என் அறை சுத்தமாக இருக்கும் ஒரு நாளில், நாள் முழுக்க மெல்லிய மழை தூறிக்கொண்டிருப
Friday, July 17, 2015
மகிழ்ச்சி என்பது
மகிழ்ச்சி என்பது,
என் அறை சுத்தமாக இருக்கும் ஒரு நாளில், நாள் முழுக்க மெல்லிய மழை தூறிக்கொண்டிருப
்பது. காலையில் எழுந்ததும் மண்வாசனை வருவது.. குளிர் காற்று சன்னலால் வீசிக்கொண்டிருக ்கும்போது
இளையராஜா காதிலும் சூடான பால்கோப்பி கையிலும் இருப்பது.. சின்னவெங்காயப்
பொரியலும் புட்டும் சாப்பிடுவது... சன்னலால் உள்ளே வெள்ளம் போடாத சின்ன
மழையுடன் இரண்டு மணிநேரம் புகைவண்டியில் பயணம் போவது.. அந்த மழையில்
நனையும் வெளியூரொன்று, சின்னவயதில் நான் பார்த்த எனதூரைப் போலவே
இருப்பதாகத் தோன்றுவது... இரவில் மேசைவிளக்கும் நானும் மடிக்கணினியுமே
இருக்கும் தனிமையில் மழைச்சத்தம் கேட்டுக்கொண்டே சத்தியன் அனுப்பிய
ஆய்வுக்கட்டுரையை வாசிப்பது... தூங்குவது..தூங் ......குவது...
என் அறை சுத்தமாக இருக்கும் ஒரு நாளில், நாள் முழுக்க மெல்லிய மழை தூறிக்கொண்டிருப
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment