இப்போ
ஒண்றுபட்ட போராட்டம் என பல அமைப்புக்கள் முளைத்துள்ளது. இது ஒரு
சந்தோசமான் விடயம் கூட , ஆனால் ஒரு சின்ன சந்தேகம் முள்ளிவாய்க்காலலில்
மக்களை கூட்டி ஒதுக்கி சுறிவளைத்து செல் அடித்தபோது படுகொலைக்கு எதிராக
ஒரு குரல் தெற்கில் இருந்து எழுமா என ஏங்கியவர்களுக்கு இப் பொற்காலத்தை
நம்புவது கஸ்டமாக உள்ளது.மேலும் ஒரு அமைப்பியல் மாற்றத்தை மறுப்பது
(அதிகாரப் பகிர்வு)மற்றும் வெறும் இனங்களிடையே யான நல் இனக்கம் என்னும்
வெறும் கருத்தை மாத்திரம் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்ப முயற்சிப்பதும்
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை “தோற்ற தமிழன்தான்” நல்ல
தோழமைத்தமிழன் என இந்த முற்போக்குகள் நினக்கிறார்களோ என்னவோ?//
உங்களுடைய இந்த விமர்சனம் FLSP, அதன் தோழமை அமைப்பான "சம உரிமை இயக்கம்" ஆகியவற்றைக் குறித்தே முன்வைக்கப்பட்டுள்ளது.
JVP இலிருந்து FLSP பிரிந்தபொழுது நானும் நான் சார்ந்துள்ள அமைப்புக்களும் அவர்களை JVP இன் ஒரு நீட்சியாகவே மட்டுக்கட்டினோம். அவர்கள் மீதான காட்டமான விமர்சனங்களையும் முன்வைத்தோம்.
காலவோட்டத்தில் அவர்களுடனான தொடர்பாடல் முன்னேற்றமடைந்தபோது அவர்களை முப்பரிமாணமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
இலங்கையின் பேரினவாத, இனப்பகைச் சூழலின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை மீதான புறச்சக்திகளின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வரட்டுத்தனமான தட்டையான அரசியற் கண்ணோட்டத்தினூடாக இம்மாதிரியான அரசியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது சிரமம்.
தென்னிலங்கையில் இனவாதத்துக்கு எதிராகவும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் எழுந்த குரல்கள் அமைப்புக்கள் யாவும் வேரடி மண்ணோடு ஒழிக்கப்பட்டமை தான் வரலாறு. தமிழ் முஸ்லிம் அரசியல் அமைப்புக்கள் கூட அந்தளவு மூர்க்கமாக அழித்தொழிக்கப்படவில்லை.
இவ்வாறாக சிறு துளிர்ப்பையும் சகித்துக்கொள்ளாத பேரினவாத ஆட்சியில், இருந்த வெற்றிடத்தில் FLSP என்பது ஒரு முக்கியமான நிகழ்வு.
இதுவரை காலமும் இனவாதத்துக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் எதிராக எழுந்த தென்னிலங்கைக் குரல்கள் பலவீனமானவை. மிகவும் சிறியவை.
FLSP என்பது மிகப்பெரியது. ஏறத்தாழ 8000 உறுப்பினர்களும் 400 முழுநேர ஊழியர்களும் மிகப்பலமான மாணவர் அமைப்புக்களும் கொண்ட பருமையான சக்தி அது.
இனவாதத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான கருத்தியலை, செயற்பாடுகளை Mainstream இற்க்குக் கொண்டுவரக்கூடிய தகைமையும் அதற்குத்தான் உண்டு. இன்னொரு பருமையான சக்தியாக இருந்த விடுதலைப்புலிகளால் கூட "தமிழீழ" நல்ன்களுக்கு அப்பால் போய் குரல்கொடுக்க முடிந்ததில்லை.
இலங்கையின் அரசியற் சூழலை நுணுக்கமாக அவதானித்துப் புரிந்துகொண்டவாறு ஒரு "சோசலிச" அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் கைக்கொள்ளும் உத்திகள் ஆர்வமூட்டுகின்றன.
அடிப்படையான கோரிக்களை முன்வைத்துப் பரந்துபட்ட ஐக்கிய முன்னணிகளைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது புரிகிறது.
சம உரிமை இயக்கத்தின் கூட்டங்களில் கலந்துகொண்டபோது இதை உணர்ந்தேன். இது கத்திமேல் நடக்கும் முயற்சிதான்.
