Monday, May 30, 2011

பல ஆண்களோடு இரவில் தொலைபேச விரும்பும் பெண்

என் முதுகிலுள்ள அழுக்கை அகற்றிவிட்டு உங்களிடம் வருகிறேன் எனும் கட்டுரைக்கு பின்னூட்டமாக எழுதப்பட்டது

அந்தப்பெண்ணுக்குத் தேவைப்படுவது நல்ல உளவள ஆலோசனையே (Counseling).

அளவுக்கு மீறி ஆண்களோடு மட்டும் தொடர்ச்சியாக உரையாட அவர் விரும்புகிறார் என்பதால் அவருக்கு ஏதோ உளவியல் பிரச்சினை இருக்கவேண்டும்.



அவரைக் கணவரிடம் பிடித்துக் கொடுத்தாலும், அவரது கணவர் இந்த உளவியல் பிரச்சினையைப் புரிந்துகொண்டு அதைப் படிப்படியாகத் தீர்க்க வல்லவராக இருப்பார் என்றில்லை.

அவர் கதைக்கவிரும்பும் உங்களுடைய நண்பர் மூலமாகக்கூட அவரது உளவியல் தேவையை நீங்கள் அறிய முயற்சிக்க முடியும்.

இந்தச் சமூகச்சூழலில் இவ்வாறான செயற்பாடுகள் அவரதும் குழந்தையினதும் எதிர்காலத்தை எவ்வாறஎல்லாம் பாதிக்க முடியும் என்பதையும் இதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றியும் அவருக்கு எடுத்துக்கூற முடியும்.

ஆண்களின் உலகத்தில் இவ்வாறு தொலைபேசியில் பெண்களோடு கதைப்பதென்பது மிகச்சாதாரணமானது.

நீங்கள் ஒரு பெண் என்ற வகையில் உங்களுடனும் உங்கள் பெண் நண்பர்களுடனும் இரவில் தொலைபேசியில் அந்தரங்க விடயங்களைக் கதைக்க விரும்பும் ஆண்கள் பற்றி போதிய அனுபவம் உங்களுக்கு இருக்கும். அதில் திருமணமான ஆண்களும் கூட அடங்கியிருக்கமுடியும்.

அந்த ஆண்களின் அதே தேவைகளில் சிலவற்றின் காரணமாகத்தான் இந்தப்பெண்ணும் ஆண்களோடு உரையாட விரும்புகிறார்.

அவருக்கு உரிய உடற் துணை தேவைப்படுகிறது என்பதில் இருந்து நல்ல பேச்சுத்துணை தேவைப்படுகிறது என்பது வரைக்கும் காரணங்கள் கலந்தும் வேறுபட்டும் இருக்கலாம்.

தனிமை, பாலியல் திருப்தியளிக்கக்கூடிய துணைவர் இன்மை, மனதில் நிரம்பியிருக்கும் பல்வேறு சுமைகள் போன்றனவெல்லாம் இவ்வாறான நடத்தைக்கு அவரை தள்ளலாம்.

ஆனால் முன்யோசனை இன்றி அவர் இவ்வாறு நடந்து கொள்வது இந்த சமூகச்சூழலில் அவருக்கும் அவரைச்சார்ந்தவர்களுக்கும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். அவரது பாதுகாப்புக்கும் உயிருக்குமே கூட இது அச்சுறுத்தலாக அமையும்.

இந்த அபாயத்தை அவருக்கு எடுத்து விளக்கவேண்டும்.

அப்படி விளக்கி அவரை வீணான பிரச்சினைகளிலிருந்து காப்பது இந்தச்சமூகத்தின் உறுப்பினர்களான எமது கடமையாகும்.

No comments:

Post a Comment