Saturday, March 23, 2013

செயமோகப் பவர் ஸ்டார்

திரையுலக பவர்ஸ்டார் எம்மைச் சிரிக்க வைப்பார் கொஞ்சம் செல்வாக்கும் காசும் சம்பாதித்துத் தனக்குப் பயன்படுத்திக்கொள்வார். ஆனால், இந்த எழுத்துலகில் ஒரு பவர்ஸ்டார் இருக்கிறான். ஆக்கத்திறனோ எழுத்தாற்றலோ இல்லாத இவனை எதுக்கோவெல்லாம் ஆளாளுக்குத் தூக்கிவிட்டு கடைசில் சிறுதொகை வாசகர்களிடையே "பவர் ஸ்டார்" ஆகியிருக்கிறன். இவன் நச்சுப்பாம்பு. நச்சு அரசியலை இனிப்பில் தடவி சுவைக்கத்தருவதில் கெட்டிக்காரன்.

அவன் பெயர் செயமோகன்.


இவனைப் பலகாலமாகவே நாம் அம்பலப்படுத்தி வந்தாலும், அதையெல்லாம் கேட்காத இலங்கை வாசகர்களும் கூட, இவன் இலங்கை பற்றிக் "கருத்துச் சொல்ல" வெளிக்கிட்ட பிறகு இவனின் உண்மை உருவை அறிந்துகொண்டார்கள்.

இப்போது இந்த எழுத்துலகப் பவர்ஸ்டாரின் புதிய நச்சு மூச்சு "மாணவர் போராட்டத்தை" ஆதரிக்கிறேன் என்ற பெயரில் வெளிப்பட்டிருக்கிறது.

மாணவர் போராட்டத்தினுள் மெதுவாக இந்திய அதிகாரவர்க்கத்துக்குச் சார்பான நிகழ்ச்சிநிரல் உட்புகுத்தப்படும் ஆபத்துக்களை எடுத்துச்சொல்லும் கருத்துக்களை எப்படி எதிர்கொள்கிறான் பாருங்கள் :

/எந்த மக்கள்போராட்டமும் அதற்கான காரணங்களின் மிக எளிய வடிவையே முன்வைக்கமுடியும். அப்போதுதான் பெருவாரியான மக்களுக்கு அது புரியும். அவர்களை ஒருங்கிணைக்கமுடியும். மொத்த அரசியல் பொருளியல் சிக்கல்களையும் புரிந்தவர்கள்தான் போராடவேண்டுமென்றால் ஃபேஸ்புக் விவாதங்கள் மட்டுமே சாத்தியம்/

ச்சே சே அதற்காகவெல்லாம் அவன் அப்படிச்சொல்லவில்லை, எதார்த்தமாகத்தான் சொல்லியிருக்கிறான் என்று நினைக்க முதலே அடுத்த வரிகளில் தான் இந்திய அதிகாரவர்க்கத்தின் அடிவருடி என்று அடித்துச் சொல்கிறான் :

/இந்த இயல்பான போராட்டத்தை வழக்கம்போல இந்திய எதிர்ப்புப்போராட்டமாகக் கொண்டுசெல்ல இங்கே நிதியூட்டப்பட்டு செயல்படும் குறுங்குழு அரசியல்வாதிகள் முயலக்கூடும். அதில் மாணவர்கள் விழிப்புடன் இருப்பார்கள் என நினைக்கிறேன். இல்லையேல் இதை முன்வைத்து அவர்கள் இன்னும் கொஞ்சம் நிதி பெற்றுக்கொள்வது தவிர ஒன்றும் நிகழாது/

துக்ளக் சோ என்றொரு நச்சுக் கோமாளியை நாம் கண்டிருக்கிறோம். இவன் அடுத்த கோமாளிப் பாம்பு.

கவனம்.

http://www.jeyamohan.in/?p=35090

No comments:

Post a Comment