிழர்களுக்குக்
3. வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் தமது கோபத்தை வெளிப்படுத்துவத
4. இதை இப்படியே விட்டால் கல்லுக்குப் பதிலாக வெடிகுண்டுகளும்
என்று சிங்கள மக்களை நம்ப வைப்பது. இதன் மூலம் இனவாதத்தைக் கிளறி, தமது அரசியல் வியாபாரத்தைச் செய்வது. முக்கியமாக மைத்திரி ஆட்சியில் ஏற்பட்டுள்ள ஒன்றுக்கும் உதவாத சிறு சனநாயக இடைவெளியைக் கூட இல்லாமலாக்கி, மறுபடியும் இராணுவ ஆட்சியை நிறுவி, கேட்பாரற்றுக் கொள்ளையடிப்பது.
மக்களுக்கு ஏற்பட்ட கோபம் நியாயமற்றதா?
நெடுங்குளத்தில்
கொழும்பில் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்து காவற்துறையைத் தாக்கவில்லையா? பேருவளையில் மாவனல்லையில் ஊர்வலம் போய் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையா? நேற்று முன்தினம் அம்பாந்தோட்டைத்
போராட்டக்காரர்க
நீதிமன்றம் தாக்கப்பட்டதை இவ்வளவு தூரம் பெரிதுபடுத்தும்
இந்த நாட்டை நாசமாக்குபவர்கள
Defend Snowden
எல்லாவற்றையும் கொண்டுவந்து அரச படைகளுக்கு நேரடியாகத் தொடர்பில்லாத இந்தச் சம்பவத்தில் காட்டுகிறார்கள்மக்கள். இது தவறா? மயூரன் உம்மில் எனக்கு பயங்கர கோபம் வருகிறது...இப்ப டி எழுதும் போது நீர் என்ன விளக்கத்தினை அடிப்படையாக கொண்டிருகிறீர்? ஏன் தமிழர்கள் என்ற ப த த்தினை பாவிக்கிறீர்கள் ? காவாலிகளுக்கும் கருங்காலிகளுக்க ும் தமிழர் சிங்களவர் என்ற வித்தியாசம் கிடையாது அதுமட்டுமல்ல பெரும் பண பலம் மற்றும் அதிகார பலத்தின் பின்னணி இல்லாமல் அல்லது மறைமுகமான ஆதரவில்லமால் இந்த கொடூரமான காரியத்தினை செய்திருக்க முடியாது என்பது எனது துணிபு. இதை ந ஏன் விளங்க மறுக்கிறீர்கள். இந் படுகொலைக்கும் இலங்கையில் தமிழ் மக்கள் அப்பாவி சிங்கள மக்கள் மீது இதவரை நடத்தப்பட்டுவந் த படுகொலைகளுக்கம் ,யுத்த த்தின் இறுதியில் முன்னாள் பெண் போராளிகள் மீது செய்யப்பட்ட வன்புணர்வுக்கும மிக நெருக்கமான தொடர்புண்டு.அதன ் ஒரு பகுதியாகத்தான் இதை நாம் நோக்கவேண்டும்.இ தை செய்தவர்களுக்கு ம் அரசியல் மற்றும் இராணுவ அதிகார்தில் இருப்பவர்களுக்க ும் தொடர்பு இருக்கிறது அல்லாது போனால் எப்போதே அதை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டி ருக்கலாம்,இப்பட ி ஒரு மக்களின் தன்னெழுச்சி இடம்பெற்றிருக்க ாது..இது ஒரு திட்டமிட்ட ஒழுங்குபடுத்தப் பட்ட வன்புணர்வு படுகொலையாகும் ..நீதி மன்ன்றத்தினை தாக்கியது கருங்காலிகள் மற்றம் அது திட்டமிட்டு ஒழங்குபடுத்தப்ப ட்ட நடவடிக்கையாகும் . அதை பாவித்து மக்களை கலைப்பதற்கும் பயங்கரப்படுத்து வதற்கும்,முக்கி யமாக பெண்ணின் தாயார் குடும்பத்தினை பயமுறுத்துவதற்க ும் செய்யப்பட்டிருக ்கிறது மற்றும் இப்படியான பிரச்சாரங்களை முடுக்கி விடுவதற்கும் செய்யப்பட்ட கலவரமாகும். ஆகையால் ஒரு சம்பவத்தினை அப்படியே நம்பிவிடமுடியாத ு,அலசி ஆராயவேண்டும், ஏன் இப்படியான கலவரத்தினை மாணவர்கள் செய்யவேண்டும்?
