சமூகத்தை ஏய்ப்பதற்குப் (Social engineering) பயன்படுத்தப்படக்கூடிய நல்லதொரு கருவியாக இந்த மலேசிய விமானம் மாறியிருக்கிறது. உலகில் எவ்வளவோ தீவிரமான மாற்றங்களும் பிரச்சினைகளும் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் மலேசிய விமானத்தின் மீது அளவுக்கதிகமான கவனக் குவிப்பும் ஆர்வமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக அளவுக்கதிகமான முக்கியத்துவம் இச்செய்திக்கு ஏற்படுத்தப்படுவதே ஒரு சமூக ஏய்ப்புத்தான்.
அது ஒரு புறமிருக்க கணினி வழியாக மக்களை ஏய்க்க முனைபவர்கள் இப்போது மலேசிய விமானச் செய்தியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். விமானத்தைத் தேடும் பணியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது போன்று புதிதாகப் புனையப்பட்ட தகவல் ஒன்றினைச் செய்தியாக இவர்கள் தத்தமது தளங்களில் வெளியிடுகிறார்கள். இத்தளங்களிற் பல புதிதாக இதற்கென்றே உருவாக்கப்பட்டவை. பார்வைக்கு நம்பகமான செய்தித்தளம் போல அதனை அவர்கள் வடிவமைக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்கள் வழியாக இத் தளங்களின் தொடுப்புக்கள் வேகமாகப் பரப்படுகின்றன. ஏற்கனவே ஊடகங்களால் தயார்படுத்தப்பட்ட மக்களின் மனநிலை இத்தொடுப்புக்களை வேகமாகப் பகிரத் தூண்டுகிறது.
இவ்வாறு தளங்களை உருவாக்குபவர்கள் உங்கள் கடவுச்சொற்களைத் திருடும் நோக்கத்துடனோ, விளம்பர நோக்குடனோ, வேறு வழிகளில் உங்களை ஏய்த்து இலாபமடையும் நோக்குடனோ தான் உருவாக்குகிறார்கள்.
கொஞ்சம் புத்தியுள்ளவர்களையும் ஏமாற்றுவதற்காகத்தன் செய்தித்தலைப்பில் Confirmed by BBC", "CNN Stated" என்பது போன்ற சொற்றொடர்களைச் சேர்த்துவிடுகிறார்கள்.
(புகழ்பெற்ற இவ்வூடகங்கள் தான் இந்த மாயைக்குள் மக்களை ஆழ்த்தின)
பகுத்தறிவுடன் இயங்க மிகவும் சோம்பல் கொண்ட எமது பல உடகவியலாளர்களும் இச்செய்திகளை எடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பரவலாக உருவாக்கப்படும் மாயைகளை, "பிரபலமான" கதைகளைக் கேள்விகளற்று அப்படியே நம்பிவிடும் மனநிலையே மக்களை ஏய்ப்பவர்களுக்கு வாய்ப்பாகிப்போகிறது.
[Social engineering, in the context of information security, refers to psychological manipulation of people into performing actions or divulging confidential information. A type of confidence trick for the purpose of information gathering, fraud, or system access, it differs from a traditional "con" in that it is often one of many steps in a more complex fraud scheme.
The term "social engineering" as an act of psychological manipulation is also associated with the social sciences, but its usage has caught on among computer and information security professionals.-Wikipedia]
No comments:
Post a Comment