Monday, May 30, 2011

NGO - ஆன்மீகம் - நியாயப்படுத்தல்கள்

நண்பர் பகிர்ந்த கட்டுரையைத் தொட்டு உருவான உரையாடல்

NGO க்கள் மீதான இந்த விமர்சனங்கள், அதிகார வர்க்கங்களின் ஆசியுடன் பரப்பப்படும் மதக்குழுக்களும் பெரிதும் பொருந்திவருகிறது.

இந்தியச்சூழலில் வெற்றிகரமான NGO வடிவமாக இனம்காணப்பட்டுப் பயன்படுத்தப்படுவது ஆன்மீகபீடங்களே.




சத்தியசாயிபாபா மீதான விமர்சங்களை முன்வைக்கும்போது - சத்தியசாயி பக்தர்கள் அல்லாத - "புத்திசீவிகள்" பலர், பாபா செய்த சமூக நலன்களை எடுத்துக்காட்டி, அதற்கு மாறு உங்களிடம் இல்லாதபோது வாயைப்பொத்திக்கொள்ளுங்கள் என்றே சொல்லத்தொடங்கினார்கள்.

NGO ஆதரவாளர்களும், குறிப்பாக பின்நவீனர்களும் இதே கருத்தைச்சொல்லித்தான் வாய்களை மூடிக்கொள்ளச்சொல்கிறார்கள்.


ஆனால் இந்த விடயம் அவசரமாக உதவி தேவைப்படுகின்ற மக்களருகே நின்று பார்க்கும்போது மிகவும் சிக்கலானதுதான்.

அந்த மக்களுக்கு NGO க்களை விட்டால் வேறு வழியில்லாத நிலை. NGO க்கள் மூலம் வரும் உதவிகளை நிறுத்தினால் அதற்கு மாற்றாக உடனடியாக எதையும் முன்வைக்கமுடியாத கையறுநிலை.

அதேவேளையில் அம்மக்களின் இந்த அவல நிலைக்குக்காரணமானவர்களாயும், காரணமானவர்களின் கையுறைகளாயும்தான் இந்த NGO க்களே இருக்கும் உண்மை.

மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களின் அருகில் நின்று பார்க்கும்ஒருவருக்கு இந்தக்கருத்தாடல் பெரும் இக்கட்டான நிலையையே உருவாக்கும்.

எடுத்தவுடன் NGO அகற்றுவது முடியாத காரியம்.

இந்தக்கட்டுரை தன் இறுதிப்பந்தியில் குறிப்பிடுவதைப்போல மக்கள் அரசியல் இயக்கங்கள் நீண்ட தூரநோக்கில் உறுதியாகக்கட்டியெழுப்பப்படுவதனூடாக மட்டுமே நீண்டகால அடிப்படையில் NGO க்கள் எனும் நோய்க்கூறு துடைத்தழிக்கப்படமுடியும்.
 

No comments:

Post a Comment