Comrade Clara Zetkin and Comrade Rosa Luxemburg, 1910.
நான் மிகவும் மதிக்கும் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள். தோழர் கிளாரா, தோழர்
ரோசா லுக்சம்பேர்க். இன்று நாம் எல்லோரும் மதிப்புடன் கடைப்பிடிக்கும்
"அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் (மார்ச் 8)" உருவாகக் காரணமாக இருந்தவர் தோழர் கிளாரா.
இம்மாபெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட ஜெர்மானியப் புரட்சி மட்டும்
வெற்றிகண்டிருந்தால் இன்று உலகின் தலையெழுத்து வேறுவிதமாக
எழுதப்பட்டிருக்கும் என்பது எனது நம்பிக்கை.
இம்மாபெரும்
தலைவர்களது போராட்டப் படிப்பினைகளும் வழிகாட்டலும் எம்முடன் இருக்கின்றன.
உலகின் தலையெழுத்தை அவர்கள் எதிர்பார்த்தபடியே மாற்றி எழுதுவதற்கான
துணிவையும் தெளிவையும் எல்லாப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏனைய
பாலினருக்கும் அது வழங்கட்டும்.

No comments:
Post a Comment