அவர்
அந்த ஊரின் பெரிய வட்டிக்கடைக்காரர். நகை அடகு வைப்பது, வட்டிக்குக் கடன்
வாங்குவதென்று அவ்வூர் மக்கள் அனைவரும் நாடுகின்ற ஒரே நபர் அவர்தான்.
அவரிடம் ஏராளமான செல்வம் புரண்டது. பணத்தைப் பதுக்கிப் பூட்டி வைப்பதிலும்
கெட்டிக்கரர் அவர்.
ஒரு நாள் அவர் பணப்பெட்டியுடன் ஆற்றைக் கடந்து அக்கரை செல்லவேண்டியதாக இருந்தது. ஆற்றிலோ கடும் வெள்ளம். அடைமழைக்காலம்.
தங்க நகைகளும் பணமும் நிரம்பிய பெரிய கனமான பெட்டி ஒன்றையும் கையில் வைத்திருந்தார். நான்கைந்து பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்ட இரும்புப் பெட்டி அது.
ஆற்றைக்கடந்து படகில் போகும்போது ஆற்று வெள்ளத்தில் படகு அலைக்கழிந்தது.
திடீரெனப்பெருகிய பெரும் வெள்ளத்தில் படகு சரிந்து கவிழ்ந்து பின் நிலை
மீண்டது. அனைவரும் உயிர்தப்பியதை எண்ணி மகிழ்ச்சிக் கூச்சல்
போட்டுக்கொண்டிருந்தார்கள்.
நம் வட்டிக்கடைக்காரும் நல்ல மகிழ்ச்சியாக இருந்தார். படகில் இருந்த மற்றவர்களுக்கு வியப்பாய்ப் போய்விட்டது.
"ஐயா, உங்களுடைய பெட்டிதான் ஆற்றோடு போய்விட்டதே, அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்கள்.
ஐயா மகிழ்ச்சி பொங்கச் சொன்னார், ,
"திறப்பு என்னிடம் தானே இருக்கிறது?"
No comments:
Post a Comment