Saturday, September 22, 2012

வர்க்கக் கட்சி

இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்ட உரையாடல் "வர்க்கக் கட்சி" என்ற சொல்லின் பொருள் ஆழத்தினை எனக்குப் புரிய வைத்தது. இதுவரை காலமும் இந்தச்சொல்லைப் பயன்படுத்த எனக்குள் மிக நுண்ணியதான ஓர் இனம்புரியாத தயக்கம் இருந்தே வந்தது. அதற்குக் காரணம் "வர்க்க சார்பு" என்பதன் உள்ளார்ந்த பொருள் எனக்கு சரியாகப் புரியாமல் இருந்ததே.



க்களுக்கான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சி ஏன் மற்றெவரையும் விட தொழிலாளர் வர்க்கத்தினைச் சார்ந்ததாக, தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் சாய்வுடையதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி என்னுள் நீண்ட நாட்களாக வெவ்வேறு ஆழங்களில் இருந்து வந்த ஒன்றே.

எம்மைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கான அடிப்படைக்காரணமாக இந்த உலகின் உற்பத்தி உறவுகளும் பொருளாதார அமைப்புமே இருக்கிறது என்பது மார்க்சிய ஆய்வுத்துணிபாகும்.

அதிலும் இன்றுள்ள கட்டகத்தினது(System) பிரதான முரண்பாடாக, மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையில் இருக்கிற முரண்பாட்டையே அது முன்வைக்கிறது. அதாவது மூலதனம் உழைப்பைச் சுரண்டுகிற நிலை காரணமாக மூலதனத்தை வைத்திருப்பவருடன் உழைப்பை வைத்திருப்பவர் கொண்டுள்ள முரண்பாடு)

இந்த முரண்பாடு முற்றி வெடிக்குமானால், அதில் உழைப்பை வைத்திருக்கும் பக்கம் வெற்றியடையுமானால் அவ்வெற்றி இந்த உலகின் இன்றைய கட்டகத்தை (System) மாற்றியமைக்கும்.

எனவே இந்த முரண்பாட்டில் நாம் உழைப்பின் பக்கம் சார்பு நிலை எடுக்க வேண்டியதாயுள்ளது. ஏனெனில் நாம் இந்தக் கட்டகத்தை உடைத்து உலகை மாற்ற விரும்புகிறோம்.

இந்த முரண்பாட்டின் பிரதான எதிர்முனையாக இருக்கும் தொழிலாளி வர்க்கமே உணர்வு பூர்வமாகவும் ஈடுபாட்டோடும் இந்த வர்க்கச்சண்டையில் பங்குபெறக்கூடியது என்பதே யதார்த்தமாகும்.


எனதிந்தப் புரிதல் போதாமலிருந்தால் என்னைத் திருத்தி உதவவும்.



Singam Vaithlingam இதில் என் அபிப்பிராயம்...நீங்கள் சொல்வது சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையானது. இதில் எம் வேலை..இதை எம் நாட்டின் உண்மை நிலைமகளுக்கு ஏற்ப பிரயோகிப்பது. இப்பிரயோகிப்பானது எம் நாட்டின் சமூக சக்திகளுக்கு (வர்க்கம்) ஏற்ப அமையவேண்டும். முதலில் எம்நாட்டின் வர்க்க சக்திகள் பற்றி சமகாலத்தின் துல்லிய கணிப்பீடுகள் தேவை! இதுவன்றி சமூக மாற்றம் பற்றி சிந்திக்க முடியாது. வர்க்க சக்திகள் பற்றிய கடந்தகால ஆய்வுகள் (மூன்றுதசாப்த யுத்த்தின் பின்னான) பற்றிய மீளாய்வுகள் தேவை.
 
 
Krishnamurthi Ganesan எனக்கெனவோ அப்படிப் புரட்சி நடந்தாலும், தற்போதைய தொழிலாளி வர்க்கம் முதலாளிகளாகப் பரிமாணம் கொண்டு, புதிய தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் என்றே தோன்றுகிறது. அப்புறம் மீண்டும் ஒரு புரட்சி.
 
 
Muralitharan Mauran Singam Vaithlingam நீங்கள் சொல்வது சரியே. இலங்கையின் வர்க்க, பொருளாதார, முரண்பாட்டு நிலைமைகள் குறித்து விரிவானதும் தொடர்ச்சியானதுமான ஆய்வுகளை நாம் செய்தாகவேண்டும்.
 
 
Muralitharan Mauran Krishnamurthi Ganesan வர்க்கப்புரட்சியின் விளைவாகத்தோன்றும் புதிய நிலைமை என்பது மூலதனம் உழைப்பினைச்சுரண்டுகிற நிலையை ஒழித்துவிடும் என்பதுதான் கொள்கை. மூலதனத்தின் சுரண்டும் சுதந்திரம் ஒழிக்கப்பட்டுவிடும் என்பது.

ஆனால் புதிய நிலைமையில் வேறு புதிய முரண்பாடுகளும் பிரச்சினைகளும் தோன்றும். அந்த முரண்பாடுகளைக் களைவதற்கான போராட்டங்களும் புரட்சிகளும் தேவைப்படும்.

முரண்பாடுகள் என்றுமே ஓய்வதில்லை; தீர்வதில்லை. முரண்பாடுகள் மோதி, புரட்சிகர மாற்றம் ஏற்பட்டு புதியநி லைமை தோன்றும். மறுபடி புதிய முரண்பாடுகள் மோதும். இதுதான் மார்க்சிசத்தின் மெய்யியல் அடிப்படை.
 
 
Singam Vaithlingam "புதிய நிலைமையில் வேறு புதிய முரண்பாடுகளும் பிரச்சினைகளும் தோன்றும். அந்த முரண்பாடுகளைக் களைவதற்கான போராட்டங்களும் புரட்சிகளும் தேவைப்படும்."
உங்களின் கூற்று முற்றிலும் சரியானதே. "சமூக இயக்கமே" முரண்பாடுகள்தான் என்கின்றார். ஏங்கெல்ஸ். இவைகள் பண்புகளால் வேறுபடும்; எதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருந்தால் அதில் ஒன்று தலைமைப் பாத்திரம் வகிக்கும். ஆனால் அதுதான் நிரந்தரமாகிவிடும் என்பதல்ல. இந்நிலை கொண்டு எம்நாட்டு நிலவரங்களை கணிக்கவேண்டும்; செயற்படவேண்டும்! இதுதான் வாழும் நடைமுறை மாக்சிஸம்! நல்ல உரையாடல் தொடர்வோம்!
 
 
 
 
 
 
  

No comments:

Post a Comment