Monday, May 30, 2011

வியப்பளித்த ஃபேரியல் அஷ்ரஃப்

இன்று Ashroff Shihabdeen னின் நூல் வெளியீட்டில் பேரியல் அஷ்ரப்பின் உரை என்னை ஏனோ கவர்ந்துவிட்டது. நான் சற்றும் எதிர்பாராத விதமாக மதங்கள் பற்றிய மிகக்கூர்மையான கேள்வி ஒன்றினை சுள்ளெனக் கேட்டுவிட்டு அமர்ந்தார்.


அஷ்ரப் சிகாப்தீனின் நூல் உலகெங்கும் நடந்த மனிதருக்கெதிரான வதைகளின் கதைகளைத் தொகுத்துத் தந்திருந்தது.
அதை தான் முழுமையாகப் படித்ததாகச் சொன்ன பேரியல், மனிதருக்குள் இருக்கும் மிருகம் ஏன் உருவாகிறது என்றும் அதனை ஏன் அகற்ற முடியாமலிருக்கிறதென்றுன் தனக்குப் புரியவில்லை என்று அப்பாவியாய்ச் சொன்னார். (அவர் அப்படிச்சொன்னபோது அது வெறும் அப்பாவித்தனமா அல்லது வதைகளின் மூலகாரணமான அதிகாரம் பற்றிய அறிவீனமா அன்றி அதிகாரம் பற்றிப்பேசவிரும்பாத நிலையா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்)
ஆனால் பேச்சின் இறுதியில்,

"பெண்கள் வெளியில் போகும்போது முகத்தை மறைக்க வேண்டுமா வேண்டாமா, நோன்பின் போது சிரிக்கலாமா சிரிக்கக்கூடாதா என்ற சில்லறை விடயங்களிலெல்லாம் மதத்தின் பெயரால் தர்க்கப்பட்டுக்கொண்டும், இத்தகைய சில்லறை விசயங்களைப் பேசுவதே மதக் கடைப்பிடிப்பு என்று நினைத்துக்கொண்டும் காலம் கழிப்பவர்கள் ஏன், மதங்களின் அடிப்படையான எதிர்பார்ப்பாகிய மனிதருள் இருக்கும் மிருகத்தை அகற்றுவது பற்றி ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டிருக்கும் நிலையில் கூட ஆக்கபூர்வமாக எதையும் சாதிக்கவில்லை?"

என்று ஒரு போடு போட்டார்
மதங்களின் அடிப்படை நோக்கத்தையே அம்மதங்கள் இத்தனை காலமாகியும் சிறிதேனும் நிறைவேற்றவில்லை. அது ஏன் என்ற கேள்வியும், சில்லறை விடயங்களையே மதமாக்குவது மீதான விமர்சனத்தை இந்தக்கேள்வியோடு இணைத்துச் சொன்னதும் மிகத்தாக்கமான விடயம் என்று நான் கருதுகிறேன்

No comments:

Post a Comment