Friday, July 17, 2015

சில்லையூரான் பாடலும் அதைக் கொல்ல முயலும் சங்கீதமும்

நாமும் நமக்கென நலியாக் கலையுடையோம் என்று இப்பாடல் வரிகளுக்காகப் பெருமைப்படலாம்.
Youtube மேய்ச்சலில் தற்செயலாய் இன்று கண்ணில் பட்டது இந்தப்பாடல். எண்பதுகளில் வெளியான இலங்கைப்பாடல். பாடலைச் சில்லையூர் செல்வராசன் இயற்றியுள்ளார்.
அருந்ததி சிறீரங்கநாதன் பாடியுள்ளார். இசை: மோகன்-ரங்கன்

தற்போது வெளிவரும் பல பாடல்களின் வரிகளைப் பாடகர்கள் தின்றுவிடுகிறார்கள். கொலை செய்து தின்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதிவைத்தோ, அல்லது மனவியாதி காரணமாகவோ இவ்வாறு கொன்று தின்பார்கள். இந்தப்பாடலை அருந்ததி இன்னொரு விதமாகக் கொலை செய்து தின்றிருக்கிறார். மற்ற மனிதருக்குப் பாடலின் சொற்கள் எதுவும் புரிந்துவிடக்கூடாதென்ற கர்நாடக சங்கீத ஆசிரியர்களின் உச்சரிப்புக் கொள்கையின் உச்சத்தினைக் கடைப்பிடித்துக் கொன்றிருக்கிறார். அருமையான குரல். அற்புதமான இசைத்திறமை. ஆனால் கொலைகாரக் குரல்.

பாடல் கேட்டு விளங்கப்போவதில்லை என்பதால், சில்லையூர் எழுதிய அந்த நல்ல பாடலின் வரிகளை இங்கே தருகிறேன். இதைப் படித்துக்கொண்டு பாடலைக்கேளுங்கள்.

கடலே அன்னையே வாழ்த்துகிறேன்
கைதொழுதுன்னையே போற்றுகிறேன்
ஐம்பெரும் திரவியம் அளிக்கின்றாய்
அதனால் மாந்தர் களிக்கின்றார்
என்பதனால் உன்னை வாழ்த்தவில்லை.
இன்னொரு காரணம் காட்டுகிறேன்
முத்தும் பவளமும் ஓர்க்கோலையும் சங்கும்
மெத்தவும் தருவதால் வாழ்த்தவில்லை
நித்தமும் கூழ் உண்டு வாழ்கிற ஏழைக்கு
நீ தரும் உப்புக்காய் வாழ்த்துகிறேன்.
நீ தரும் உப்புக்காய் வாழ்த்துகிறேன்.
உப்பிடுவோர்களை நினைத்திடுவீர் - உயிர்
உள்ளவே என்ற சொல்லளவில்
உப்பினுக்காய் அல்ல, இப்புவி ஏழைகள்
உள்ளத்தின் சார்பிலே வாழ்த்துகிறேன்
உள்ளத்தின் சார்பிலே வாழ்த்துகிறேன்

"உப்பு" என்பதை ஊப்பு என்று பாடுமளவுக்கு மொழியறிவற்ற சங்கீதம்.tongue உணர்ச்சிலை

https://www.youtube.com/watch?v=1N86EepWSsE

No comments:

Post a Comment