....ஆனால் இதே வகைக் கேள்வியை நான் பல இடதுசாரிகளிடமும், கம்யூனிஸ்ட்டுக்களிடமும் கேட்கிறேன். அவர்களும் கடவுள் மறுதலிப்பு, அராஜக எதிர்ப்பு போன்ற சிறிய விடயங்களில் காட்டும் அக்கறைறை சமூகப் புரட்சியில் அல்லது போராடுவதில் காட்டுவதில்லை...
எனது பதில்கள் :
நீங்கள் லெனின், மாவோ, சே , பகத்சிங் போன்றவர்களையா சொல்கிறீர்கள்?
இங்கே இரண்டுக்கும் ஒர் அடிப்படை வேறுபாடு உண்டு.
கம்யூனிஸ்டுக்கள், சமூகப்புரட்சியாகட்டும், போராட்டமாகட்டும் மாற்றங்களாகட்டும் அனைத்துமே மனித எத்தனத்தால், மனித முயற்சியால் நடைபெறுபவை என்று நம்புபவர்கள்.
மனித முயற்சி இன்றி வானத்திலிருநு வரும் புனித எத்தனத்தால் அவை நடைபெற்றுவிடும் என்று எப்போதும் போதித்தவர்களல்லர்.
எனவே சமூகப்புரட்சி ஒன்று நடைபெறாதிருப்பதோ, அது நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமலிருப்பதோ மனித முயற்சியின்மையின் பெறுபேறே. அதை அவர்கள் எப்போதும் மறுப்பார்கள் என்று நான் நம்பவில்லை.
ஆனால் மதங்கள் தரும் உறுதிமொழி என்பது வேறானது. அவை தாம் இந்த உலகைப் புனிதப்படுத்த இறைவனால் அருளப்பட்ட வழிமுறைகள் என்று தம்மைத்தாமே பிரகடனம் செய்பவை. எனவே மனித எத்தனம் இன்றிய நிலையிலேயே அது மாற்றங்களை உருவாக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியும்.
நீங்கள் சம்பந்தமில்லாத இரண்டு விடயங்களை ஏன் முடிச்சுப்போடுகிறீர்கள் என்று தெரியவில்லை.
கம்யூனிஸ்டுக்கள் புரட்சிகள் செய்யாமலிருந்ததில்லை, சமூகமாற்றங்களை உருவாக்காமலிருந்ததில்லை. போராடாமலும் இருந்ததில்லை. இப்போதும் உலகெங்கும் அவர்கள் போராடிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
இலங்கையிலும் ஏராளமான சமூக மாற்றங்களைப் போராட்டங்கள் மூலமாகத்தான் கம்யூனிஸ்டுக்கள் சாதித்தார்கள்.
எனவே போராடுவதில்லை, அதில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை எஈங்கள் யார்மேல் வைக்கிறீர்கள் என்று குறிப்பாகச்சொன்னால்தான் அது நேர்மையான கருத்தாக அமைய முடியும்.
ஏனென்றால் ஒரு சிறு எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாய் குற்றம் சாட்டும் "ஒட்டுமொத்தப்படுத்தல்" என்பது இன்று மிகத்தவறான கருத்தியலாக இனம்காணப்படுகிறது.
மதங்களையும் கம்யூனிசத்தையும் ஒப்பிட்டு முடிச்சுப்போடும் கருத்துக்கள் மிக மேலோட்டமான பார்வையுடன் வெளிப்படும் காழ்ப்புணர்வையும் நேர்மையீனத்தையுமே காட்டி நிற்கின்றன.
ஏனெனில்,
சமூகத்தில், மக்கள் மத்தியில் எழும் கருத்துக்களையும், அறிவுத்தேட்டங்களையும் திரட்டி அதிகாரவர்க்கத்துக்கு/புரோக ிதக்குழுமத்துக்கு சாதகமான முறையில் திரித்தும் தொகுத்தும் எழுதி, அதனை அறிவுக்கு அப்பாற்பட்ட, புனிதமிக்க ஒன்றின் பெயரால் கேள்விக்கிடமற்றதாக்கி, நியாயப்படுத்தி மக்கள் மத்தியில் பரவ விடுவது தான் மதத்தின் தன்மை.
கம்யூனிசம் போன்ற கோட்பாடுகளோ இதற்கு மாறாக, சமூக-பொருளாதார-அரசியல்-வரல ாற்று ஆய்வுகளின் ஊடாகப்பெறப்பட்ட முடிவுகளை, மேலும் பல ஆய்வுகளூடாக மறுக்கவும், மாற்றவும், நிரூபிக்கவும் வழிவிட்டு மனித அறிவில் நம்பிக்கை கொண்டு மொழியப்படும் முன்மொழிவுகளே.
இந்த அடிப்படை வேறுபாட்டைக்கூடப் புரிந்துகொள்ளாமல் இரண்டுக்கும் இடையில் முடிச்சுப்போடுவது கம்யூனிசத்தை மதமாகக்காண்பவர்கள், கண்டவர்களுக்கே முடிகிறது.
ஏனெனில்,
சமூகத்தில், மக்கள் மத்தியில் எழும் கருத்துக்களையும், அறிவுத்தேட்டங்களையும் திரட்டி அதிகாரவர்க்கத்துக்கு/புரோக
கம்யூனிசம் போன்ற கோட்பாடுகளோ இதற்கு மாறாக, சமூக-பொருளாதார-அரசியல்-வரல
இந்த அடிப்படை வேறுபாட்டைக்கூடப் புரிந்துகொள்ளாமல் இரண்டுக்கும் இடையில் முடிச்சுப்போடுவது கம்யூனிசத்தை மதமாகக்காண்பவர்கள், கண்டவர்களுக்கே முடிகிறது.
No comments:
Post a Comment