FLSP பற்றிய தெளிவான முடிவுகளுக்கு வருவதற்கும், அவர்களது உத்திகளும் முயற்சிகளும் வெற்றிகரமானவையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் இன்னும் 5 ஆண்டுகளேனும் காத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கணிப்பு.
அதுவரை காலத்தில் அவர்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ள்க்கூடிய இலங்கையின் இடதுசாரி அமைப்புகக்ளுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது.
தடம் மாறும் இடங்களில் அவர்களுடன் ஆக்கபூர்வமான காட்டமான விமர்சனங்களுடன் கலந்துரையாடுவது, அவர்களை நெறிப்படுத்துவது, அவர்களது நன்னோக்கங்களுக்கு எதிரான சதிகளைத் தனிமைப்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து நிற்பது போன்றன எல்லாம் சேர்ந்ததே அப்பொறுப்பு.
இலங்கையில் FLSP ஒரு பலம் வாய்ந்த அமைப்பு. புறக்கணித்துவிட்டுப் போகின்ற நிலையில் அது இல்லை என்பதே யதார்த்தம்.
--
FLSP
தொடர்பாக தொடர்ச்சியாக நண்பர்களோடு உரையாடி வருகிறேன். இப்போது கண்முன்னே
உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும் ஓர் அமைப்புப் பற்றிய முடிந்த
முடிவுகளுக்கு குறுகிய காலத்தினுள் வருவது கடினம். அரசியல் நிலைப்பாட்டில்
என்னோடு நெருக்கமான தோழர்களிடையே கூட மிகக்கடுமையான விவாதங்கள் இது தொடர்பாக நடைபெற்று வருகிறது.
தாசன்
சொன்னதுபோல JVP காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட முறை பற்றிய விமர்சனங்கள்,
அவரகளது அதிகாரபூர்வ அறிக்கைகள் எல்லாம் அவர்கள் மீது சந்தேகம்
கொள்வதற்குப் போதுமான ஆதாரங்களே.
ஆனால்
அதேவேளை, நடைமுறையில் அவர்களது செயற்பாடுகள் நம்பிக்கையூட்டுவனவாகவும்
அமைகின்றன. நெருங்கிப்பார்க்கும்போது அவர்கள் இனவாதத்துக்கு எதிராகச்
செயற்படுவதில் காட்டும் ஆர்வம் நம்பிக்கை ஊட்டுகிறது. அதிலுள்ள
நடைமுறைச்சிக்கல்களைக் கையாள வழிதேடித் தவிப்பதையும் காண முடிகிறது.
இவ்வாறான
அவதானங்கள் அவர்கள் பற்றிய முடிந்த முடிவான ஒரு நிலைப்பாட்டுக்கு என்னை
இட்டுச்செல்லவில்லை. இன்னமும் அவர்கள் தொடர்பான குழப்பமான பார்வையுடனேயே
நான் உள்ளேன்.
ஆயினும்
எனது முன்னைய பின்னூட்டங்களினூடாக நான் வலியுறுத்த முனைந்ததெல்லாம்
ஒரேயடியாகப் புறக்கணித்துவிடக்கூடிய சக்தியாக அவர்கள் இல்லை என்பதையே.
"ஐக்கிய இலங்கைக்குள் நான்கு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை
வழங்கும் அரசியல் தீர்வு; இடைக்காலத்தீர்வாக வழங்கப்படும் அதிகாரப்
பரவலாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு" எனும் இலங்கை தொடர்பான அரசியல்
நிலைப்பாட்டிலேயே இன்னமும் நான் உறுதியாக உள்ளேன்.
FLSP
உடனான எனது உரையாடல் இந்தத்தளத்திலிருந்தே நிகழும். இவ்வுரையாடல் அதற்கே
உரிய கடுமையுடன் நடைபெறும் வேளையில், அக்கட்சி சிங்கள பவுத்த இனவாதத்துக்கு
எதிராக செய்யும் செயற்பாடுகளை ஆதரிக்காமலிருந்தல் அரசியல் தவறாகவும்
முடிந்துவிடக்கூடும். ஏனெனில் அது நாம் செய்ய நினைக்கும்
வேலைத்திட்டங்களுள் ஒன்று.
