Friday, July 17, 2015

கி. பி. அரவிந்தன் நினைவுகள்

கி. பி. அரவிந்தன் என்கிற பெயரை அரசியல், கருத்து நிலை, அவை தொடர்பான உரையாடல்களூடாக அறிவதற்கு முன்னமே ஓர் இனிய அனுபவத்தினூடாக அறிந்திருந்தேன். அந்தப்பெயரை நான் அறிந்த முதன் முறையும் அதுதான். நானும் வேலவனும் சிவகுமாரும் சேர்ந்து பாடசாலைக்கல்வி முடிகிற காலத்தில் 'பெயர்' என்றொரு சஞ்சிகையினை வெளியிட்டு வந்தோம். அச்சஞ்சிகையின் பிரதியொன்று எப்படியோ கி. பி. அரவிந்தனின் கைகளுக்கு எட்டியிருக்கிறது. ஆர்வக் கோளாறு கொண்ட இளைஞர்களின் முன் அனுபவமற்ற முதல் முயற்சி என்று வெளிப்படையாகவே தெரியக்கூடிய அச்சஞ்சிகையினைப் பார்த்துவிட்டு அதிலுள்ள முகவரிக்கு நீண்டதொரு கடிதத்தினை எழுதியிருந்தார். எம்மை உற்சாகப்படுத்தக்கூடிய விதமாக அக்கடிதம் அமைந்திருந்தது. சந்தாப்பணமும் அனுப்பியதாக நினைவு.
அந்த வயதில் அக்கடிதம் தந்த உற்சாகத்தினை முழுமையாகச் சொல்லச் சொற்களில்லை. பொது வெளியில் இயங்கக்கூடியவர்களிடம் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பு இது.
அரவிந்தனின் மறைவு இந்த நினைவினைக் கிளறிக் கவலையைத் தருகிறது.
(எம்மை இவ்வாறு உற்சாகப்படுத்திய வேறு பலரும் இருக்கிறார்கள். சட்டென நினைவுக்கு வருபவர்கள் ஆ . யேசுராசா, சி. சிவசேகரம், சு. வில்வரெத்தினம்)

No comments:

Post a Comment