Defend Snowden
ஏன் அரசாங்கத்தால் அல்லது அரசியல் கட்சிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருங்காலிகள் செய்திருக்க முடியாது? உண்மையில் சாதாரண உழைக்கும் மக்களின் அடித்தளத்தில் சிந்தித்தால் ஏன் என்பதன் அர்த்தம் தெரியும். இந்த சம்பவத்தினை நடக்க இருக்கும் தேர்தலுக்கும் வாக்குகளுக்கும் கட்சிகள் பாவிக்க நினைக்கின்றன.பே ரினவாத கட்சிகளும் தமிழ் இனவாத கட்சிகளும் தொன்றுதொட்டு மக்களை இன அடிப்படையில் பிளவுபடுத்தி உழைக்கும் மக்களிடம் இருந்து தமது நலன்களை பாதுகாப்பதற்கு இப்படியான இழிசெயலை செய்வது வருகிறார்கள்.அத ன் ஒரு வெளிப்பாடுதான் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையும் யுத்தமும் ஆகும். இதைச் செய்தவர்கள் காவாலிகள்,குற்ற வாளிகள்,சாதரண மனிதர்களல்ல,உணர ்ச்சிவசப்பட்டு குடிபோதையில் அறியாமல் அல்லது ஏதைச்சையாக இது நடைபெறவில்லை.அப ்படி இருந்தால் அப்படி குறிப்பிடுவது தவறில்லை ஆனால் இதற்கும் யுத்த த்தால்வன்னியிலு ம் ஏன் முழு இலங்கையிலும் ஏற்படுத்தப்ட்ட அழிவுகளுக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தின் அழிப்புக்கும், சீரழிவுகளுக்கும ் நேரடித்தொடர்புண ்டு.இதற்கு பொறுப்பு இலங்கை பேரினவாத முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் இனவாதிகளும் பொறுப்பெடுக்க வேண்டும். நான் இதை தெளிவாகவும் திடமாகவும் நம்புகிறேன், இது தற்செயலான நிகழ்வல்ல வித்தியாவின் மீதான படுகொலை அரசியல் கட்சிகளின் மற்றும் இராணுவ பொலிஸ் அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்புணர்வு படுகொலையாகும். இதை தமிழர்களால் செய்யப்பட்டதென வரையறுப்பது தவறாகும். இது சிங்கள பேரினவாத யுத் தக் கொடூரங்களின் ஒரு தொடர்ச்சியாகத்த ான் பார்க்கப்படவேண் டும்
Gopikrishna Kanagalingam
எல்லாவற்றையும் அரசாங்கம், படைகள், சிங்கள - தமிழ் இனமுறுகலுடன் முடிச்சுப்போடும் அந்தத் திறமையைப் பாராட்டத் தான் வேண்டும். எல்லோருக்கும் அந்தத் திறமை வாய்ப்பதில்லை.
நீங்கள் மேலே சொன்ன ஏனைய இனத்தவர்கள் பொலிஸாருடன் மோதுண்ட சம்பவங்களில் அவர்கள் நீதிமன்றத்துக்குக் கல்லெறிந்ததாகவோ அல்லது சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்க ள் கைதுசெய்யப்பட்ட பின்னர் பொலிஸாரைச் சென்று தாக்கியதாகவோ நானறியேன்.