சிங்கள
மக்களிடமிருந்து சிங்கள பவுத்த பேரினவாத மனநிலையைத் தனிமைப்படுத்தி
ஒழிப்பது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் மிக மிக முக்கியமான
பங்கினை வகிக்கிறது. அதனை செய்ய நினைக்கும் ஒர் அமைப்பின் செயற்பாடுகளை
எவ்வாறு ஒரேயடியாகத் தூக்கியெறிவது? யாழ்ப்பாணத்தில் கூடங்குளம்
போராட்டத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தினை NDMLP நடத்தியபோது TNA சார்பாளரான
பொ. ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அவர் சார்ந்திருக்கும் அரசியற் கட்சியின்
மக்கள் விரோதப்போக்குகளை வைத்துக்கொண்டு அவரை அங்கே வெளியேற்றுவது சரியா?
--
FLSP தொடர்பான முடிந்த முடிவுகளுக்கு வருவதற்கு இன்னமும் சில ஆண்டுகள் செல்லும் என்பதே என்னுடைய கருத்து.
அக்கட்சி
JVP போன்று ஓர் இனவாத அமைப்பாகக் குறுகித் தடம் மாறிப்போகலாம். ஆனால்
அப்படிப்போவதை நான் விரும்பவில்லை. அது எமக்குத்தான் தோல்வி. அப்படிப்போகாமல்
அதனைக் காப்பாற்றி சரியான தடத்தில் செலுத்த முயற்சிப்பது நல்லதா கூடாதா?
சிங்கள இனவாதத்துக்கு எதிராகச் செயற்படும் கட்சி ஒன்று தென்னிலங்கையில்
பலத்தோடு இருப்பது நல்லதா கூடாதா?
NDP
Front - சபா நாவலன் - அசோக் யோகன் - நாம் தமிழர் - தம்பையா என்று சுழலும்
அரசியல் விவாதச் சுழலினுள் FLSP ஆனது ஒரு நல்ல பந்தாகக் கையாளப்படுவதை நான்
உணர்கிறேன். புதிய ஜனநாயக (மா-லெ) கட்சியினையும் இதற்குள் இழுத்துவிட
முயல்கிறார்கள். இந்த அரசியல் விவாதச்சுழலில் எனக்கு ஆர்வமில்லை. அது
எமக்கு முந்திய ஒரு தலைமுறையின் பிரச்சினை. அதை அவர்களாகப்
பார்த்துக்கொண்டால்தான் உண்டு. இந்தச்சுழலின் விவாதங்களினூடகா இலங்கையின்
அரசியல் நடப்பைப் பார்க்கவேண்டிய இக்கட்டு எனக்கின்னும் நேரவில்லை.
இலங்கையிலுள்ள
எமது தலைமுறையின் இடதுசாரித் தோழர்கள் இவ்வாறான சவால்களையும், FLSP போன்ற
அரசியல் நிகழ்வுகளையும் தொடர்ச்சியான உரையாடலினூடாகவும் தொடர்ச்சியான
அவதானிப்பினூடாகவும் புரிந்துகொள்வதையே விரும்புகிறார்கள். அவர்களுடனான
கருத்தாடல் நம்பிக்கையும் உற்சாகமும் அளிப்பதாகவே இருந்துவருகிறது.
தொடக்கத்தில்
நான் இங்கு இட்ட பின்னூட்டத்தில் சொன்னதைப்போன்று, FLSP மீதான்
ஆக்கபூர்வமான கடுமையான விமர்சனங்கள் அவசியமானவை. அதில்
மாற்றுக்கருத்தில்லை.
உங்களுடைய இந்த விமர்சனம் FLSP, அதன் தோழமை அமைப்பான "சம உரிமை இயக்கம்" ஆகியவற்றைக் குறித்தே முன்வைக்கப்பட்டுள்ளது.
JVP இலிருந்து FLSP பிரிந்தபொழுது நானும் நான் சார்ந்துள்ள அமைப்புக்களும் அவர்களை JVP இன் ஒரு நீட்சியாகவே மட்டுக்கட்டினோம். அவர்கள் மீதான காட்டமான விமர்சனங்களையும் முன்வைத்தோம்.
காலவோட்டத்தில் அவர்களுடனான தொடர்பாடல் முன்னேற்றமடைந்தபோது அவர்களை முப்பரிமாணமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
இலங்கையின் பேரினவாத, இனப்பகைச் சூழலின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை மீதான புறச்சக்திகளின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வரட்டுத்தனமான தட்டையான அரசியற் கண்ணோட்டத்தினூடாக இம்மாதிரியான அரசியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது சிரமம்.
தென்னிலங்கையில் இனவாதத்துக்கு எதிராகவும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் எழுந்த குரல்கள் அமைப்புக்கள் யாவும் வேரடி மண்ணோடு ஒழிக்கப்பட்டமை தான் வரலாறு. தமிழ் முஸ்லிம் அரசியல் அமைப்புக்கள் கூட அந்தளவு மூர்க்கமாக அழித்தொழிக்கப்படவில்லை.
