இந்தக் கேள்விக்கான பதிலில் அவர்களது "மொழி அரசிய"லும் மொழி பற்றிய "வெளக்கமும்" சந்திக்கு வருகிறது.
Thevarasa Mukunthan : Good question. What is your comment for use f in Tamil. I observed these f and other non tamil symbols in Poet Si Sivasegaram's poems.
சிவசேகரத்தினுடைய அந்தப் பயன்பாட்டினை நான் அன்றும் இன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கதில் உடன்பாடில்லை. அது பயனற்றது.
தமிழில் எழுத முடியாத பெயர்களாக இருந்தால் ஏறத்தாழ அப்பெயரின் ஓசைக்குச் சமமாக எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் போட்டுவிடலாம். ஆங்கில உச்சரிப்பும் போதாமற்போகும்போது அனைத்துலக ஒலிக் குறியீடுகளை அடைப்புக்குறிக்குள் போடலாம்.
மக்கள் தம் மொழியைப் பயன்படுத்துவதில் தவிர்க்க முடியாத முட்டுக்கட்டையாக f எழுத்து இல்லாமலிருப்பது மாறுமானால் புதிய எழுத்தொன்றை அறிமுகப்படுத்துவதில் தவறில்லை.
ஆனால், ஏற்கனவே f உச்சரிப்பினை எழுதும் முறை தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. "ஃப்" என்பதுதான் அது.
Thuraisingam Kumaresan : மயூரன், நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை "றிங்கோ" பயன்படுத்துகிறீர்கள் ? அதே அளவிற்கு திரிகோணமலை பயன்படுத்துகிறீர்களா ?
எழுதும்போது தமிழிலாயின் திருகோணமலை; ஆங்கிலத்திலாயின் Trincomalee. கதைக்கும்போது தமிழிலாயின் திருகோணமலை , ட்ரிங்கோ இரண்டும்; ஆங்கிலத்திலாயின் Trincomalee; சிங்களத்திலாயின் Trincomalee.
அதிகம் எழுதப்பயன்படுத்துவது திருகோணமலை; அதிகம் கதைக்கப் பயன்படுத்துவது ட்ரிங்கோ
அது சரி இந்த ஐயம் இந்த இடத்தில் ஏன் உங்களுக்கு வந்தது?
No comments:
Post a Comment