இருக்க, இலங்கையின் நீதித்துறையில் சிங்களப் பெண் ஒருவரை சிங்கள ஆணொருவன் வன்புணர்வு செய்து, அதற்கான தீர்ப்பு உடனடியாக, நீதியாக வழங்கப்பட்டதாக உங்களுக்கு ஞாபகமிருக்கும் தீர்ப்பு என்ன? இறுதியாக?
இலங்கையில் மாத்திரமன்றி, தெற்காசிய நாடுகளில் வன்புணர்வுகள் சம்பந்தமான குற்றங்களில் காவல்துறையின் செயற்பாடுகளும்,சட்டம் சார்ந்தோரின் செயற்பாடுகளும் எப்போதும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்திருக்கின்றன . தமிழ்ப் பெண்கள் - சிங்கள ஆண்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை மாத்திரம் சொல்லி, அவற்றில் நீதி கிடைத்திருக்கவி ல்லை என்பதன் மூலம் அதை முழுமையான இனம் சார்ந்த விடயமாக மாற்றியிருக்கிற ீர்கள்.
(அதில் வன்னி மாணவி சம்பந்தமான விடயம் சற்றுக் குழப்பமானது. புதிய அரசாங்கம் வந்தபின்னர் புதிய இராஜாங்க அமைச்சர் திருமதி றோசி சேனாநாயக்க அது தொடர்பாக புதிய விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். அது தொடர்பான தகவல்களை தொடர்ந்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தா ர். அதைப் படித்து, அதில் சந்தேகமிருந்தால ் அவரிடம் கேட்கும் வாய்ப்பு இருந்தது. கேட்டிருந்தீர்க ளோ தெரியாது.)
டெல்லியில் ஒரு பெண் கூட்டு வன்புணர்விற்குள்ளாக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களு ம் எதிர்ப்புக்களும ் வெடித்தது ஞாகமிருக்கிறதா? டிசம்பர் 2012. அப்போது அருந்ததி றோய் கருத்துத் தெரிவித்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்த நீங்கள், 'ஏழைக் குற்றவாளிகள் நடுத்தரவர்க்கப் பெண்ணைக் கற்பழித்ததால் மட்டும் தான் இந்த மக்கள்/ஊடக எழுச்சி' என்றீர்கள். (அதில் அந்தப் பெண் ஏழையென்பது தனிக்கதை. Why let the facts spoil a good story?)
அந்தக் கருத்தில் இப்போது மாற்றமிருக்கிறதா? அல்லது இப்போதும் இங்கு வருவது இரத்தம், அங்கு வந்தது தக்காளிச் சட்னி தானா?
(அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் வன்முறை தொடக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. முதலில் காவல்துறை தான் தாக்கியிருந்தது . அதன் பின்னர் சிறு மோதல் இடம்பெற்றது. ஆனால் நீதிமன்றம் மீது தாக்குதல் நடக்கவில்லை. காவல்துறை மீது வலிந்த தாக்குதல் இருக்கவில்லை.)
இப்போது இங்கு நடப்பதை மட்டும் எதனடிப்படையில் உண்மையான எழுச்சி என்கிறீர்கள்?
எனக்குத் தெரிந்து யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரை அது எப்போதும் இப்படித் தான் இருந்து வந்திருக்கிறது. நான் அங்கு 2006 வரை இருந்தேன். இறுதிநேரத்தில் இடம்பெற்ற ஹர்த்தால்கள், ஆர்ப்பாட்டங்களி ல் எப்போதும் உணர்வு என்பது இருந்ததில்லை. சரியான விடயமொன்றை எடுத்து, அதன்மூலம் fun எடுக்கும் ஒரு சூழ்நிலையே இருந்தது. அதை நான் அனுபவித்திருக்க ிறேன்.
Muralitharan Mauran
கோபி,
யாழ்ப்பாணத்தில்நடந்த ஆர்ப்பாட்டங்களு க்கு இனவாதச் சாயமடிப்பது நானல்ல.
அதைச்செய்வது மகிந்த ராஜபக்சவும் சம்பிக்க ரணவக்கவும் Daily Mirror போன்ற
கமுக்கமான இனவாத ஊடகங்களும் சிங்கள ஊடகங்கள் பலவும் தான்.