இவ்வாறாக சிறு துளிர்ப்பையும் சகித்துக்கொள்ளாத பேரினவாத ஆட்சியில், இருந்த வெற்றிடத்தில் FLSP என்பது ஒரு முக்கியமான நிகழ்வு.
இதுவரை காலமும் இனவாதத்துக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் எதிராக எழுந்த தென்னிலங்கைக் குரல்கள் பலவீனமானவை. மிகவும் சிறியவை.
FLSP என்பது மிகப்பெரியது. ஏறத்தாழ 8000 உறுப்பினர்களும் 400 முழுநேர ஊழியர்களும் மிகப்பலமான மாணவர் அமைப்புக்களும் கொண்ட பருமையான சக்தி அது.
இனவாதத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான கருத்தியலை, செயற்பாடுகளை Mainstream இற்க்குக் கொண்டுவரக்கூடிய தகைமையும் அதற்குத்தான் உண்டு. இன்னொரு பருமையான சக்தியாக இருந்த விடுதலைப்புலிகளால் கூட "தமிழீழ" நல்ன்களுக்கு அப்பால் போய் குரல்கொடுக்க முடிந்ததில்லை.
இலங்கையின் அரசியற் சூழலை நுணுக்கமாக அவதானித்துப் புரிந்துகொண்டவாறு ஒரு "சோசலிச" அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் கைக்கொள்ளும் உத்திகள் ஆர்வமூட்டுகின்றன.
அடிப்படையான கோரிக்களை முன்வைத்துப் பரந்துபட்ட ஐக்கிய முன்னணிகளைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது புரிகிறது.
சம உரிமை இயக்கத்தின் கூட்டங்களில் கலந்துகொண்டபோது இதை உணர்ந்தேன். இது கத்திமேல் நடக்கும் முயற்சிதான்.
FLSP பற்றிய தெளிவான முடிவுகளுக்கு வருவதற்கும், அவர்களது உத்திகளும் முயற்சிகளும் வெற்றிகரமானவையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் இன்னும் 5 ஆண்டுகளேனும் காத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கணிப்பு.
அதுவரை காலத்தில் அவர்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ள்க்கூடிய இலங்கையின் இடதுசாரி அமைப்புகக்ளுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது.
தடம் மாறும் இடங்களில் அவர்களுடன் ஆக்கபூர்வமான காட்டமான விமர்சனங்களுடன் கலந்துரையாடுவது, அவர்களை நெறிப்படுத்துவது, அவர்களது நன்னோக்கங்களுக்கு எதிரான சதிகளைத் தனிமைப்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து நிற்பது போன்றன எல்லாம் சேர்ந்ததே அப்பொறுப்பு.
இலங்கையில் FLSP ஒரு பலம் வாய்ந்த அமைப்பு. புறக்கணித்துவிட்டுப் போகின்ற நிலையில் அது இல்லை என்பதே யதார்த்தம்.
FLSP தொடர்பாக தொடர்ச்சியாக நண்பர்களோடு உரையாடி வருகிறேன். இப்போது கண்முன்னே உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும் ஓர் அமைப்புப் பற்றிய முடிந்த முடிவுகளுக்கு குறுகிய காலத்தினுள் வருவது கடினம். அரசியல் நிலைப்பாட்டில் என்னோடு நெருக்கமான தோழர்களிடையே கூட மிகக்கடுமையான விவாதங்கள் இது தொடர்பாக நடைபெற்று வருகிறது.
தாசன் சொன்னதுபோல JVP காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட முறை பற்றிய விமர்சனங்கள், அவரகளது அதிகாரபூர்வ அறிக்கைகள் எல்லாம் அவர்கள் மீது சந்தேகம் கொள்வதற்குப் போதுமான ஆதாரங்களே.
ஆனால் அதேவேளை, நடைமுறையில் அவர்களது செயற்பாடுகள் நம்பிக்கையூட்டுவனவாகவும் அமைகின்றன. நெருங்கிப்பார்க்கும்போது அவர்கள் இனவாதத்துக்கு எதிராகச் செயற்படுவதில் காட்டும் ஆர்வம் நம்பிக்கை ஊட்டுகிறது. அதிலுள்ள நடைமுறைச்சிக்கல்களைக் கையாள வழிதேடித் தவிப்பதையும் காண முடிகிறது.
