Saturday, September 22, 2012

கூடங்குளம் கட்டுக்கதைகள்

கூடங்குளம் போராளிகளிடம் தோற்றுவிடும் பயத்திலிருக்கும் அதிகார வர்க்கம் அப்போராட்டத்தை மலினப்படுத்தி வீரியமிழக்கச்செய்யும் வகையிலும் அப்போராட்டத்துக்கான மக்களாதரவினை முடிந்தளவு குறைக்கும் வகையிலும் பல்வேறு கட்டுக்கதைகளைப் பரப்பிவௌர்கிறது.

அம்மக்கள் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு இப்போது ஏன் போராடுகிறார்கள் என்ற கேள்வி இப்போது உருவாக்கப்பட்டு உலாவ விடப்பட்டுள்ளது. எனது fb நட்புக்கள் சிலர் கூட இந்தக்

கேள்வியைக் கேட்கத்தொடங்கியுள்ளார்கள்.

மக்களது இந்தப்போராட்டம் என்பது தமிழர்களுக்கானதோ, தமிழகத்துக்கானதோ, இந்தியாவுக்கானதோ, ஏன் அணு உலைக்கெதிரானதோ கூட அல்ல. இது மனித குலத்திற்கானது. ஒட்டுமொத்த உலகின் எதிர்காலச் சந்ததிகளுக்கானது.

மக்கள் போராட்டம் பற்றிய தெளிவு உள்ளவர்களுக்கு இது புரியும்.

இங்கே நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு, மக்களின் பக்கம் சாய்வதா, எதிரியின் பக்கம் சாய்வதா என்பதுதான்.

இப்போராட்டத்துக்கு நேரடிப் பங்களிப்பு வழங்க முடியாவிட்டாலும், கருத்தளவிலாவது வலிமையான ஆதரவை வழங்குவது உயிர்களை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
 
 
உரையாடல் :

Ceylon Illaikai இதில் கொடுமை என்னவென்றால் மார்க்சீயம் பேசிக் கொண்டே அணுஉலையை ஆதரிக்கின்றார்கள்.
கதிரிக்க வீச்சுக்கு எதுவும் தப்ப முடியாது ஒன்று ஒரு சிறு அறிவும் இவர்களுக்கே ஏறவில்லை என்றால் சாமானிய மக்களை நினைத்துப் பார்க்கையில் இவர்களை விட சாமானியர்கள் எவ்வளவே மேல்.
 
 
Nishenthaharan Balachandran மக்களின் பக்கமா எதிரியின் பக்கமா என்று சொல்வதன் மூலம் எதிரி என்கிற ஒரு நிலைப்பாட்டை வாசகர் மீது தெனிக்க முயலுகிறீர்கள்.

எப்போதும் மக்கள் கூட்டுச்சேர்ந்து எதிர்ப்பது போராட்டங்கள் என்கிற சித்தாந்தம் பல கலவரங்களை இன்று வரை நியாயப்படுத்தி, குறைந்தபட்சம் இழைக்கப்பட்டது அநீதி என்பதை கூட மறுத்து தமது போராட்டத்தின் வீர வரலாற்றை(!?) சந்தததிக்கு சொல்லும், மக்கள் போராட்டத்தை ஆதரிக்க வேறு வேண்டுமா?

உலகிலேயே கூடங்குளம் மட்டும் தானா அணு உலை அமைத்து இருக்கின்றார்கள் ?
 
Muralitharan Mauran /எதிரி என்கிற ஒரு நிலைப்பாட்டை வாசகர் மீது தெனிக்க முயலுகிறீர்கள். /

மக்களோடு கலந்தாலோசிக்காமல் மக்களது வாழ்வாதாரத்துடன் விளையாடிவிட்டு, மக்களுக்குச் சொல்லாமல் அவர்களை நாசமறுக்கும் ஒப்பந்தங்களை பன்னாட்டுக் கம்பனிகளுடன் போட்டுவிட்டு, மக்கள் அதைத் தட்டிக்கேட்க முனையும்போது காவல் துறையை ஏவித் தாக்கும் அரசும் அணு உலை மாஃபியாவும் மக்களின் எதிரிகள் என்பதை நான் துணிந்து சொல்லக்கூடாதா?
 
 
/எப்போதும் மக்கள் கூட்டுச்சேர்ந்து எதிர்ப்பது போராட்டங்கள் என்கிற சித்தாந்தம் பல கலவரங்களை இன்று வரை நியாயப்படுத்தி/

கலவரங்களுக்கும் மக்கள் போராட்டங்களுக்கும் வேறுபாடில்லையா?

கூட
ங்குளத்தில்
காடையர் கூட்டம் ஒன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தியதா?
காடையர் கூட்டமொன்று காவல் துறையைத் தாக்கியதா?
மக்கள் கூட்டமொன்று வெறிகொண்டு இன்னொரு மக்கள் கூட்டத்தினைத் தாக்கியதா?
மக்கள் கூட்டமொன்று தன்மனிதர்களை நியாயமற்றுத் தாக்கியதா?

தம்முள் இருக்கும் ஏற்றதாழ்வுகளைக் கடந்து, ஒன்றுபட்டு, நேர்மையான வழியில், தார்மீக அடிப்படையில், வலுவான காரணங்களோடு ஒரு மக்கள் கூட்டம் நன்கறியப்பட்ட எதிரியான இந்திய அதிகார வர்க்கத்துடன் மோதுகிறது.

இதைத்தான் மக்கள் போராட்டம் என்பது.

அதிகார வர்க்கத்தோடு மக்கள் மோதும் போராட்டம்.

இவாறான போராட்டங்களில் நாம் எந்தப்பக்கம் சாய்வது?
 
 

Muralitharan Mauran மனிதர்களுக்கிடையிலான ஏற்றதாழ்வுகளை முதன்மைப்படுத்தாத, இன்னொரு மனித கூட்டத்தின் மீதான வன்முறையாக அமையாத, நியாயத்தின் பாற்பட்ட தன்னெழுச்சியான மக்களது போராட்டங்கள், அவை அதிகார வர்க்கத்துக்கு எதிரானதாக இருக்கும்பட்சத்தில் ஆதரிக்கப்படவேண்டியவையே. அவை இந்த உலகை முன்னோக்கி நகர்த்தும் வல்லமை கொண்டவை.
 
 
 Muralitharan Mauran /உலகிலேயே கூடங்குளம் மட்டும் தானா அணு உலை அமைத்து இருக்கின்றார்கள் ?/

உலகம் பூராகவும் அணு உலை வெடிப்புக்களும் கசிவுகளும் போதுமானளவு பயங்கரங்களை செய்துதான் காட்டியிருக்கின்றன.

உல
கம் பூராகவும் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜேர்மனி தன் அணு உலைகளை மூடிக்கொண்டிருக்கிறது. ஜப்பான் தன் அணு உலைகளைக் குறைக்க முயற்சிக்கிறது.

இதுவெல்லாம் அணு உலைகளுக்கு எதிரான மக்கள்

No comments:

Post a Comment