தமிழர்களோ முஸ்லிம்களோ வீதிக்கு இறங்கிப் போராடினால், அதற்கு புலிச்சாயமும்
அல் கொய்தா சாயமும் இனவாதச் சாயமும் அடிப்பது இயல்பாகவே மாறிவிட்டிருக்கிறது.
என்னுடைய பதிவு இந்த இனவாதப் போக்குத் தொடர்பானதே.
தென்னிலங்கையில்நடைபெற்ற போராட்டங்களில் ஒன்றையேனும் இனவெறி ராஜபக்ச
"பயங்கரவதம்" என்று சொன்னாரா? சிறுபான்மைகளுக்குச் சார்பானதாகவோ மனித உரிமைகள்
தொடர்பானதாகவோ அப்போராட்டங்கள்இருந்தால் மிஞ்சிப்போனால் என் ஜீ ஓக்கள் என்று
சொல்வார்.
யாழ்ப்பாணப் போராட்டங்களைப் பயங்கரவாதமாகக் காட்டுவதன் பின்னால்
இராணுவமயமாக்கத்தை ஊக்குவிக்கும் அரசியல் இருக்கிறது. அலுவலகத்திலும்
வெஇள்யிலும் நான் சந்திக்கும் சிங்கள நண்பர்கள் மகிந்தவினதும் சம்பிக்கவினதும்
கருத்துக்களை அப்படியே ஒப்பிக்கின்றனர். இந்த இனவாதக்கருத்துக ்களை அவர்களிடம்
காவிச்சென்ற்து இந்த ஊடகங்கள்தாம்.
இங்கே இனவாதத்தோடு முடிச்சுப்போடுவது நானா?
Muralitharan Mauran
Defend Snowden நீதிமன்றத்துக்குக் கல் எறிந்ததன் பின்னணி பற்றிய உங்கள் கருத்தை இப்போது நான் ஏற்றுக்கொள்கிறே ன். இதை எழுதும்போது இதுபற்றிய சரியான தகவல்களை நான் தேடிப் பெற்றிருக்கவில் லை. பதிவில் இந்த விடயத்தைத் திருத்தி விடுகிறேன். சுட்டிக்காட்டிய மைக்கு நன்றி.
மற்றபடி,
நான் அலுவலகத்திலும் வெளியேயும் பல சிங்கள நண்பர்களுடன் உரையாடியதன் பின் எழுத்ந கோபத்திலேயே இப்பதிவினை அவசரமாக இட்டேன். தமிழர்கள் போராடினால் அது புலிகளின் மீள் வருகை என்று நம்பும் மனநிலை பெரும்பாலானவர்களுக்கு இருந்தது. அதைக் கேள்விக்குட்படு த்த வேண்டிய தேவை உண்டு. எல்ல மக்களுக்கும் போராடும் உரிமை உண்டு. இப்படித்தான் நாளைக்கு சிங்கள மக்களைத் தாக்கப்போகிறார் கள் என்று சொல்லும்போது அஅந்தக்கூற்றுக் குள் ஒழிந்திருக்கும் இனவாதம் கூரியது. இது இந்த இனவாத அரசியல்வாதிகளால ும் ஊடகங்களாலும் ஊட்டி வளர்க்கப்பட்டது .
இதனடிப்படையிலேயே, தென்னிலங்கையில் ச்ங்கள மக்களது போராட்டங்கள் போன்றதுதான் இதுவும் என்று விளக்க வேண்டிய தேவை எழுந்தது. தமிழர்களுக்கும் போராடும் உரிமை உண்டு என்று சொல்ல வேண்டிய தேவை வந்தது.
அவர்களோடு சிங்களத்தில் உரையாடியதன் தமிழாக்கமே இது. என்னால் எழுத்துவடிவச் சிங்களத்தில் இதனை மொழிபெயர்க்க முடியாததால் தமிழில் போட்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment