Thursday, July 31, 2014

தேர்தல்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்கிற அச்சம்


மக்கள் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதால் சொல்லப்படும் செய்தி பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

தயான் ஜயதிலக இப்படிச் சொல்கிறார் :

//சரியான எதிர்க்கட்சி இருந்தால் மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை தோற்கடிப்பார்கள். அவ்வாறான வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் மக்கள் வாக்களிக்க எண்ணுவதில்லை.

நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மீதான் மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது.

பிரதான எதிர்க்கட்சி மீதும் மக்களுக்கு தற்போது நம்பிக்கையில்லை. இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படாது போனால் மக்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தூர விலகிச் செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி நடந்தால், வெளியுலக சக்திகளால் நாட்டை இலகுவாக தோற்கடிக்க முடியும்.

மக்களை மயக்க வேண்டுமாயின் அரசாங்கம் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். அப்படியில்லை என்றால், கவர்ச்சிகரமான, மக்கள் நலனை அடிப்படையாக கொண்ட மாற்று எதிர்க்கட்சி உருவாக வேண்டும். //

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பதில் எந்த அர்த்தமுமே இல்லாத நாடொன்றில் மக்கள் தேர்தல்களைத் தோற்கடிப்பதன் மூலம் தமது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.


இந்த எதிர்ப்பின் தாக்கம் பலமானது. தேர்தல்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிடும் என்கிற அச்சம், இந்தப் போலி சனநாயகத்தை வைத்து யாவாரம் பண்ணும் அரசியல்வாதிகளுக்கும் புறச்சக்திகளுக்கும் எப்போதும் உண்டு.

போர்முடிந்த கையோடு வெளிநாட்டு NGO க்கள் மக்களை வாக்களிக்கப்பண்ணுவதற்கு லட்சக்கணக்கில் பணத்தைக்கொட்டிப் பிரசாரம் செய்தன. ஏன்?

No comments:

Post a Comment