இவ்வாறான அவதானங்கள் அவர்கள் பற்றிய முடிந்த முடிவான ஒரு நிலைப்பாட்டுக்கு என்னை இட்டுச்செல்லவில்லை. இன்னமும் அவர்கள் தொடர்பான குழப்பமான பார்வையுடனேயே நான் உள்ளேன்.
ஆயினும் எனது முன்னைய பின்னூட்டங்களினூடாக நான் வலியுறுத்த முனைந்ததெல்லாம் ஒரேயடியாகப் புறக்கணித்துவிடக்கூடிய சக்தியாக அவர்கள் இல்லை என்பதையே. "ஐக்கிய இலங்கைக்குள் நான்கு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கும் அரசியல் தீர்வு; இடைக்காலத்தீர்வாக வழங்கப்படும் அதிகாரப் பரவலாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு" எனும் இலங்கை தொடர்பான அரசியல் நிலைப்பாட்டிலேயே இன்னமும் நான் உறுதியாக உள்ளேன்.
FLSP உடனான எனது உரையாடல் இந்தத்தளத்திலிருந்தே நிகழும். இவ்வுரையாடல் அதற்கே உரிய கடுமையுடன் நடைபெறும் வேளையில், அக்கட்சி சிங்கள பவுத்த இனவாதத்துக்கு எதிராக செய்யும் செயற்பாடுகளை ஆதரிக்காமலிருந்தல் அரசியல் தவறாகவும் முடிந்துவிடக்கூடும். ஏனெனில் அது நாம் செய்ய நினைக்கும் வேலைத்திட்டங்களுள் ஒன்று.
சிங்கள மக்களிடமிருந்து சிங்கள பவுத்த பேரினவாத மனநிலையைத் தனிமைப்படுத்தி ஒழிப்பது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் மிக மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அதனை செய்ய நினைக்கும் ஒர் அமைப்பின் செயற்பாடுகளை எவ்வாறு ஒரேயடியாகத் தூக்கியெறிவது? யாழ்ப்பாணத்தில் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தினை NDMLP நடத்தியபோது TNA சார்பாளரான பொ. ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அவர் சார்ந்திருக்கும் அரசியற் கட்சியின் மக்கள் விரோதப்போக்குகளை வைத்துக்கொண்டு அவரை அங்கே வெளியேற்றுவது சரியா?
அக்கட்சி JVP போன்று ஓர் இனவாத அமைப்பாகக் குறுகித் தடம் மாறிப்போகலாம். ஆனால் அப்படிப்போவதை நான் விரும்பவில்லை. அது எமக்குத்தான் தோல்வி. அப்படிப்போகாமல் அதனைக் காப்பாற்றி சரியான தடத்தில் செலுத்த முயற்சிப்பது நல்லதா கூடாதா? சிங்கள இனவாதத்துக்கு எதிராகச் செயற்படும் கட்சி ஒன்று தென்னிலங்கையில் பலத்தோடு இருப்பது நல்லதா கூடாதா?
NDP Front - சபா நாவலன் - அசோக் யோகன் - நாம் தமிழர் - தம்பையா என்று சுழலும் அரசியல் விவாதச் சுழலினுள் FLSP ஆனது ஒரு நல்ல பந்தாகக் கையாளப்படுவதை நான் உணர்கிறேன். புதிய ஜனநாயக (மா-லெ) கட்சியினையும் இதற்குள் இழுத்துவிட முயல்கிறார்கள். இந்த அரசியல் விவாதச்சுழலில் எனக்கு ஆர்வமில்லை. அது எமக்கு முந்திய ஒரு தலைமுறையின் பிரச்சினை. அதை அவர்களாகப் பார்த்துக்கொண்டால்தான் உண்டு. இந்தச்சுழலின் விவாதங்களினூடகா இலங்கையின் அரசியல் நடப்பைப் பார்க்கவேண்டிய இக்கட்டு எனக்கின்னும் நேரவில்லை.
இலங்கையிலுள்ள எமது தலைமுறையின் இடதுசாரித் தோழர்கள் இவ்வாறான சவால்களையும், FLSP போன்ற அரசியல் நிகழ்வுகளையும் தொடர்ச்சியான உரையாடலினூடாகவும் தொடர்ச்சியான அவதானிப்பினூடாகவும் புரிந்துகொள்வதையே விரும்புகிறார்கள். அவர்களுடனான கருத்தாடல் நம்பிக்கையும் உற்சாகமும் அளிப்பதாகவே இருந்துவருகிறது.
No comments:
Post a Comment