Wednesday, January 8, 2014

கடவுட்துணியின் பின்னல்கள் அவிழும்போது கவிதைகள் பிறக்கின்றன




இந்தச் சிவன் படம் பலநூறாண்டுகால ஆன்மீக வரலாற்று அலைக்கழிவை மனதினுள் சொட்டிச் சென்றது.
சுடலையில் ஆடும் பிணந்தின்னிச் சிவனின் உருவம் எம் மனிதர்களது வரலாற்றின் நுண்ணிய பக்கங்களுக்குள் மனதைக்கொண்டு செலுத்த வல்லது.
சிவன் என்று இன்று "இந்துக்" காரர்களால் மதம் மாற்றி உள்வாங்கப்பட்ட சாமி ஒன்றல்ல. பல.

குறிப்பாக இந்தச் சுடலைச்சிவனின் உருவம் மானிடவியல் ரீதியாக ஆர்வத்தைப் பெருக்குவது.


சுடலையில், மனிதப் பிணமெரிந்த சாம்பலைப்பூசிக்கொண்டு மண்டையோட்டுடனும் பாம்புகளுடனும் ஆழ்மனதைச் சுண்டும் உடுக்கொலியுடனும் இறுகித்திடமான உடலுடனும் மனித எலும்புகளுடனும் இருளில் வரும் கரிய சாமி என்கிற கற்பனை ஒரு மனிதக்கூட்டத்தின் எண்ணங்களின் வரலாற்றினைக் கற்பவர்களுக்கு பென்னம்பெரும் புதையல்.

கபாலிகம் போன்ற இந்தியச் சிறுசமயங்களுக்கும் இந்தச் சுடலைச்சிவனுக்கும் என்ன தொடர்பு என்று தேட வேண்டும்.

சுடலை மாடனுக்கும் சிவனுக்குமான தொடர்பு என்ன என்று நான் தேடி வருகிறேன்.

சாமிகளை மனிதர்கள் ஒரே நாளில் படைப்பதில்லை. ஆயிரக்கணக்கான் ஆண்டுகள் எடுத்து ஆறுதலாக பல்லாயிரக்கணக்கான சாமிகளை மனிதர் படைக்கிறார்கள்.

படைக்கும்போது அச்சாமிகளில் தங்களை, தங்கள் உள்ளத்தினைப் பொதிந்து வைக்கிறார்கள்.

சாமிகளை decode பண்ணுகிறபோது ஒரு கவிதையைப்படிக்கும் இன்பம் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment