Friday, May 13, 2011

திருகோணமலையில் செத்த சாயி பாபாவின் லீலை

திருகோணமலையில் அற்புதம்!! பாபாவின் படத்திலிருந்து திருநீறு பொழிந்தது. (திருநீறோடு சேர்ந்து கடைசியாக Gum உம் பொழிந்து கண்ணாடியோடும் சுவரிலும் திருநீறு ஒட்டிக்கொண்டு நிற்கிறது)



திருகோணமலையில் மேலதிக அரசாங்க அதிபராக இருந்தவர் திரு. ந. புவநேந்திரன். அவருடைய வீட்டில் தான் இந்த அற்புதம் நடந்திருக்கிறது.

ஊரில் பெயரெடுத்த பெரிய பதவி வகிக்கும் மனிதர்களின் சிறுமையும் ஏமாற்றும் குணங்களும் களவும் பொய்யும் இப்படி அம்பலப்பட்டு நிற்கிறது. வெட்கம்!

அவர் நீண்டகாலமாகவே திருகோணமலை சாயி சமித்தியில் மிக முக்கிய பிரமுகர். திருகோணமலை சாயி சமித்தியின் வரலாற்றில் தொடக்ககாலப் பிரமுகர்களில் ஒருவர்.

ஒரு முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர், ஊரறிந்த பிரமுகர், படிப்பாளி இப்படி தன் வீட்டு சாயிப் படத்தின் கண்ணாடியிலும் சுவற்றிலும் திருநீற்றைப் பசைபோட்டு ஒட்டி ஊரையே ஏமாற்றும் செயலைச் செய்யவேண்டியவராகி நிற்கிறார்... பரிதாபப்படுவதா, ஆத்திரப்படுவதா?

பாபா செத்து, அம்பலப்பட்டுப்போன காரணத்தால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும், மனவுடைவையும் அவப்பெஅரையும் சரிக்கட்ட இதனைச்செய்கிறார்களா அல்லது பாபாவின் பெயரால் தாம் சம்பாதித்துவந்த எதையோ இழக்காமலிருக்க இந்த உத்தியைக் கையாள்கிறார்களா?

யாருக்கும் எதையும் சோதித்துப்பார்த்தபின் நம்பும் பழக்கம் கிடையாது. அதுதான் பிரச்சினை.

இந்தச்செய்தியை நம்பிக்கையோடு எனக்குச்சொன்ன பலரிடமும், என்ன விதமாக நீங்கள் பரிசோதித்தபின் இதனை நம்பினீர்கள் என்று கேட்டேன். பதிலில்லை.



பின்னூட்டம் :

nan intha video va ungaluku share panninathu nee ippidiya kevalamana comment ta ethir pathu illa,oru nalla comment ta ethir pathu than.


இதில் கேவலமான கொமென்ட் எதனையும் நான் சொல்லவில்லையே..?

உண்மையிலேயே இப்படி படத்திலும் சுவரிலும் திருநீற்றை ஒட்டிவைத்து மக்களை ஏமாற்றுவதுதான் கேவலமான செயல்.

இந்த வீடியோவை எனக்கு தந்தது நீங்கள்தான் என்பதால், நீங்கள் சொன்ன காரணத்தால் இதனை நான் அகற்றிவிடுகிறேன்.

ஆனால் நீங்கள் சில விடயங்களில் அவதானமாக இருக்கவேண்டும்.

உங்களைப்போன்ற சிறுவயது மாணவர்கள் இவ்வாறான விடயங்களை எடுத்தவுடன் நம்பிவிடுவது நல்லதல்ல.

ஒரு விஞ்ஞான மாணவனாக நீங்கள் இவ்வாறான விடயங்களை முடிந்தவரைக்கும் சோதித்துப்பார்த்து அதன் பின்தான் நம்பத்தொடங்கவேண்டும்.

அதற்காகத்தான் எமக்கு விஞ்ஞானம் கற்பிக்கப்படுகிறது.

எளிமையான அவதானம் ஒன்றே இது பொய் என்று காட்டிவிடுகிறது.

1. படத்திலிருந்து கொட்டிய திருநீறு நீண்ட நேரத்துக்குப் பிறகும் எப்படி படத்தின் கண்ணாடியோடும் சுவரிலும் இப்படித் திட்டுத்திட்டாக ஒட்டி இருக்கும்?

2. திருநீறு ஈரத்தோடு வந்தது என்று வைத்துக்கொண்டாலும் எவ்வளவு நேரத்துக்கு இப்படி ஒட்டிக்கொள்ளும்? ஈரம் காய விழுந்துவிடுமல்லவா?

3. ஈரத்தோடு கீழே விழுந்த திருநீறு மட்டும் எப்படி powder ஆகவே இருக்கும்? கட்டி கட்டியாக இருக்கவேண்டுமல்லவா?

4. சுவரிலிருந்து படத்தின் மேற்பரப்பு ஆகக்குறைந்தது 0.5 cm உயரத்தில் உள்ளது. அப்படி இருக்க, படத்திலிருந்து கொட்டிய திருநீறு எப்படி சுவரில் இவ்வாறு ஒட்டி இருக்கும்?

5. திருநீறு கொட்டிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஏதேனும் உண்டா?

இவை சில எளிய கேள்விகள். இவற்றைப் பரிசோதித்துப்பாருங்கள்.



பின்னூட்டம்:

சிவரிலும் படத்திலும் ஒட்டி வைத்து ஏமாத்தினால் அது ஒரு கேவலமான விடயம் தான் அனால் இங்கு இவை ஒட்டி வைத்தவை என்று நீங்கள் கூறுவது தவறு என நான் கூறுகிறேன்.
நீங்கள் நான் சிறு வயது மாணவன் என எப்படி கூறுவீர்?
எனக்கும் பொது அறிவு உள்ளது.ஆனால் இதை உண்மை என நான் நம்பியதற்கு பல காரணம் உள்ளது.நான் இதை நீங்கள் கூறியபடி விஞ்ஞான வழியில் பரிசோதிக்க தேவை இல்லை வேணுமென்றால் நீங்கள் அந்த இடத்துக்கு சென்று பாருங்கள்....

உங்களின் கேள்விக்கு பதில்
1.நீங்கள் படத்தில் இருந்து திருனிரு கொட்டியது என்று நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது,படத்தில் இருந்து சிந்துகிறது என்றே நான் குறிப்பிட்டேன்.

2.திருனிரு ஈரத்தோடு வந்தது என்று உங்களுக்கு யார் கூறியது?

3.துளி துளி யாகத் சிந்தியதே ஒழிய கட்டி கட்டி யாக இல்லை.

4.படத்தில் இருந்து கொட்டிய திறினிரு சுவரில் ஓட்ட வில்லை,சிவரிலும் இருந்து திருநேறு கொட்டுகிறது

5.திருனிரு கொட்டும் போது வீடியோ ஒன்றும் எடுக்கப்பட வில்லை.



/படத்தில் இருந்து சிந்துகிறது என்றே நான் குறிப்பிட்டேன்./

எவ்வளவு நேரமாக? இந்த வீடியோ எடுக்கப்பட்டபோது சிந்திக்கொண்டிருக்கிறதா?

/திருனிரு ஈரத்தோடு வந்தது என்று உங்களுக்கு யார் கூறியது?/

ஈரத்தோடு வராவிட்டால் எப்படி சுவற்றிலும் படத்திலும் ஒட்டிக்கொண்டு நிற்கும்?

/திருனிரு கொட்டும் போது வீடியோ ஒன்றும் எடுக்கப்பட வில்லை./

துளித்துளியாக ச்ந்தி இருந்தால் சிந்திய மொத்தத்திருநீறும் வெளிவர எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?

நிச்சயமாக ஆட்கள் திருநீற்றைப்பார்க்கவும் வாங்கவும் கூட்டமாக வந்துவிட்ட நேரத்தில் கூட சிந்திக்கொண்டுதான் இருந்திருக்கவேண்டும். (வந்தவர்களுகெல்லாம் திருநீறு கொடுத்தார்கள் அல்லவா)
அப்படியானால் அதை வீடியோ எடுத்திருக்க முடியும். ஏன் எடுக்கவில்லை?

நீங்கள் நம்பத்தான் போகிறீர்கள் என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் அந்த வீட்டில் இப்போது பாபா திருநீறு கொட்ட வேண்டிய அவசியம் எனக்கு நன்றாகத்தெரியும். :)

உங்கள் நம்பிக்கையை நான் கேலிக்குள்ளாக்கவில்லை. உங்கள் நம்பிக்கை தவறு என்பது என் நம்பிக்கை.

ஆனால் ஒருகாலத்தில் ஊரில் பெரிய மனிரர் என்று நான் நம்பிய திரு புவநேந்திரன் இந்தச்சம்பவத்துக்குப்பிறகு என் மனதில் பெரும் ஏமாற்றுக்காரராகிச் சிறுமைப்பட்டுப்போனார்


நான் நேரில் போய் சோதிக்கலாம். ஆனால் அவர்கள் சோதிக்க விடப்போவதில்லை. என்னுடைய சோதனைக்கு, அந்த பாபாப்படம் நடுநிலையான அவதானிகளின் முன்னால் ஆய்வுகூடத்துக்கு எடுத்துவரப்படவேண்டும்.

ஆகக்குறைந்தது படத்தின் கண்ணாடி frame கழற்றப்படவேண்டும்.

இதற்கெல்லாம் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

திருநீற்றை மெல்ல அகற்றி அது எப்படி கண்ணாடியோடு ஒட்டிக்கொண்டு நிற்கிறது என்பதைத்தானும் பார்க்க அவர்கள் விடுவார்களா?


பணக்காரர் வீட்டில் திருநீற்றைக்கொட்டும் பாபா, போரால் பாதிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் அடுத்த நாள் உயிரோடு இருப்பதே சிரமமான நிலையில் தவிக்கின்ற அகதி மக்களின் கூடாரங்களுக்குள் ஒரு நாளைக்கு ஒரு சாப்பாட்டுப் பார்சலைத்தானும் போட்டுவிடுவாராக இருந்தால் நான் கேள்வி எதுவும் கேட்காமல் ஒதுங்கிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment